“திமுக-வை வீழ்த்த வேண்டும் என்ற லட்சியத்தை விட, தன் கட்சிக்காரர் வளர்ந்துவிடக்கூடாது” என்கிற முன்னாள் அமைச்சர் ஒருவரின் ‘குள்ளநரித் தன’ நடுக்கமே அதிமுக நிர்வாகி ஒருவருக்கு சீட் மறுக்கப்பட்டது. தற்போது எடுத்துக் கொண்ட செல்ஃபியால் வெட்டவெளிச்சமாகி உள்ளது.

அரசியல் என்பது கொள்கைக்கான களம் என்பதைத் தாண்டி, இன்று அது ‘நயவஞ்சகத்தின் சதுரங்கமாக’ மாறி நிற்பது வேதனை. குறிப்பாக, திருப்பத்தூர் மண்ணில் இந்த தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களாக அரங்கேறி வந்த நிகழ்வுகள், உண்மையாக உழைத்த அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் திருப்பதியின் இருபது ஆண்டுகால உழைப்புக்கும் அந்த கட்சி தொண்டர்களுக்கும், நிர்வாகிக்கும் இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி என கொந்தளிக்கிறார்கள் அதிமுகவினர்.

மக்களின் நன்மதிப்பு, தொகுதி முழுமைக்கும் பரவியிருக்கும் நற்பெயர் என அனைத்தையும் ஒரு கணம் கூட யோசிக்காமல், ‘தன்னல அரசியல்’ எனும் பலிபீடத்தில் ஏற்றிய அதிமுக தலைமைக்கும், அதன் பின்னணியில் இருந்த உள்ளூர் புள்ளிகளுக்கும் திருப்பத்தூர் மக்கள் உரிய பாடம் கற்பிக்கப்பட்டதாக குமுறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

டாக்டர் என். திருப்பதி… இந்த பெயர் திருப்பத்தூர் தெற்கு ஒன்றியத்தில் வெறும் அரசியல் அடையாளமட்டுமல்ல; அது கடந்த 40 ஆண்டுகளாக மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்த ஓர் ஆளுமை. முன்பு அதிமுக வசமிருந்த இந்த தொகுதியை மீண்டும் மீட்பதற்காக, கடந்த ஐந்து ஆண்டுகளாக இரவு, பகல் பாராமல் டாக்டர்.திருப்பதி ஆற்றிய களப்பணிகள் ஊர் அறிந்த ரகசியம். திமுக-வின் கோட்டை என்று சொல்லப்படும் திருப்பத்தூரில், அவர்களின் செல்வாக்கைச் சிதைக்கக்கூடிய ஒரே வேட்பாளராக அவரே என பல நிர்வாகிகள் கடந்த ஏழு மாதங்களாக முன்மொழிந்தார்கள்.

அவரை விட்டால் வெற்றிக்கு வேறு வாய்ப்பே இல்லை என ஊடகங்களும் உண்மையை ஓங்க்கி உரைத்தன. இதனை பார்த்து வெளவெளத்துப்போன அவரது பங்காளியும், திமுக முன்னாள் எம்எல்ஏவுமான நல்லத்தம்பி சீட்டே வேண்டாம் என்கிற முடிவிற்கே வந்தார். இந்நிலையில் திருப்பதியின் அரசியல் பங்காளியாக அரிதாரம் பூசி வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணி , அவரது சொகுசு ஓட்டலில் திமுகவின் நல்லதம்பியை நேரில் சந்தித்து, ”நீதான் திமுகவில் வேட்பாளர். ஆனால் எங்கள் கூட்டணியில் ஒரு டம்மி வேட்பாளர் வருவார். அதுவும் ஆட்களே இல்லாத கட்சியின் கூட்டணி வேட்பாளரவர்” என தேற்றி செல்ஃபி எடுத்து அனுப்பி வைத்திருக்கிறார். “நல்லதம்பி – வீரமணி” அண்டர் டீலிங் அமைத்து எடுத்துக் கொண்ட அந்த புகைப்படம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

எம்.பி., தம்பிதுரை முதல், அதிமுக தலைமை வரை அனைவரும் டாக்டர். திருப்பதியையே வேட்பாளராக ‘டிக்’ அடித்து வைத்திருந்தனர். இருந்தும், கடைசி நேரத்தில் நடந்த அந்த ‘அரசியல் பேரத்தின்’ பின்னணியில் எடுத்துக் கொண்ட இந்த புகப்படம் சிக்கி ரத்தத்தின் ரத்தங்களை சூடேற்றி வருகிறது.

இதுகுறித்து விவரமறிந்தவர்கள், “‘திமுக-வை வீழ்த்த வேண்டும் என்ற லட்சியத்தைவிட, தன் கட்சிக்காரரே வளர்ந்துவிடக்கூடாது என்கிற கே.சி.வீரமணியின் ‘குள்ளநரித் தனமான’ பயமே திருப்பதிக்கே நாமம் போடக்காரணம் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. வீரமணியின் நிழல் யுத்தத்திற்கும், தன் செல்வாக்குக்குச் சவாலாக யாரும் வந்துவிடக் கூடாது என்ற குறுகிய மனப்பான்மையும், ஒரு தகுதியான வேட்பாளரை தலைமையும் தள்ளி வைத்திருக்கிறது‌.

இது டாக்டர் திருப்பதிக்கு இழைக்கப்பட்ட துரோகமட்டுமல்ல, திருப்பத்தூர் அதிமுக தொண்டர்களின் நம்பிக்கையின் மீது வீசப்பட்ட நெருப்பு. அதனால்தான், தேர்தல் அலுவலகத்தின் முன்னே தொண்டர்கள் கதறியழுததும், ஒருவர் தீக்குளிக்க முயன்றதும் ஆவேசத்தின் உச்சமாக அமைந்தது.

அதிமுக – அமமுக இடையேயான மோதல் “எங்களுக்குள் இருப்பது வெறும் பங்காளி சண்டைதான்; விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை” என மேடைக்கு வேண்டுமானால் இனிப்பாக இருக்கலாம். ஆனால், களத்தில் உயிரைக் கொடுத்து உழைத்த “டாக்டர் திருப்பதி” போன்ற நிர்வாகிகளை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, தொகுதியைத் அமமுகவுக்கு தாரை வார்த்தது எந்த விதத்தில் நியாயம்? திருப்பதி – நல்லத்தம்பி இருவரும் உண்மையான பங்காளிகள்தான்.
“எங்களுக்குள் ஒற்றுமை வந்துவிட்டது” என்று எடப்பாடியும், டிடிவியும் சொல்வது, பல ஆண்டுகளாகக் கட்சிக்காக ரத்தம் சிந்திய தொண்டர்களின் முதுகில் குத்துவதற்குச் சமம். அந்த பங்காளிகள் ஒன்று சேர்ந்துவிட்டு இந்த பங்காளிகளை மோதவிடாமல் அமமுக-வுக்குத் தாரை வார்த்ததின் மூலம், அதிமுக இந்தத் தொகுதியில் போட்டியிடாமலேயே சரணடைய வைத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் வீரமணி.

இந்தத் துரோகத்தைச் சகித்துக்கொண்டு மௌனமாக இருக்க டாக்டர். திருப்பதி ஒன்றும் முதுகெலும்பில்லாத அரசியல்வாதியல்ல. துரோகம் இழைக்கப்பட்ட இடத்தில் நீதி கிடைக்காது என்பதை உணர்ந்த அவர், மாற்றத்தின் அடையாளமாகத் திகழும் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டு தன் பங்காளியோடு களம் கண்டது காலத்தின் கட்டாயம். விஜயும், டாக்டர்.திருப்பதியின் உழைப்பையும், மக்கள் செல்வாக்கையும் சரியாகக் கணித்து அவருக்கு வாய்ப்பளித்தது திருப்பத்தூர் அரசியலில் ஒரு புதிய விடியலை ஏற்படுத்தியிருக்கிறது.

நடைபெற்ற தேர்தலில் திருப்பத்தூர் தொகுதி முக்கோணப் போட்டியிலில்லை. பங்காளிகளுக்கான போட்டியுமில்லை… அது ‘உண்மைக்கும், துரோகத்திற்கும்’ இடையிலான போர். ஒருபுறம், இரண்டு முறை வென்றும் அமைச்சராக முடியவில்லையே என்ற ஏக்கத்திலேயே இருக்கும் திமுக நல்லத்தம்பி. மறுபுறம், சொந்தக் கட்சி வேட்பாளரே தனக்கு எதிராக வந்துவிட கூடாது என தடுத்த முன்னாள் அமைச்சர் வீரமணி இருவரின் உள்ளடி வேலைகளுக்கு நடுவே, ‘மக்களுக்காக உழைக்க வேண்டும்’ என்ற ஒற்றை இலக்கோடு தவெகவில் இனைந்து களம் காண்டார் திருப்பதி.

மக்களிடம் திருப்பதிக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அதிமுகவினரும், திமுகவினரும் இப்போது திகிலடைந்து போயிருக்கிறார்கள். காரணம், டாக்டர் திருப்பதிக்கு இருக்கும் பணபலம், அதே ஆள்பலம், சாதி ரீதியான செல்வாக்கோடு தவெக-வின் இளைஞர் பட்டாளமும் கைக்கோர்த்து அந்த இருவருக்கும் பயத்தை காட்டியிருக்கிறார். மூன்றாவது முறையாக ஜெயிச்சா கண்டிப்பா அமைச்சர்” எனப் பகல் கனவு காணும் திமுக நல்லத்தம்பிக்கும், துரோகத்தின் உருவமான அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் திருப்பதியின் தவெக பிரவேசம் ஒரு சிம்மசொப்பனமாக மாறியிருக்கிறது. திருப்பதி வெற்றி பெற்று விஜய் அமைச்சரவையில் அமைச்சராகி திருப்பத்தூருக்கே திருப்பம் கொடுப்பார் என்பதில் ஆச்சரியமில்லை.

அரசியலில் ஒருவரை ஏமாற்றலாம், ஆனால் ஒட்டுமொத்த தொகுதியையும் ஏமாற்ற முடியாது. வீரமணியின் சுயநலனுக்காக அதிமுக தலைமை செய்த அந்த வரலாற்றுப் பிழை, இன்று தவெக-வுக்குப் பெரும் பலமாக மாறியிருக்கிறது. நம்ப வைத்து ஏமாற்றியவர்களுக்குப் பாடமும், நம்பி வாய்ப்பளித்த விஜய்க்கு வெற்றியையும் பரிசளிக்க இருக்கிறார்கள் திருப்பதியும் திருப்பத்தூர் மக்களும்” என்றனர்.

டாக்டர் திருப்பதி, திருப்பத்தூர் மக்களின் மனச்சாட்சி. இரட்டை இலை சினத்திற்கு வாக்களிக்க இருந்தவர்கள் குக்கரை மறந்து விசிலுக்கு வாகாகளித்திருக்கிறார்கள். விஜய்யையும் தாண்டி திருப்பதிக்காக வாக்களித்தோர் அனைத்து கட்சியினரும் இடில் அடக்கம். இந்த தேர்தலில் அவர் பெற்ற ஒவ்வொரு வாக்கும், அரசியல் துரோகிகளுக்கு எதிராகப் பாய்ந்து சென்ற அம்பாக களப்பணிகளில் கண்கூடாக கண்டோம். டாக்டர் திருப்பதியின் வெற்றி உறுதி என குதுகளிக்கிறார்கள்” அவரது ஆதரவாளர்கள்

அவர்கள் சொன்னது போலவே திருப்பத்தூர் தொகுதியில் விசில் சத்தம் விண்ணை பிளக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையும்கூட..!

  • மணிகண்டன்

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *