Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

ஒருபுறம் தமிழக அரசின் செயல்பாடுகள் மீதான விமர்சனங்கள், மறுபுறம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், மற்றொரு புறம் பிரதான எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்தும் ஆளுங்கட்சியின் அரசியல் வியூகங்களால் அரசியல் களம் சூடேறியுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை (செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், சிவகங்கை போன்றவை) தவெக குறிவைத்துள்ளது. இந்த பலவீனமான பகுதிகளில் உள்ள திமுக நிர்வாகிகளையும், அடிமட்டத் தொண்டர்களையும் தங்கள் பக்கம் இழுக்க தவிகவின் முக்கிய மூவருக்குப் புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. திமுகவுக்குள்ளும் தவெகவின் ‘ஸ்லீப்பர் செல்ஸ்’ இருப்பதாகப் பேச்சுக்கள் எழுகின்றன .

மதுரையில் திமுகவில் நிலவும் உட்கட்சி குழப்பங்கள் மற்றும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் போன்றவர்களின் அமைதியைப் பயன்படுத்தி தவெக களம் காண்கிறது.. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி அழகிரி தவெக தரப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் மதுரை மேயர் பதவியை எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

இதையும் படியுங்க  'திமுக அமைச்சர்கள் மண்ணை கவ்வுவது உறுதி'..! அறிவாலயத்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!

கடந்த 15 ஆண்டுகளாக சேலம் உள்ளிட்ட மேற்கு மண்டலங்களில் திமுக பலவீனமாகவே உள்ளது. இங்குள்ள கோஷ்டி பூசல்களைப் பயன்படுத்தி, அதிருப்தியில் உள்ள திமுகவினரைத் தங்கள் பக்கம் இழுக்க தவிகவின் முக்கிய தலைகள் தீவிர ஸ்கெட்ச் போட்டுள்ளனர்.

அதிமுகவை ஓரளவுக்குப் பலவீனப்படுத்திவிட்டதாகக் கருதும் தவெக, தற்போது ஆளுங்கட்சியான திமுகவின் கோட்டைகளுக்குள்ளும், பலவீனமான மாவட்டங்களுக்குள்ளும் தனது வலையை விரிக்கத் தொடங்கியுள்ளது. இதிலிருந்து தற்காத்துக் கொள்ள முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அவரது கோர் டீம் உஷாராக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தமிழக அரசியலில் அடுத்தடுத்துப் பல அதிரடி ஆக்ஷன்கள் காத்திருக்கின்றன என்பது மட்டும் உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago