Vijay

வழக்கமாக தீபாவளி பண்டிகை வந்துவிட்டாலே அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், உயர் அதிகாரிகளின் வீடுகளுக்கு ஒப்பந்ததாரர்களும், தொழிலதிபர்களும் படையெடுப்பது வழக்கம். தங்களின் அந்தஸ்தைக் காட்டுவதற்காக தங்கம், வெள்ளி, லட்சக்கணக்கில் ரொக்கப் பணம், விலை உயர்ந்த நட்ஸ் மற்றும் இனிப்புப் பெட்டிகளை வாரி வழங்குவதுதான் கோட்டை வட்டாரத்தின் எழுதப்படாத விதி.

விஜய்யின் நேர்மைக்கு விழுந்த அடி
“த.வெ.க. ஆட்சியில் அமைச்சர்களோ, அதிகாரிகளோ எந்த ஒரு தீபாவளி அன்பளிப்பையும், லஞ்சப் பரிசுகளையும் வாங்கவே கூடாது!” என்று முதலமைச்சர் விஜய் மிகக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருந்தார். முதலமைச்சரின் இந்த உத்தரவைக் கேட்டு ‘அப்பாடா, நேர்மையான ஆட்சி’ என்று பாராட்டினார்கள். ஆனால், நம்ம ஊர் அமைச்சர்களும், அதிகாரிகளும் சும்மாவா இருப்பார்கக்? விஜய்யின் உத்தரவின் முகத்தில் கரியைப் பூசும் வகையில், அவரின் நேர்மைக்கே ஆப்பு வைத்துள்ளனர்.

பார்க்கிங் ஏரியாவில் நடந்த டீலிங்
தலைமைச் செயலகத்திற்கு உள்ளே பரிசுப் பொருட்களை எடுத்துச் சென்றால் முதலமைச்சரின் உளவுப் பிரிவிடம் மாட்டிக்கொள்வோம் என்று பயந்த அமைச்சர்கள், அதிகாரிகளின் உதவியாளர்கள், ஒரு குறுக்கு வழியைக் கண்டுபிடித்துள்ளனர். பரிசுப் பொருட்களைத் தூக்கிக்கொண்டு கோட்டைக்குள் வர வேண்டாம் என்றும், தலைமைச் செயலகத்திற்கு வெளியே இருக்கும் ‘பார்க்கிங்’ பகுதிக்கு வருமாறும் தொழிலதிபர்களுக்கு ரகசிய சிக்னல் கொடுத்துள்ளனர்.

இதையும் படியுங்க  "தேசிய சராசரி 16%... தமிழ்நாடு வெறும் 3%! தவெக-வின் பொருளாதார சறுக்கலை புள்ளிவிவரங்களுடன் கிழித்த தங்கம் தென்னரசு!"

அங்கே வைத்து தங்கம், வெள்ளி, ரொக்கப் பணம் அடங்கிய தீபாவளிப் பரிசுகளை ரகசியமாக வாங்கிக் கொள்ளும் இந்த உதவியாளர்கள், அவற்றை அப்படியே தங்கள் கைகளில் எடுத்துச் செல்வதில்லை. மாறாக, ‘ரேபிடோ’ போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் வாடகை கார்கள், பைக்குகளை புக் செய்து, அந்தப் பரிசுப் பெட்டிகளை நேராக அமைச்சர்கள், அதிகாரிகளின் வீடுகளுக்கு பார்சல் அனுப்பி விடுகிறார்கள்.

வெறும் கையோடு வாழ்த்து
இப்படிப் பரிசுகளை வெளியிலேயே கொடுத்து முடித்துவிட்டு, கோட்டைக்குள் நுழையும் தொழிலதிபர்களும் ஒப்பந்ததாரர்களும், அமைச்சர்களுக்கு வெறும் கையை மட்டும் கொடுத்து தீபாவளி வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டுத் திரும்புகிறார்கள். உள்ளே வெறும் கையை ஆட்டினாலும், வெளியே இந்தத் தீபாவளிப் பரிசுகளை வாங்கி கடத்துவதற்காகவே தலைமைச் செயலகத்திற்கு வெளியே ரேபிடோ பைக்குகளும், வாடகை கார்களும் ஈ மொய்ப்பது போலக் குவிந்து கிடக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *