தமிழக மீன்வளத் துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், த.வெ.க.வைச் சேர்ந்த அமைச்சர் ஸ்ரீநாத் தனது ‘நெருங்கிய நட்பு வட்டத்திற்குள்’ சுருண்டு கிடக்க, மறுபுறம் அவரது புதிய நேர்முக உதவியாளர் மொத்த துறையையும் தன் விரல் நுனியில் ஆட்டிப்படைத்து வருவதாக அதிரடிப் புகார்கள் எழுந்துள்ளன.

பழைய ஆளைவிட மோசம்
ஏற்கனவே லட்சக்கணக்கில் புகார்கள் குவிந்ததால் அமைச்சரின் முந்தைய உதவியாளர்கள் இருவர் அதிரடியாக நீக்கப்பட்டனர். அப்பாடா, இனிமேலாவது துறை நேர்மையாக நடக்கும் என்று பார்த்தால், புதுசாக வந்திருக்கும் நேர்முக உதவியாளரின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு, “இதற்கு பழைய உதவியாளர்களே எவ்வளவோ பரவாயில்லை!” என்று அதிகாரிகள் தலையிலடித்துக் கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

‘நிழல் அமைச்சர்’ தாமரைக் கண்ணன்?
இப்போது அமைச்சருக்குப் பின்னால் இருந்து அதிகாரத்தை இயக்கும் அந்த ‘நிழல்’ வேறு யாருமல்ல; கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவிடம் உதவியாளராக இருந்து, ஏகப்பட்ட தில்லுமுல்லுகளையும் ஊழல்களையும் செய்து ‘பட்டை தீட்டிய’ அதே தாமரைக் கண்ணன் தான். அங்கு கற்ற அத்தனை ‘கள்ளத்தனமான அனுபவங்களையும்’ இப்போது மீன்வளத் துறையிலும் இறக்கி, கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டதாக கோட்டை வட்டாரங்கள் கொதிக்கின்றன.

இதையும் படியுங்க  அன்று ஸ்டாலினுக்கு நிழல்.. இன்று தவெக-வின் நிர்வாக மூளை..! கோட்டையை ஆட்டிப்படைக்கும் திருமா+மூவரணி..!

அமைச்சர் தூங்குகிறாரா…? ஆதரவாளர்கள் புலம்பல்
அமைச்சர் ஸ்ரீநாத்தோ, தன்னைச் சுற்றி நடக்கும் எந்த ஒரு விஷயத்தையும் கவனிக்காமல், தனது சொந்த நட்பு வட்டாரத்தை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடக்கிறார். இதன் காரணமாக, இந்த உதவியாளரின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு, துறைக்குள் யார் யாரோ புகுந்து ‘நாட்டாமை’ செய்து கொண்டிருக்கிறார்கள். லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடும் இந்த அவல நிலையைப் பார்த்து, “அமைச்சர் எப்போதுதான் விழித்துக் கொள்ளப் போகிறார்? இன்னும் பொறுப்போடு செயல்படக் கூடாதா?” என்று அவரது சொந்த ஆதரவாளர்களே பொதுவெளியில் புலம்பித் தீர்க்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *