Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Anbil Mahesh

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க 100 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் திமுக நிர்வாகி ஒருவர் அன்பில் மகேஷ் கைதை வரவேற்று ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், சித்தையன் கோட்டை பேரூராட்சி மன்ற துணை தலைவராக இருப்பவர் ஜாகிர் உசைன். திமுக நிர்வாகியான இவர் ஆசிரியராக பணியாற்றும் தனது மனைவியின் பணியிடம் மாறுதலுக்காக அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த மகேஷுக்கு ரூபாய் 7.7 7 பூஜ லட்சம் லஞ்சம் கொடுத்தேன் என கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Anbil mahesh

அந்த ஆடியோவில்,”ஐயா அமைச்சர் ஐ.பெரியசாமி அவருடைய லெட்டருக்கே மரியாதை இல்லாத ஒரு அன்பில் மகேஷ் அவர் கைதாவதில் ஒன்னும் தவறு இல்லை. வரவேற்கத்தக்கதுதான். நானும் 7 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் கட்டி இருக்கேன். பணி மாறுதலுக்காக. இதை நீங்க எங்க கூப்பிட்டாலும் நான் சொல்றதுக்கு ரெடியா இருக்கேன். சென்னையில் நான் கொண்டு போய் கொடுத்திருக்கேன். அது ஒரு தலைமை ஆசிரியர் மூலமாக போய் அரியலூர் சிஇஓ ஆபீஸ் மூலமாக கொடுத்து வந்தேன். இதை நான் எங்க வேணாலும் சொல்லுவேன். இதே மாதிரிதான் வளவிச் செட்டிப்பட்டியில் 11 ஆசிரியர்கள் வந்திருக்காங்க.

இதையும் படியுங்க  இதை யாரும் எதிர்பார்க்கலையே.. மு.க.ஸ்டாலினுக்கு திடீர் சர்ப்ரைஸ்.. விஜய் எடுத்த அதிரடி முடிவு..!

அத்தனை பேரும் 7 லட்சம் ரூபாய் கட்டிட்டுத்தான் வந்திருக்காங்க. அந்த இடத்துக்கு சும்மா யாரும் வரல. அது ஒரு அப்கிரேட் ஸ்கூல். இத நான் எங்க வேணாலும் நிரூபிக்க நான் ரெடி. அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் பணி மாறுதலுக்காக 3 முறை லெட்டர் கொடுத்தாங்க. இந்த மூணு முறை லெட்டரையுமே அன்பில் மகேஷ் அவாய்ட் பண்ணிட்டாரு. அப்போ ஒரு சீனியர் அமைச்சர், ஒரு கட்சியின் துணை பொதுச் செயலாளர் கொடுத்த லெட்டரை ஒபன் பண்ணவே இல்ல.

அவர் கட்சிக்கு தகுதியானவர் இல்ல. எல்லாம் நாளைக்கு கடை வீதிக்கு வந்து சரவடி விடுங்க. அன்பில் மகேஷ் கைது ஆயிட்டார்னா சரவடி விடுங்க. ஒன்னும் தப்புல்லை. ஏன்னா நம்ம அமைச்சருக்கே பங்கம் விளைவித்தவர். அன்பில் மகேஷுடைய கைது வரவேற்கத்தக்கது. என்னுடைய மனைவிக்கு பணி மாறுதலுக்காகவே நான் 7,70,000 செலவழிச்சேன். ஒரு கட்சிக்காரனுக்கே இந்த நிலைமை என்றால் மாற்று கட்சி நண்பர்கள் மற்றவர்கள் எல்லாம் என்ன செஞ்சிருப்பாங்கன்னு பார்த்துக்கங்க. அவரோட கைதை பத்தி நீங்க யாரும் வருத்தப்படாதீங்க.

இதையும் படியுங்க  "பள்ளி குழந்தைகள் முன்னிலையில் இப்படியா? - அமைச்சரின் 'ரீல்ஸ்' மோகமும், வைரல் டாட்டூவும்!"

அன்பின் மகேஷ் ஜெயிலுக்கு போகக்கூடிய ஒரு ஆள்தான். பல தடவை நாங்க அவரை போய் முயற்சி பண்ணா ஒன்னும் செய்யவில்லை” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago