Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

”காணாமல் போன லிட்டில் சூப்பர் ஸ்டார்…” என நடிகர் காதல் சுகுமார் தனது முகநூலில் பதிவிட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்தப்பதிவில், ”எனது கல்யாண படத்தில் மூன்றாவது இருக்கும் நபர்தான் அண்ணாமலை சீனு. அண்ணாமலை படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு சிறிய வயது கேரக்டராக நடித்திருப்பார். அதன் பிறகு உள்ளே வெளியே, சின்னகவுண்டர் எனப் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அண்ணாமலை சீனு. எங்களது புதிய பூமி கலைக்குழுவில் சூப்பர் ஸ்டார் ஆக, கேப்டன் விஜயகாந்த் ஆக வேடமிட்டு நடனமாடுவார்.

அதன் பிறகு இறுதியாக எனது திருமணத்தின் போது பார்த்தது. பிறகு அவர் எங்கிருக்கார் என்பது தெரியவில்லை. நண்பர்களிடம் கேட்டேன். அவர்களிடமும் நான் சரியான தொடர்பில் இல்லை என்று சொன்னார்கள். விஷயம் அதுவல்ல. ரஜினி பாடலுக்கு ஆடி விட்டு அடுத்த இரண்டு பாடல்கள் இடைவெளியில் அவர் சின்ன கவுண்டர் விஜயகாந்த் கெட்டப்பிற்கு மாற வேண்டும்.

Annamalai Seenu

எங்களது குழுவில் இருக்கும் ஈஸ்வர் சந்திரபாபு குக்கூ படத்தில் இரண்டு பொண்டாட்டிக்காரராக கலக்கியிருப்பார். பிச்சைக்காரன் படத்திலும் நடித்திருப்பார். அவர் செய்த சேட்டைகள் சொல்லி மாளாது. எங்களது கலைக்குழுவில் அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் பாடல்களை போட்டு நடனம் மேடை ஏறுவதுதான் தனி சிறப்பு. ஆகவே ஒரு குழு நடனமாடி கொண்டிருக்கும் பொழுதே அடுத்த டீம் ரெடியாகி என்ட்ரி கொடுப்பார்கள். ஒன் பாத்ரூம் வந்தால் கூட வெளியில் செல்வதற்கு நேரம் இருக்காது.

இதையும் படியுங்க  "அவர் அப்படிச் செய்வார்னு நான் எதிர்பார்க்கவே இல்ல!" – படப்பிடிப்பு தளத்தில் ரஜினியின் செயலால் உறைந்துபோன இளம் இயக்குநர்!

சேலத்தில் ஒருமுறை ஒரு கிராமத்தில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது வெளியில் செல்ல முடியாத நிலை. அவசரத்தில் ஒரு வாட்டர் கேனில் ஒண்ணுக்கு அடித்து மூடிவிட்டு நடனமாட சென்று சென்றுவிட்டார் ஈஸ்வர். அடுத்த பாடலுக்கு ரெடியாக வேண்டும் என்று வந்த அண்ணாமலை சீனு தலையை கெட்டப்புக்காக படிய வாரவேண்டும் என்பதால் தண்ணீர் தேடி கிடைக்காததால் அந்த பாட்டிலில் உள்ளதை தலையில் தெளித்து படிய வாரிக் கொண்டு நடனமாட சென்று விட்டார்.

Sugumar

திரும்ப வந்தவர் “என்னடா இது.. ஸ்டேஜ் பாத்ரூமுக்கு மேல போட்டு இருப்பாங்க போல இருக்கு. ஒரே யூரின் ஸ்மெல் அடிக்குது” அப்படின்னு சொல்லவும் திரும்பிப் பார்த்த ஈஸ்வர் சந்திரபாபு ”அந்த பாட்டில்லயா தண்ணி எடுத்த? அது நான் ஒன்றுக்கு பேஞ்சு வச்ச பாட்டில் ஆச்சே” என்று சொல்லவும் “ஏண்டா லூசு பயலே இப்படியாடா பண்ணுவேன்னு..” சொல்லி அடிக்க ஒரே கலவரமாகிவிட்டது. இப்படி எத்தனையோ கலாட்டாக்கள் நடந்த வண்ணமே இருக்கும்.

https://www.facebook.com/photo?fbid=29351878581073098&set=pcb.29351879494406340

சிறிய வயதில் பல படங்களில் நடித்து ஜொலித்துக் கொண்டிருந்த அண்ணாமலை சீனு இன்று எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் அப்பொழுதெல்லாம் நடனமாட வந்தால் அவரைப் பற்றி அறிவிப்பு செய்யும் பொழுதே கைதட்டல் பறக்கும். இப்போதான் மீண்டும் அண்ணாமலை படத்தை பார்த்தேன் ஞாபகம் வந்துவிட்டது” என்று பதிவிட்டு இருந்தார். அதற்கு ஒருவர், அண்ணாமலை சீணு கனடாவில் இருப்பதாக கூறி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்க  பிரமாண்ட இயக்குநர் மகன் படத்தில் 'தளபதி' வாரிசு! வைரலாகும் அனல் பறக்கும் அப்டேட்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 hours ago at 6 hours ago