இந்தியா டுடே சீ ஓட்டர் இணைந்து நடத்திய 2029 ஆம் ஆண்டிற்கான பிரதமர் வேட்பாளர் யார் என்கிற சர்வே முடிவுகள் வெளியாகி பயங்கர சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் இப்போதைய பிரதமர் நரேந்திர மோடி 48.7% பெற்று முதலிடத்தில இருக்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 27.1% பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆனால் இந்த சர்வேயில் செம்ம சுவாரசியமான மேட்டர் என்னவென்றால் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 9.2% ஆதரவு பெற்று இந்திய அளவிலேயே மூன்றாவது இடத்தில் இருப்பதுதான்.
இது எப்படி வந்தது? கொஞ்ச நாளாவே சட்டமன்றத்திலும், வெளியிலும் தமிழ்நாட்டில் இருந்து ஒருத்தர் பிரதமராக வரணும்ப்பா என பேசப்பட்டு வந்த அந்த குரல்கள் இப்போது பலமாக ஒலிக்க ஆரம்பித்து இருக்கிறது. சில அமைச்சர்கள் கூட ”ஏன் நம்ம முதலமைச்சர் விஜய் பிரதமர் ஆக கூடாதா? என பிரஸ் மீட்டிலும், டிபேட் ஷோக்களிலும் ரொம்ப ஓப்பனாவே பேச ஆரம்பித்து விட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் விஜய் செய்த நல்ல காரியங்கள் எனச் சொல்லி ”மசூதிகளில் உள்ள இமாம்களுக்கு அரசு தரப்பிலிருந்து மாத ஊதிய வழங்கப்படும் என அறிவித்ததாகவும் பசுவதையை முழுவதுமாக விஜய் தடுத்து நிறுத்திட்டார் என்றும் தமிழ்நாட்டில பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுற அனைத்து குற்றவாளிகளுக்கும் உடனடியாக மரண தண்டனை விதிக்க உத்தரவிட்டுருக்கார் என்றும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் முழுமையான இலவச சிகிச்சை அளிக்க விஜய் உத்தரவிட்டிருப்பதாகவும், தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பலன் இல்லாமல் ஒரு நோயாளி மரணம் அடைந்தால் அவருடைய குடும்பத்தினரிடம் இருந்து மருத்துவமனை நிர்வாகம் கட்டணம் எதுவுமே வசூலிக்க கூடாது என விஜய் சட்டம் கொண்டு வந்திருக்கிறார்.
இந்து கோவில்கள்ல உண்டியல் காணிக்கை பணத்தை முழுமையாக எடுத்து அதன் மூலமாக அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை கட்டுவதற்கு முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். ஜியோ சந்தாவில ஒரு ரூபாய் கூட உயர்த்தினால் ஜியோவை தமிழ்நாட்டில் இருந்தே சரித்து விடுவேன் என தமிழ்நாடு முதல்வர் விஜய் சவால் விட்டு இருக்கிறார் எனவும் இவை எல்லாவற்றை விடவும் ஹைலைட்டாக விஜய் பாகிஸ்தானுக்கு நேரில் சென்று அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சந்தித்ததாகவும், அங்கே இருக்கிற ஏழை மக்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கி உதவி செய்ததாகவும் வட இந்தியாவில் இந்தி ரீல்ஸ்கள் அள்ளி தெளிக்கப்பட்டு செம்ம ட்ரெண்டிங்கில் போய் கொண்டு இருக்கிறது.

அதில் கொஞ்ச நஞ்சம் லீக் ஆகி இங்கு தமிழ்நாட்டிலும் சுற்றிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில்தான் இந்த மேட்டரை மையமாக வைத்து தமிழக வெற்றி கழகத்துக்குள் ஒரு புதிய கலகம் வெடிக்கப் போகிறது என கோட்டை வட்டாரத்தில் பேசிக்க்கொள்கிறார்கள். இப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கிற ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி, தவெகவின் பலமான குரலா பேசிக் கொண்டு வருகிறார்.
அவரது அலுவலகம் சென்னை போயஸ் கார்டனில் இருக்கிறது. சட்டமன்றத்தில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை கேட்ட அவரது ஆபீஸ் ஆட்களே ”அண்ணே.. என்னைக்காவது நீங்க ஒரு நாள் சிஎம் சீட்ல உட்காருவீங்கண்ணே” என அவரிடம் தூபம் போட்டு வருகிறார்கள். ஆதவ அர்ஜுனாவும் இதை கேட்டு ரொம்ப ஹாப்பியா இருந்து வருகிறார்.
இந்த மேட்டரை பற்றி ஆதவ் அர்ஜுனா வட்டாரத்தில் விசாரித்தபோது ரொம்பவே ஷாக்கிங்கான தகவல்கள் எல்லாம் கிடைத்தது. தமிழக வெற்றி கழகத்துக்கு இப்போது ஒரு எம்பி கூட இல்லை என்றாலும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் விஜயை பிரதமர் வேட்பாளர் அளவுக்கு முன்னிறுத்துவதற்கு ‘ரூட் மாஃபியா’ சோசியல் மீடியா ப்ரமோஷனுக்கு ஏகப்பட்ட கோடிகளை செலவு செய்து வருகிறது. இதனால் விஜய் கட்சி ஆரம்பித்த ரெண்டே வருஷத்தில் விஜய் முதலமைச்சரானது போல் அவர் பிரதமர் ஆவதற்கான வாய்ப்புகள் இல்லாமல்லாம் இல்லை எனப் பேசிக்கொள்கிறார்கள்.

ஆனால் இன்னொரு பக்கம் முதலமைச்சர் விஜய் மீது வேட்பு மனுவில் தனது சொத்துக்களை மறைத்து விட்டார் என நீதிமன்றத்தில் ஒரு வழக்கு ஓடிக் கொண்டு இருக்கிறது. அந்த வழக்கில் அவர் சொத்துக்களை மறைத்தது உண்மை என நிரூபிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிடுவதற்கே அவருக்கு தடைவிதிக்கப்படலாம். இந்த வழக்கில் திமுக தரப்பில் இருந்து சில முக்கியமான மூவ் எல்லாம் நடந்து வருகிறது.
அதாவது விஜயின் மனைவி சங்கீதா தரப்பில் இருந்தே அவருடைய உண்மையான சொத்துக்கள் என்ன என்கிற லிஸ்ட் திமுக கைக்கு போயிருப்பதாகச் சொல்கிறார்கள். இதையெல்லாம் வைத்து கோர்ட்டில் விஜய்க்கு எதிராக தீர்ப்பு வாங்கிவிடலாம் என திமுக தீவிரமாக இருக்கிறது. இந்த நிலையில்தான் ஒருவேளை முதலமைச்சர் பதவியில் இருந்து விஜய் விலக வேண்டிய நிலைமை வந்தால் அந்த இடத்துக்கு யார் வருவது என்கிற கேள்வி இப்போதே போயஸ் கார்டன் ஆதவ் அர்ஜுனா ஆபீஸில் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.

அப்போது விஜய்க்கு பதிலாக ஆதவ் அர்ஜுனாதான் முதலமைச்சராக வேண்டும் என்பதற்கான பிளான்கள் எல்லாம் இப்போதே பக்காவாக போய் கொண்டு இருக்கிறது என்பது தான் தவெகவுக்குள் சுடச் சுட ஓடிக்கொண்டிருக்கும் ஹாட் டாபிக். இதையெல்லாம் மனதில் வைத்தே பிரதமர் விஜய் என்கிற இந்த டிஜிட்டல் விளம்பரத்துக்கு பல மடங்கு விட்டமின்களை வாரி இறைத்து வருகிறார்கள் என கூறப்படுகிறது.
