https://republictn.com/

தவெக தலைவர் விஜயை தமிழகத்தின் புதிய முதல்வராக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமித்துள்ளார். பல நாட்களாக நிலவி வந்த அரசியல் இழுபறிகள், பரபரப்பான திருப்பங்களுக்குப் பிறகு, இன்று இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆளுநர் மாளிகையின் அதிரடி அறிவிப்பு
சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களுடன் விஜய், ஆளுநரைச் சந்தித்துப் பேசினார். காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட் (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2) ஆகிய கட்சிகளின் நிபந்தனையற்ற ஆதரவுடன், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை த.வெ.க. கூட்டணி எட்டியது. இதனைத் தொடர்ந்து, ஆளுநர் அர்லேகர் விஜய் ஆட்சியமைக்க முறைப்படி அழைப்பு விடுத்தார்.

3 நாள் கெடு: சட்டப்பேரவையில் அக்னிப்பரீட்சை
முதல்வராகப் பதவியேற்றாலும், அடுத்த 3 நாட்களுக்குள் தமிழக சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை விஜய் நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். நாளை முதலமைச்சராக பதவி ஏற்கிறார் விஜய் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார் ஆளுநர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை காலை 10 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய். பிற்பகல் 3.15 மணிக்கு பதவியேற்பு என அறிவிக்கப்பட்ட நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago