பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் புனரமைக்கப்பட்ட காமராஜர் திருவுருவச் சிலை திறப்பு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் தொழிலதிபரும், திரைப்பட நடிகருமான லெஜெண்ட் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கோவில்பட்டிக்கு அவர் வருகை தந்தவுடன், அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும் ரசிகர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது கார் விழா நடைபெறும் இடத்தை வந்தடைந்ததும், “லெஜெண்ட்… லெஜெண்ட்…” என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. காரில் இருந்து இறங்கி மேடையை நோக்கி நடந்து செல்லும் வரை ரசிகர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு ஆரவாரம் செய்தனர். இதனால் கோவில்பட்டி பிரதான சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தே பாதிக்கப்படும் அளவுக்கு மக்கள் கூட்டம் திரண்டது.
இதையும் படியுங்க: யம்மாடி ஆத்தாடி… கழுத்தில் 3 கிலோ தங்கம்..! துரைமுருகன் பினாமியா..? யார் இந்த ‘நடமாடும் நகைக்கடை’..? #Republic Tamil
விழா மேடையை அடைந்த லெஜெண்ட் சரவணன், புனரமைக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜரின் முழு உருவ வெண்கலச் சிலையை திறந்து வைத்து, அதற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அந்தச் சிலை தொடர்பான நினைவுக் கல்வெட்டையும் திறந்து வைத்து விழாவை சிறப்பித்தார்.
இந்த காமராஜர் சிலை சாதாரண சிலை அல்ல. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய தமிழக ஆளுநரால் திறந்து வைக்கப்பட்ட இந்தச் சிலை, நீண்டகாலமாக பராமரிப்பின்றி இருந்த நிலையில், நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் முழுமையாகப் புனரமைக்கப்பட்டு புதிய பொலிவுடன் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் புனரமைப்பு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டி மற்றும் பல்வேறு திறனாய்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு லெஜெண்ட் சரவணன் தனது கைகளால் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
இதையும் படியுங்க: “தளபதி வந்தா தள்ளிப்போய் தானே ஆகணும்!” – முதலமைச்சர் விஜய்க்காக தியேட்டரையே விட்டுக் கொடுத்த ஜி.வி.பிரகாஷின் மாஸ் ட்வீட்!
விழாவில் உரையாற்றிய லெஜெண்ட் சரவணன், பெருந்தலைவர் காமராஜரின் கல்விப் புரட்சியை விரிவாக நினைவுகூர்ந்தார்.
“அனைவருக்கும் வணக்கம். நான் இங்கு வேறு எதற்கும் வரவில்லை. நம்மை வாழ வைத்த அந்தப் பெருந்தலைவர் காமராஜருக்காக மட்டும்தான் வந்துள்ளேன். அவர் இந்த மண்ணில் பிறந்து, தமிழ்நாட்டு மக்களின் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதற்குக் காரணம் அவரது நல்லாட்சியும் தொலைநோக்குப் பார்வையும் தான்.
1954-ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது மாநிலத்தில் கல்வியறிவு பெற்றோர் மிகக் குறைவாக இருந்தனர். அந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் ஆயிரக்கணக்கான பள்ளிகளை உருவாக்கினார். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்து, கல்வியை கிராமங்களின் வாசலுக்கே கொண்டு சென்றார்.
பசி காரணமாக எந்தக் குழந்தையும் பள்ளியை விட்டு விலகக் கூடாது என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இலவசக் கல்வி, இலவச சீருடை உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றியவர் காமராஜர்.
இதையும் படியுங்க: சி.விஜயபாஸ்கருக்கு பேரிடியை இறக்கிய செய்தி..! உயர் நீதிமன்றம் அதிரடி..!
சொந்தமாக ஒரு வீடு கூட இல்லாமல், எந்தச் சொத்தையும் சேர்க்காமல், தன் வாழ்நாளை முழுவதும் மக்களுக்காக அர்ப்பணித்த தியாகச் செம்மல் அவர். எளிமை, நேர்மை, தியாகம் ஆகியவற்றின் அடையாளமாக இன்றும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.
“பொருளாதாரச் சூழ்நிலையை நினைத்து ஒருபோதும் மனம் தளர வேண்டாம். கடினமாக உழையுங்கள். கல்விதான் உங்களுடைய மிகப்பெரிய சொத்து. உங்கள் கல்வி வளர்ச்சிக்குத் தம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் தொடர்ந்து செய்ய நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்.” என்று ஊக்கமளிக்கும் வார்த்தைகளையும் பகிர்ந்து கொண்டார்.
காமராஜரின் சாதனைகளை புள்ளிவிவரங்களுடன் விளக்கிய அவரது உரை, அங்கு கூடியிருந்த முதியவர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. ஒவ்வொரு கருத்திற்கும் பொதுமக்கள் கைதட்டி வரவேற்பு அளித்தனர்.
இதையும் படியுங்க: “139 சவரனுக்கு கோவிந்தா..! கடையை பூட்டிவிட்டு குடும்பத்தோடு எஸ்கேப் ஆன ஓனர்.. ஆண்டிபட்டியில் பகீர் மோசடி!”
இந்த மக்கள் சந்திப்பு, லெஜெண்ட் சரவணனின் சினிமா பயணத்துடனும் தொடர்புபடுத்திப் பேசப்படுகிறது. தற்போது அவர், இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனது இரண்டாவது திரைப்படமான ‘லீடர்’ (Leader) படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் லெஜெண்ட் சரவணன், பாசமிக்க தந்தையாகவும், சக்திவாய்ந்த எதிரிகளை எதிர்கொள்ளும் மாஸ் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ‘லீடர்’ திரைப்படத்தின் கதைக்களம் முழுமையாக தூத்துக்குடி மாவட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் முக்கியமான படப்பிடிப்புகள் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுள்ளதால், அந்தப் பகுதி மக்களுடன் தனிப்பட்ட பாசம் உருவாகியுள்ளதாக லெஜெண்ட் சரவணன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்க: “பெற்றோர்களே ஒரு நொடி உஷார்! 3 வயது குழந்தையின் உயிரைப் பறித்த ஒரு குட்டி நிலக்கடலை…
சமீபத்தில் தனது சினிமா கனவு குறித்து பேசிய அவர்,
“சின்ன வயதிலிருந்தே என் வீட்டில் ஷாருக்கான், சல்மான் கான் ஆகியோரின் புகைப்படங்களை ஒட்டி வைத்து, நானும் ஒரு நாள் நடிகராக வேண்டும் என்று என் அம்மாவிடம் கூறுவேன். அந்தக் கனவுதான் இன்று என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது.” என்று பகிர்ந்திருந்தார்.
விழா முடிவில் செய்தியாளர்கள், அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்வி எழுப்பியபோது,
“சூழ்நிலை கோரினால், மக்கள் விரும்பினால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன். ஆனால் தற்போதைக்கு எனது முழு கவனமும் சினிமாவில்தான் உள்ளது.” என்று லெஜெண்ட் சரவணன் பதிலளித்தார்.
கோவில்பட்டியில் லெஜெண்ட் சரவணனுக்கு கிடைத்த மக்கள் வரவேற்பும், காமராஜருக்கு அவர் செலுத்திய மரியாதையும், மாணவர்களுக்கு வழங்கிய கல்வி ஊக்கத் தொகைகளும் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன.
