Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

அதிகாரிகள் வட்டத்தை மட்டுமில்லாது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் அதிர வைக்கிற மாதிரி ஒரு மெகா ஐபிஎஸ் டிரான்ஸ்பர் நேற்று நடந்திருக்கிறது. லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனராக இருந்த அருண் ஐபிஎஸ் அதிரடியாக அந்த பதவியில் இருந்து தூக்கப்பட்டு போலீஸ் அகாடமிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

அருண் ஐபிஎஸ் கடந்த திமுக ஆட்சியில் சென்னை சிட்டி போலீஸ் கமிஷனராக இருந்தப்போதே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியவர் சட்டப்பேரவை தேர்தலின் போது இவரை தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலில் தூக்கி போட்டது. ஆனால் தேர்தலுக்கு பிறகு தவெக ஆட்சி வந்ததற்கு பிறகு அருண் ஐபிஎஸ் தனது அசுர அரசியல் லாபி மூலமாக யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு லஞ்ச ஒழிப்பு துறையின் மெகா இயக்குனர் பதவியை கைப்பற்றினார்.

‘ஜுராசிக் பார்க்’ சாம் நீல் காலமானார்: படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்த சுவாரசிய பின்னணி!

தன் மீது இருந்த திமுக முத்திரையை மாற்ற வேண்டும் என்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு என குறிப்பிட்ட சில அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை ஆக்ஷன்களை எடுத்து முதலமைச்சர் விஜயை இம்ப்ரஸ் செய்யப் பார்த்தார் அருண் ஐபிஎஸ். ஆனால் அவரது அத்தனை கால்குலேஷனையும் லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் ஒருவர் அக்குவேறு ஆணி வேறாக தகர்த்துவிட்டார்.

இதையும் படியுங்க  "விஜய்யை சந்திக்காத ரஜினி.. விசிக அமைச்சர் வன்னி அரசுடன் திடீர் சந்திப்பு! பின்னணி என்ன?

சென்னை விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மீது வந்த புகார்களை விசாரித்து கடந்த 2025 டிசம்பரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்தார் லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் விமலா. ஆனால் கடந்த ஜூன் 17ஆம் தேதி இந்த இன்ஸ்பெக்டர் விமலா லஞ்சம் கேட்டதாக ஒரு சாகை கிளப்பியதில் விஜிலன்ஸ் இயக்குனர் அருண் ஐபிஎஸ்,விமலாவை சஸ்பென்ட் செய்தார்.

இன்ஸ்பெக்டர் விமலா இந்த விஷயத்தை அசால்ட்டாக விடாமல் உயர்நீதிமன்றம் போக கோர்ட் அவரோட சஸ்பெண்டுக்கு இடைக்கால தடை விதித்தது. உடனே அருண் ஐபிஎஸ் அவசர அவசரமாக தலைமை நீதிபதி பெஞ்சக்கு அப்பீல் சென்று அந்த சஸ்பெண்டை உறுதிப்படுத்தினார். ஒரு இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட் விவகாரத்தில் விஜிலன்ஸ் டைரக்டர் ஏன் இவ்வளவு வேகம் காட்டுகிறார் என உயரதிகாரிகள் மத்தியில சந்தேகம் கிளம்பியது. அதே நேரம் இன்ஸ்பெக்டர் விமலா தன் பக்கம் இருக்கிற அத்தனை உண்மைகளையும் ஆதாரங்களுடன் முதலமைச்சர் விஜய் வரை கொண்டு சென்று சேர்த்து விட்டார்.

இதையும் படியுங்க  இதை யாரும் எதிர்பார்க்கலையே.. மு.க.ஸ்டாலினுக்கு திடீர் சர்ப்ரைஸ்.. விஜய் எடுத்த அதிரடி முடிவு..!

சவுதியில் கணவர்… வீட்டில் இருந்த மனைவிக்கு நள்ளிரவில் காத்திருந்த அதிர்ச்சி!

இதை பார்த்து ஷாக்கான முதலமைச்சர் விஜய் போன வாரம் உளவுத்துறையிடம் இருந்து ஒரு ரகசிய ரிப்போர்ட்ட வாங்கி பார்த்துவிட்டு நேற்று அதிரடியாக அருண் ஐபிஎஸை பதவியில இருந்து தூக்கி அடித்து விஜிலன்ஸ் ஐஜி மகேஸ்வரிக்கு கூடுதல் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். இந்த அதிரடி ஆக்ஷன் இப்போது தவெக கூட்டணிக்குள்ளேயே மிகப்பெரிய விவாதத்தை கிளப்பி இருக்கிறது. ஏனென்றால் அருண் ஐபிஎஸ்க்கு இந்த டாப் போஸ்டிங் கிடைப்பதற்கு விசிக தலைவர் திருமாவளவனோட பலத்த சிபாரிசும், ஜான் ஆரோக்கியசாமியின ஒப்புதலும் தான் காரணம் என கோட்டையில் பேசிக்கொள்கிறார்கள்.

சிபாரிசோடு யாரும் வராதீங்க… கூட்டணி கட்சியினருக்கு ஆப்பு..! விஜய் கறார் உத்தரவு..!

தற்போது அருண் தூக்கப்பட்டதால் தவெக கூட்டணியில் திருமாவளவனின் செல்வாக்கு திடீரென குறைகிறதா என்கிற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் கிளம்பி இருக்கிறது. அதனால்தான் கடந்த சில நாட்களாக விசிக தரப்பில இருந்தும், திமுக- தவெக கூட்டணி பற்றி சலசலப்பான கருத்துக்கள் அனல் பறக்கிற அளவுக்கு வெளியில் வந்து கொண்டு இருக்கிறது.

இதையும் படியுங்க  திமுக-வின் ’ஸ்பை டீம்-5'..! ஸ்டாலின் பிளானை சல்லி சல்லியாய் உடைத்த விஜய்..! ரேடாரில் தவெக எம்.எல்.ஏ-க்கள்..!
Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago