Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து வரும் நிலையில் உள்ளாட்சி தேர்தலில்கூட்டணியே இல்லாமல் வென்று விடலாம் என நினைக்கிறார். இந்நிலையில் அதிமுக நிர்வாகிகளை ரகசியமாக எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம் தரப்பினர் பார்த்துவிட்டு வருவதாக சொல்கிறார்கள். குறிப்பாக அந்த சந்திப்புகள் வெளியே கசிய விடாமல் மிகுந்த எச்சரிக்கையோடு அவர்கள் செயல்பட்டு வந்த நிலையில் மெசேஜ் லீக் ஆனதில் எடப்பாடி தரப்பு அதிர்ச்சியாகி உள்ளது.

ஒரே ஒரு பிளஸ்… ஏராளமான மைனஸ்: விஜய்யைக் காப்பாற்றுமா ‘ஜன நாயகன்’?

தமிழகத்தில் மிக பலம் பொருந்திய கட்சிகளில் ஒன்று என அதிமுகவை குறிப்பிடலாம். எம்ஜிஆர் -ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட இயக்கம். முழு கட்சி கட்டமைப்பு கொண்ட தமிழகத்தை அதிக முறை ஆண்ட கட்சி. இல்லையென்றால் எதிர்கட்சி என சொல்லிக் கொண்டே போகலாம்.

ராணுவ கட்டுப்பாட்டோடு இருந்த இயக்கம். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு உடைந்து போனது. வாரிசை ஜெயலலிதா அறிவிக்காமல் இருந்ததும் இதுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். சசிகலா, டிடிவி.தினகரன், ஓபிஎஸ் என ஒரு பெரும் படையே அதிமுகவிலிருந்து வெளியேறியிருக்கிறது அல்லது வெளியேற்றப்பட்டு இருக்கிறது. அத்துடன் நடந்து முடிந்த 2026 தேர்தலில் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக அதன் முக்கிய தளபதிகளை இழந்து வருகிறது.

ரயிலில் ஆடம்பர தேனிலவு கொண்டாட்டம்..! வைரலான வீடியோ.. சிக்கிய டிடிஆர்..!

ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய முகங்களாக இருந்த பலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகிறார்கள். எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், கடம்பூர் ராஜு எனச் சொல்லிக் கொண்டே போகலாம். எடப்பாடி பழனிச்சாமி தங்களை கேட்காமல் அவரே முடிவெடுக்கிறார். அதனாலதான் அதிமுக தோல்வி அடைஞ்சது என குற்றச்சாட்டுகளை அடிக்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் பலர் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துவிட்டனர். எஸ்.பி.வேலுமணி, சண்முமகம் போன்றோர் மீது எடப்பாடி நடவடிக்கைக்கும் உட்படுத்தாமல் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து விடுவார்கள் என்பதால் அவர்களது அடிப்படை உறுப்பினர் பதவியை விட்டு வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதே நேரத்தில் அவர்களும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதற்கு இடையே தற்போது வெளியாகி இருக்கிற தகவல்தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது அதிமுகவில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள் ஏற்கனவே 40 சதவிகிதத்திற்கு மேல் சி.வி.சண்முகம் தரப்பு கையெழுத்து பெற்றிருந்தது. அதை தெரிந்துதான் சில மாவட்ட செயலாளர்களை மாற்றினார் எடப்பாடி. இந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஏராளமானவர்களிடம் எஸ்.பி வேலுமணியும், சி.வி.சண்முகமும் கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்களாம். விரைவில் பொதுக்குழுவை கூட்டி வெளியே சென்ற அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் அல்லது எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டு இருக்கிறார்கள்.

”25 பேரு எங்க?”.. கையும் களவுமாக சிக்கிய சத்துணவு அதிகாரி! பயந்து நடுங்காமல் முறைத்த அதிர்ச்சி வீடியோ!

இதற்கான நகர்வுகள் ரகசியமாக இருந்த நிலையில் எடப்பாடி தரப்புக்கு விசுவாசமாக இருந்த சிலர் இதுகுறித்து அவரிடம் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த தகவல் கசிந்திருக்கும் நிலையில் அதிர்ச்சியில் இருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள் அதிமுகவில் உள்ள நிர்வாகிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago