https://republictn.com/

கோவை சிறுமி கொலை வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் விஜய் உறுதி அளித்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனை மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தீவிர மற்றும் விரைவான விசாரணை நடத்தப்பட்டு, குற்றப்பத்திரிக்கை உடனடியாக தாக்கல் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத் தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago