Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Pakistan India

பாகிஸ்தான் இன்று இந்தியாவின் தயவுக்காகவும், இந்தியாவின் வர்த்தகத்தின் மறு தொடக்கத்திற்காகவும் கெஞ்சும் நிலையில் உள்ளது. இந்த சூழல் உலகரங்கில் இந்தியாவின் அசுர வளர்ச்சியை உரக்கச் சொல்லும் ஒரு வரலாற்று சான்றாகும்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களையும், தேச துரோக ஊடுருவல்களையும் பார்த்து அமைதியாக இருந்த இந்தியா, பிரதமர் மோடியின் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. தன் பொருளாதார பலத்தாலும், ராணுவ ஆற்றலாலும் உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

மோடி ஆட்சியில் இந்தியா எடுத்த விஸ்வரூபம் வெறும் ராணுவ பதிலடி மட்டுமல்ல. அது ஒரு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே ஆட்டிப் படைக்கும் வல்லமை கொண்டது என்பதை இன்று பாகிஸ்தான் பொருளாதார இழப்பின் மூலம் உணர்ந்து கொண்டிருக்கிறது. இன்று பாகிஸ்தான் இந்தியாவின் மூல
பொருட்களுக்காகவும், பருத்திக்காகவும், அத்தியாவசிய மருந்துகளுக்காகவும் ஏங்கி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். மருந்து துறையில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவிலிருந்து மலிவான விலையில் மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய முடியாததால் பாகிஸ்தான் மருந்து துறைக்கு ஆண்டுக்கு 16000 ஆயிரம் கோடி முதல் 25000 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது. ஜவுளி துறையிலும் நஷ்டம். இந்தியாவிலிருந்து பருத்து இறக்குமதி தடைபட்டதால் பிரேசில், அமெரிக்கா போன்ற தூரத்து நாடுகளில் இருந்து அதிக விலைக்கு பருத்தியை வாங்கியதில் மட்டும் பாகிஸ்தான் ஜவுளி துறைக்கு 42000 கோடி ரூபாய் கூடுதல் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்க  "ஓடும் ரயிலில் கணவருக்கு 'கூலிப்படை' ஸ்கெட்ச்; கொள்ளை நாடகத்தை அக்குவேறாக உடைத்த ஒரே ஒரு போன் கால்!"

உலக பொருளாதாரத்தின் எந்திரமாக இன்று இந்தியா உருவெடுத்திருக்கிறது. அமெரிக்காவும், ஐரோப்பாவும், சீனாவும் கூட இந்தியாவின் சந்தை மதிப்பை தாண்டி செல்ல முடியாமல் திகைத்து நிற்கும் வேளையில் பாகிஸ்தான், இந்திய வர்த்தகம் இல்லாமல் மூச்சு திணறி கொண்டிருக்கிறது. இந்தியாவில் இருந்து குறைந்த விலையில் கிடைத்த அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் உலக நாடுகளை சுற்றி வந்து கூடுதல் கப்பல் கட்டணமும், சரக்கு கட்டணமும் கொடுத்து திவாலாகும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் இந்தியாவுடன் வர்த்தகம் இல்லாததால் 3லட்சத்த79ஆயிரம் கோடி ரூபாயை இழந்திருக்கிறது. அரசியல் ரீதியாக எத்தனை சவால்கள் வந்தாலும் பொருளாதார ரீதியாக இந்தியாவை வீழ்த்த எவராலும் முடியாது என்ற நிலையை பிரதமர் மோடி தலைமையில் நாம் எட்டி இருக்கிறோம். விண்வெளி துறையில் இஸ்ரோவின் உலக சாதனைகள் முதல் தகவல் தொழில்நுட்ப துறையில் உலகை ஆளும் இந்திய சிஇஓக்கள் வரை இன்று உலகின் ஒவ்வொரு முக்கிய துறையின் பின்னாலும் ஒரு இந்திய மூளை இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்க  கிழிந்த புடவை.. வெறும் கால்கள்.. 6 நிமிடத்தில் 1,600 மீட்டர்! இந்தியாவை உலுக்கிய ஒரு தாயின் ஓட்டம்!

பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவின் எல்லையில் பதற்றத்தை உருவாக்க நினைத்தபோது இந்தியா தன் எல்லையை பாதுகாத்தது மட்டுமின்றி தன் பொருளாதார பலத்தால் அவர்களை கூண்டில் அடைத்தது போல முடக்கி போட்டிருக்கிறது. மருந்து துறையில் உலகிற்கே அச்சாணியாக விளங்கும் இந்தியா நினைத்தால், ஒரு நாட்டின் மருத்துவ கட்டமைப்பையே ஸ்தம்பிக்க வைக்க முடியும் என்ற அளவுக்கு பேராற்றல் பெற்று திகழ்கிறது. இன்று வல்லரசு நாடுகள் கூட இந்திய பிரதமரின் வார்த்தைகளுக்காகவும், இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளுக்காகவும் காத்து கிடக்கின்றனர்.

சுயசார்பு பாரதம் என்ற முழக்கத்தோடு உலகிற்கு தேவையான அனைத்தையும் தன் சொந்த மண்ணிலேயே தயாரிக்கும் ஆற்றலை இந்தியா வளர்த்து கொண்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையில் உலகிலேயே முதலிடம் அணுசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் அசுர வளர்ச்சி என இந்தியாவின் சாதனைகளை பட்டியலிட்டு
கொண்டே போகலாம். நம்மை சுற்றி இருக்கும் நாடுகள் கடனில் மூழ்கி பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் போது இந்தியா மட்டும் நிலையான பொருளாதார வளர்ச்சியோடு உலகிற்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக திகழ்கிறது.

இதையும் படியுங்க  ”பார்க்கிங் தகராறில் நடுரோட்டில் காரைக் கொளுத்திய பக்கத்து வீட்டுக்காரர்… CCTV-யில் சிக்கிய திடுக்கிடும் வீடியோ!"

எதிரி நாடுகளின் வர்த்தக கூட்டமைப்புகள் இன்று இந்தியாவின் காலடியில் வந்து நின்று வர்த்தகத்தை மீண்டும் தொடங்குமாறு கெஞ்சும் இந்த வரலாற்று தருணம் ஒவ்வொரு இந்தியனும் தன் நெஞ்சை நிமிர்த்தி பெருமை கொள்ள வேண்டிய மாசான தருணமாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago