தமிழ்தேசியவாதி தமிழரசன் பெயரில் சாதி பிளவு – திருமாவளவனின் பேச்சுக்கு தலித்துகளே கடும் எதிர்ப்பு!
தமிழ்தேசியம், சாதி ஒழிப்பு என்று பேச ஆரம்பித்தாலே தீப்பிடிக்கும். அதிலும் அதைப் பேசியது தொல்.திருமாவளவன் என்றால் சொல்லவே வேண்டாம்.
சமீபத்தில் திண்டிவனத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்ட மேடையில், உணர்ச்சி பொங்க பேசிக்கொண்டிருந்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன், திடீரென தோழர் தமிழரசனை இழுத்தார்.
“தோழர் தமிழரசன் வன்னியர் சமூகத்தை சேர்ந்த தமிழ்தேசிய போராளி. எந்த வன்னியர் வீட்டிலும் தங்கமாட்டார். பறையர் வீட்டில்தான் தங்குவார், மாட்டுக்கறி விரும்பி சாப்பிடுவார். வன்னியர்களை நம்பமாட்டார். காட்டிக்கொடுத்து விடுவார்கள் என்று தமிழரசனே என்னிடம் சொன்னார்!” என்பதாக பேசி வருகிறார்
அவ்வளவுதான். இந்த 30 வினாடி வீடியோவை கட் செய்து சோஷியல் மீடியாவில் விட, தீயாய் பரவியது.

யார் இந்த தமிழரசன்? திருமா ஏன் அவரை இழுக்கிறார்? தமிழரசன் சாதாரண ஆள் இல்லை. • தமிழ்நாடு பொதுவுடைமை கட்சியின் நிறுவனர் மற்றும் தமிழ்நாடு விடுதலைப்படையை உருவாக்கியவர். • கடலூர் மாவட்டத்தில் பிறந்து, 9 ஆண்டு சிறைவாசம், நீண்ட தலைமறைவு வாழ்க்கை என தமிழ்தேசியத்துக்காகவே வாழ்ந்தவர். • அவரது கொள்கையே இரண்டுதான்: 1. இந்தியாவில் இருந்து தமிழ்நாடு விடுதலை 2. சாதி ஒழிப்பு
1985-ல் நடந்த மீன்சுருட்டி மாநாட்டில் “சாதி இருக்கும் வரை தமிழ்தேசியம் சாத்தியமில்லை” என்று வரலாற்று சிறப்புமிக்க அறிக்கை கொடுத்தவர் அவர். இப்படிப்பட்ட சாதி ஒழிப்பு தலைவரைப் போய், வன்னியர் Vs பறையர் சண்டைக்கு திருமா இழுப்பதா? என்பதுதான் இப்போது எழும் மிகப்பெரிய கேள்வி.
வெடித்து கிளம்பிய எதிர்ப்பு!

இந்த விவகாரத்தில் ஆச்சரியம் என்னவென்றால், விசிக-வை முதல் ஆளாக கண்டித்தது தலித் சமூகத்தை சேர்ந்தவர்களே தான்.
மூத்த விமர்சகர்களான தடா பெரியசாமி, தமிழா தமிழா பாண்டியன் போன்றோர் இதை பகிரங்கமாக “பச்சை சாதிவெறி பேச்சு” என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.
வன்னியர் அமைப்புகள் தரப்பில், “ஒரு பொறுப்பான எம்.பி., பொது மேடையில் வன்னியர்களை துரோகிகள் போல சித்தரிப்பதா? இது திட்டமிட்ட அவதூறு. தமிழரசன் பெயரைச் சொல்லி திருமா பொய் சொல்கிறார்” என்று கொந்தளிக்கின்றனர்.
“தமிழரசன் வன்னியர் வீட்டில் தங்கலையா? அதற்கு திருமாவிடம் ஆதாரம் இருக்கா?” என்ற கேள்வியும் வலுக்கிறது.
விசிக-வின் சமாளிப்பு எடுபடுமா? சர்ச்சை வெடித்ததும் விசிக தரப்பு வழக்கம்போல் ஒரு விளக்கம் கொடுக்கிறது: “தலைமறைவு காலத்தில் போலீஸ் இன்ஃபார்மர் பயம் அதிகம். அதனால் ஒடுக்கப்பட்ட பறையர் மக்கள் தன்னை காட்டிக்கொடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அங்கு தங்கினார். இது வன்னியர்களை இழிவுபடுத்த அல்ல” என்கிறது
ஆனால் இந்த விளக்கத்திற்கு எதிராக தோழர் தமிழரசனின் ஆசானாக விளங்கிய கலியபெருமாளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், தமிழரசனின் நெருங்கிய தோழர்களான லெனின், வடமலை போன்றோரும், “தமிழரசன் இறப்பதற்கு முன்பு வரை வன்னியர் வீடுகளில்தான் தங்கியிருந்தார்” என ஆதாரங்களுடன் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மற்றொரு தரப்பினர், “தோழர் தமிழரசன் சாதி ஒழிப்பில் தீவிரமாக இருந்ததால், சாதி கடந்த ஒற்றுமையை வலியுறுத்தவே தலித் மக்களின் வீடுகளில் தங்கியிருந்தாரே தவிர, பயத்தின் காரணமாக அல்ல” என விளக்கம் அளிக்கின்றனர்.
இறுதியான கேள்வி ? 80-களில் நடந்த ஒரு தனிப்பட்ட பாதுகாப்பு விஷயத்தை, 2026-ல் வன்னியர் – பறையர் பதற்றம் உச்சத்தில் இருக்கும் இந்த பொன்பரப்பி காலகட்டத்தில், பொது மேடையில் “வன்னியர்களை நம்பமாட்டார், காட்டிக்கொடுத்துவிடுவார்கள்” என்று First Person-ல் சொல்வது அரசியல் பிளவை ஏற்படுத்தாதா?
இது தமிழரசன் கண்ட சாதி ஒழிந்த தமிழ்தேசியமா? இல்லை திருமா கையில் எடுத்துள்ள புதிய சாதி அரசியலா?
தமிழரசன் கனவு கண்டது சாதி ஒழிப்பு. ஆனால் இன்று அவர் பெயரைச் சொல்லியே சாதி வெறி பேச்சு பேசப்படுகிறது என்பதுதான் வேதனையின் உச்சம்.
இதற்கு திருமாவளவன் பகிரங்க மன்னிப்பு கேட்பாரா? அல்லது வழக்கம்போல் “வரலாற்றை திரிக்கிறார்கள்” என்று சொல்லி தப்பிக்க பார்ப்பாரா?.

