2027ல் தங்கத்தின் விலை எவ்வாறு இருக்கும் என்று பிரபல நிபுணர் ஒருவர் கணித்திருக்கிறார். இது தங்கம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் மாதம் முதல் தங்கத்தின் விலை என்பது தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. தற்போது 1கிராம் தங்கத்தின் விலை என்பது 13660 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் வரும் நாட்களில் தங்கத்தின் விலை குறையும் என்றே சிலர் கணித்திருந்தனர்.
குறிப்பாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய் வரை எதிர்காலத்தில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க மத்திய வங்கியான பெட் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வட்டி விகதங்களை உயர்த்த கூடும் என்பதால் தங்கம் விலை குறையும் என்றும் சந்தை நிபுணர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் தங்கத்தின் விலை எதிர்காலத்தில் என்னவாக இருக்கும் என்றும் குறிப்பாக 2027ஆம்ஆண்டில் என்னவாக இருக்கும் என்றும் அமெரிக்கன் ஹாட்பூட் கோல்ட் நிறுவனத்தின் தலைவர் மேக்ஸ்பெக்கர் தெரிவித்திருக்கிறார்.

அதாவது அமெரிக்காவின் 10 ஆண்டு கால வாங்கும் ஈவு தொகை கணிசமாக உயர்ந்திருந்தாலும் அதிகரித்து வரும் அரசு கடன் சுமை புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக தங்கம் தொடர்ந்து பலம் பெறும் என்று மேக்ஸ்பெக்கர் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவின் 10 ஆண்டு கால பாண்ட் ஈவு தொகை 5.35%ஆக உயர்ந்ததால் தங்கம் விலையில் அழுத்தம் ஏற்பட்டது. இருப்பினும் பெரிய அளவிலான சரிவு எதுவும் பதிவாகாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
எனவே நீண்ட காலத்திற்கு தங்கம் வாங்குவது ஒரு நிலையான விலை ஆதரவை வழங்கும் என்று கூறிய மேக்ஸ்பெக்கர் பல நாடுகளில் அதிகரித்து வரும் நிதி பற்றாக்குறை பொருளாதார மந்தநிலை குறித்த கவலைகளால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருவதாகவும் கூறியிருக்கிறார். 2027ஆம் ஆண்டை பொறுத்தவரை தங்கம் மீதான விலை உயர்வு தொடர்ச்சியாக அதிகமாக இருக்கும் என்றும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ச்சியாக தங்கத்தை வாங்கி குவிப்பதால் நீண்ட காலத்தில் தங்கத்தின் மதிப்பு குறைய வாய்ப்பு மிக மிக குறையும் என்றும் கூறியிருக்கிறார்.
சமீப காலங்களாக குறைந்த தங்கத்தின் விலை இன்னும் வரும் காலங்களில் குறையும் அப்போது வாங்கி
கொள்ளலாம் என்று நினைத்திருந்த நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
