Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Congress

“டெல்லி… அந்தப் பெயரைக் கேட்டாலே இப்போதெல்லாம் தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கு மட்டுமல்ல, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கே காய்ச்சல் வந்துவிடுகிறது. 

காரணம், கடந்த நவம்பர் 1-ம் தேதி தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி, எஸ்.ஐ.ஆர். முறைகேடு என்கிற பிரம்மாண்ட பேனரைத் தூக்கிக்கொண்டு, இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் மேலிடம் டெல்லியில் நடத்திய பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்!

அந்த ஆர்ப்பாட்டம் டெல்லியில் நடந்து முடிந்துவிட்டது. ஆனால், அதன் அதிர்வலைகள் இன்னும் சத்தியமூர்த்தி பவனை உலுக்கிக்கொண்டிருக்கின்றன!

10 நாட்களுக்கு முன்பே வந்த உத்தரவு! ‘கூட்டத்தைக் காட்டு… கெத்தைக் காட்டு!” – இதுதான் டெல்லி மேலிடம் கொடுத்த ஒற்றை வரி மந்திரம். இந்த ஆர்ப்பாட்டத்துக்காக சுமார் 10 நாட்களுக்கு முன்பே ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியே ஆள் கணக்கு ஒதுக்கி உத்தரவு போட்டுவிட்டது மேலிடம்.

அதில், தமிழகத்தின் தலையில் விழுந்த குண்டு… 2,000 பேர்! கணக்கு ரொம்ப சிம்பிள். தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் குறைந்தபட்சம் 50 பேரைப் பிடித்து டெல்லிக்கு அழைத்து வந்தாக வேண்டும்!

சத்தியமூர்த்தி பவனில் வெடித்த பூகம்பம்! – மேலிடத்தின் இந்த உத்தரவு சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து சேர்ந்த அடுத்த நிமிடமே, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அவசர அவசரமாக மாவட்டத் தலைவர்களுக்கு போன் போட்டிருக்கிறார்.

இதையும் படியுங்க  இனி வீட்டிலிருந்தே வேலை..! நாளை முதல் அமல்..! அதிரடி கட்டுப்பாடுகளால் அதிரும் அதிகாரிகள்..!

“இது மேலிட உத்தரவு… 10 நாள் டைம் இருக்கு… செய்தே ஆகணும்!” – கொஞ்சம் சீரியஸான தொனியில் அவர் வலியுறுத்த… அவ்வளவுதான்!

மறுமுனையில் இருந்த மாவட்டத் தலைவர்கள் அத்தனை பேரும் ஒன்றாகச் சேர்ந்து கோரஸாகப் பாடிய ஒரே பாட்டு… “முடியாது!”

“தலைவரே… யோசிச்சுப் பாருங்க. ஒரு மாவட்டத்திலிருந்து 50 பேரை டெல்லிக்குக் கூட்டிட்டுப் போறதுன்னா சாதாரண விஷயமா? ரயிலில் டிக்கெட் கிடைக்கிறது கஷ்டம். விமானத்தில்தான் போயாகணும். அந்த ஃப்ளைட் சார்ஜ், டெல்லியில் தங்குவதற்கான ஹோட்டல் பில், மூன்று நாட்களுக்கான சாப்பாட்டுச் செலவு என்று கூட்டிக் கழித்துப் பார்த்தால்… ஒரு மாவட்டத்துக்கே சில பல லட்சங்கள் தேவைப்படும். அவ்வளவு பணத்துக்கு நாங்க எங்கே போவோம்? எங்களிடம் அந்தப் பொருளாதாரச் சூழல் இல்லை. கட்சியே மொத்தச் செலவையும் ஏற்றுக்கொண்டால், ஆள் கூட்டி வரும் பொறுப்பு எங்களுடையது!” என்று வெளிப்படையாகவே கைவிரித்துவிட்டனர்.

‘சுர்’ரென்று ஏறிய கோபம்… பாய்ந்த புலிகள்! -மாவட்டத் தலைவர்களின் இந்த பதிலடியைக் கேட்டு மாணிக்கம் தாகூருக்கு ‘சுர்’ரென்று கோபம் தலைக்கேறிவிட்டதாம்.

இதையும் படியுங்க  தவெக போட்ட மாஸ்டர் பிளான்..! எடப்பாடிக்கு அமித் ஷா வைத்த செக்..! வேலுமணியின் சீக்ரெட் மூவ்..?

“மாவட்டத் தலைவர் பதவி வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிக்கொள்கிறீர்கள்… ஆனால், மேலிடம் ஒரு வேலை சொன்னால் ஆயிரம் காரணம் சொல்கிறீர்கள்? உங்களால் முடியாது என்றால் எதற்கு உங்களுக்குப் பதவி?” என்று கடுப்படித்திருக்கிறார்.

அவ்வளவுதான்… இத்தனை நாள் பதுங்கியிருந்த புலிகள் அத்தனையும் ஒட்டுமொத்தமாகப் பாய்ந்துவிட்டன!

“எங்களுக்குப் பதவி கொடுத்தது மாவட்டத்தில் கட்சி வேலை பார்க்க… கட்சியை வளர்க்க! மாவட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்… செய்கிறோம். அதைவிட்டுவிட்டு, சொந்தக் காசில் டெல்லிக்கு ஆள் கூட்டி வாருங்கள் என்றால் எப்படி முடியும்?”

இத்தோடு நிற்கவில்லை. உள்குத்து விவகாரத்தையும் எடுத்துவிட்டிருக்கிறார்கள்!

“75 வருஷத்துக்கு அப்புறம் இப்போதான் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. இரண்டு பேர் அமைச்சராக இருக்கிறார்கள். அவர்களால் எங்களுக்கு என்ன பிரயோஜனம்? எங்கள் பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ள அவர்கள் என்ன திட்டம் போட்டார்கள்? ஒன்றுமே இல்லையே! நாங்கள் நன்றாக இல்லை… ஆனால், யார் யார் நன்றாக இருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியாமல் இல்லை!” என்று எகிறியிருக்கிறார்கள்.

அதாவது, ‘நீங்க மட்டும் சம்பாதிப்பீங்க… நாங்க மட்டும் செலவு பண்ணுவோமா?’ என்கிற ரேஞ்சுக்கு வாக்குவாதம் போயிருக்கிறது!

நவம்பர் 1-ல் நடந்தது என்ன?

 இந்த உட்கட்சி மோதலின் எதிரொலியாகத்தான் நவம்பர் 1-ம் தேதி டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸின் பங்களிப்பு பரிதாபமாகிப் போனது.

இதையும் படியுங்க  விஜய் ஆட்சியில் சபாஷ்..! மாதம் ரூ 51 கோடி மிச்சம்..! மதுபான கொள்முதலில் இனி வெளிப்படைத்தன்மை..!

மேலிடம் கேட்டது 2,000 பேர். 10 நாட்கள் அவகாசம் கொடுத்தும், தமிழகத்திலிருந்து டெல்லி சென்றவர்கள் வெறும் 100 பேர் கூட இல்லை என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்!

மற்ற மாநிலங்கள் ஆயிரக்கணக்கில் ஆட்களைக் குவித்து ‘கெத்து’ காட்டியபோது, தமிழக கோஷ்டி கையில் கொடி கூட இல்லாமல் காணாமல் போனது மேலிடத்தின் கண்களை உறுத்திவிட்டது.

மாணிக்கம் தாகூரை ‘வறுத்தெடுத்த’ மேலிடம்! – இதனால் டென்ஷனான டெல்லி மேலிடம், ஆர்ப்பாட்டம் முடிந்த கையோடு தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரை அழைத்து கடுமையாக வறுத்தெடுத்துவிட்டதாம்.

“10 நாள் டைம் கொடுத்தும் 2,000 பேரைக் கூட்ட முடியலைன்னா… நீங்க எப்படித் தலைவர்? மாவட்டத் தலைவர்களைக் கட்டுப்படுத்த முடியலைன்னா என்ன அர்த்தம்?” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

ஒரு பக்கம் மேலிடத்தின் பிரஷர்… இன்னொரு பக்கம் மாவட்டத் தலைவர்களின் ‘நோ’ சொல்லும் பட்ஜெட்! இதில் சிக்கி முழித்துக்கொண்டிருக்கிறார் மாணிக்கம் தாகூர்.

டெல்லி ஆர்ப்பாட்டத்தை விட, தமிழக காங்கிரஸின் இந்த உட்கட்சி ஆர்ப்பாட்டம்தான் இப்போது சத்தியமூர்த்தி பவனில் பிரம்மாண்டமாக நடந்துகொண்டிருக்கிறது.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 hours ago at 8 hours ago