Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Anbil Mahesh

தமிழக அரசியல் களம் இப்போது புழல் சிறையை நோக்கித் திரும்பியிருக்கிறது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காகப் பல நூறு கோடி ரூபாய் சுருட்டிய வழக்கில், தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் அரங்கேறி வரும் அடுத்தடுத்த திருப்பங்கள், தி.மு.க மேலிடத்தை உலுக்கி எடுத்துள்ளது.

நம்பவைத்து கழுத்தறுத்த வில்சன்?
அக்டோபர் 26-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனு அதிரடியாகத் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் விளைவாகவே அவர் களி தின்னும் நிலை ஏற்பட்டது. ஆரம்பத்தில் இந்த வழக்கைக் கையில் எடுத்தது யார் தெரியுமா? தி.மு.க-வின் மிக முக்கிய சட்ட முகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான பி. வில்சன் தான். “உயர் நீதிமன்றம் நிச்சயம் முன்ஜாமீன் தந்துவிடும், கவலையே படாதீங்க” என்று அன்பில் மகேஷுக்கு அதீத நம்பிக்கையை ஊட்டியிருந்தார் வில்சன். ஆனால், கோர்ட் கொடுத்த அடியில் முன்ஜாமீனும் போச்சு, பதவியும் போச்சு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார் அன்பில் மகேஷ்.

இதையும் படியுங்க  அதிமுக- தவெகவினர் இடையே பயங்கர மோதல்… காருக்குள் சிக்கிய சத்தியபாமா, 5 அமைச்சர்கள்..!
Anbil makesh

திடீரென கழற்றி விடப்பட்ட தி.மு.க எம்பி
வழக்கு கஸ்டடி விசாரணைக்கு வந்தபோதுதான் அந்த அதிரடித் திருப்பம் நிகழ்ந்தது. “நம்பிக்கை துரோகம்” நடந்துவிட்டதாகக் கொதித்துப் போன அன்பில் மகேஷ் தரப்பு, தி.மு.க எம்பி வில்சனை ஒட்டுமொத்தமாகக் கழற்றி விட்டுள்ளது. அவருக்குப் பதிலாக, அபுதுகுமார் ராஜரத்தினம் என்ற மூத்த வழக்கறிஞர் இப்போது கோதாவில் இறக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த ராஜரத்தினம்?
இங்குதான் அரசியல் வட்டாரமே உற்று நோக்கும் அந்தப் பயங்கர ட்விஸ்ட் ஒளிந்திருக்கிறது. இப்போது அன்பில் மகேஷுக்காக வாதாட வந்திருக்கும் இந்த ராஜரத்தினம், சாதாரண ஆள் கிடையாது. கடந்த 2001-2006 அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் அரசு வழக்கறிஞராக பவர்ஃபுல்லாக வலம் வந்தவர்.

உட்கட்சி பஞ்சாயத்தா? ஈகோ யுத்தமா?
ஆளுங்கட்சி எம்பியை ஓரங்கட்டிவிட்டு, அ.தி.மு.க பின்னணி கொண்ட ஒரு வழக்கறிஞரை தி.மு.க முன்னாள் அமைச்சர் தன் உயிரைக் காக்கத் தேடிப் போயிருப்பது அறிவாலய வட்டாரத்தில் பெரும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.

வில்சன் கொடுத்த ஓவர் கான்ஃபிடன்ஸால் ஏமாந்து போன கடுப்பில் அன்பில் மகேஷ் எடுத்த முடிவா இது?
அல்லது கட்சித் தலைமைக்கும், முன்னாள் அமைச்சருக்கும் இடையே ஏதேனும் உள்விவகாரப் பகை மூண்டுள்ளதா? வில்சனை விட இந்த அ.தி.மு.க காலத்து வழக்கறிஞர் தங்களுக்குச் சாதகமான ரிசல்ட்டை வாங்கித் தருவார் என்ற அதீத கணக்கா?

இதையும் படியுங்க  பத்து தோல்வி பழனிசாமியா..? அதை 'படுதோல்வி ஸ்டாலின்' சொல்வதா..? அதிமுக அதிரடி விமர்சனம்..!

காரணங்கள் எதுவாக இருந்தாலும், தி.மு.க-வின் முக்கிய சட்ட வல்லுநரை ஒரு கைதி கழற்றி விட்டிருப்பது, கட்சிக்குள்ளும் சட்ட விவாத மேடைகளிலும் பெரும் காரசாரமான விவாதங்களை எரியூட்டியுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago