திமுக முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். வருமானவரி கட்டுகிறவர் என்பதால் அவருக்கு ஏ- கிளாஸ் பிரிவு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த ரூம் கடந்த திமுக ஆட்சியில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி இருந்த ரூம்.
இப்போது ஜெயிலுக்குள் இன்னொரு எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது காலையில் இருந்து
சாயங்காலம் வரை ஜெயிலில் உள்ள அந்த ரூம்கள் திறந்துதான் இருக்கும். அந்த வளாகத்துக்குள் நடந்து போய் வரலாம்.
அப்படித்தான் நேற்றும் நேற்றைய முன் தினமும் ரெண்டு நாட்களாக அன்பில் மகேஷ் தன்னுடைய ரூமுக்கு பக்கத்து ரூமில் இருக்கிற போக்சோ சட்டப்புகழ் ஜெம் கிரானைட்ஸ் வீரமணியை சந்தித்து இருவரும் பேரும் மாறி மாறி நலம் விசாரித்து இருக்கிறார்கள். ஜெம் வீரமணி ஏற்கனவே திமுக ஆட்சியில் அவர் மீது சட்ட நடவடிக்கை
எடுக்கப்படாமல் தப்ப வைத்தார்கள் என்கிற மிகப்பெரிய அரசியல் குற்றச்சாட்டு எழுந்து இப்போது அவர் மீது அடுக்கடுக்கான வழக்குகள் போடப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷும், ஜெம் கிரானைட்ஸ் வீரமணியும் ஜெயிலில் கேப் கிடைக்கிற போதெல்லாம் சந்திக்கிறார்கள். இந்த இருவருக்கும் இப்போது ஒரே பொது எதிரி என்றால் அது முதலமைச்சர் விஜய் என்பதால் அவரது ஆட்சியை பற்றி அவர்களது அதிருப்தியை பகிர்ந்து கொள்கிறார்கள்.
அன்பில் மகேஷ் ஜெயிலில் யாரெல்லாம் சந்திக்கிறார் என்பது வரை முதலமைச்சருக்கு உடனுக்குடன் ரிப்போர்ட் போய்க் கொண்டே இருக்கற நிலையில்தான் ஜெம் கிரானைட்ஸ் வீரமணியை தினந்தோறும் அன்பில் மகேஷ் சந்தித்து பேசிக் கொண்டு வருகிறார் என்கிற தகவலும் முதல்வர் கவனத்துக்கு கொண்டு போயிருக்கிறார்கள். அதனால் எல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை ஆனா சீக்கிரமா அவரை நீதிமன்ற காவலில் இருந்து
போலீஸ் கஸ்டடியில் எடுக்க பாருங்க என உத்தரவு பிறக்க ஏற்கனவே ஐந்து நாள் போலீஸ் கஸ்டடி கேட்டு சிசிபி போலீசார் அன்பின் மகேஸ் பொய்யா மொழியை அக்டோபர் 30ஆம் தேதியான இன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து நீதிபதி முன் நிறுத்தினார்கள்.

அவருடைய வழக்கறிஞர்கள் ஏற்கனவே அனைத்து மின்னணு சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் எல்லாம் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனால் போலீஸ் காவல் தேவையில்லை என்றும் அவருக்கு கனை அலர்ஜி இருக்கிறது. இந்த உடல்நல குறைவு இருப்பதால் ஜாமீன் வழங்க வேன்டும் எனச் சொல்லி அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர்கள் போலீஸ் கஸ்டடி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார். இந்த இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி சிசிபி போலீசார் கேட்ட அந்த ஐந்து நாள் எல்லாம் கஸ்டடி கொடுக்க முடியாது. அன்பில் மகேஷுக்கு மூணு நாள் மட்டும் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி தரேன் எனஅனுமதி கொடுக்கிறார்.
அதோட சில கண்டிஷனையும் போடுகிறார். இந்த 3 நாள் போலீஸ் கஸ்டடி காலத்தில் அன்பில் மகேஷ் தினமும் அவருடைய வழக்கறிஞர்கள் வந்து சந்தித்து பேசலாம். விசாரணை காலத்தில் அன்பில் மகேஷை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்தல் செய்யக்கூடாது. அவருக்கு தேவையான உணவு, மருத்துவ வசதிகள் எல்லாவற்றையும் முறையாக, சரியாக காவல்துறை செய்து கொடுக்க வேண்டும் என நீதிபதி சத்தியமூர்த்தி அறிவுறுத்தலோடு 3 நாள் கஸ்டடியை கொடுத்திருக்கிறார்.
