Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Rain

வங்கக் கடலில் உருவாகியுள்ள முரசு புயல் சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 420 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்தப் புயல் நாளை நள்ளிரவில் ஆந்திராவின் ஓங்கோல் அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள முரசு புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இன்று மாலை 5.30 மணி நிலவரப்படி, இந்தப் புயல் சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 420 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

மேலும், ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு கிழக்கு-தென்கிழக்கே 490 கி.மீ., மச்சிலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 500 கி.மீ., காவலிக்கு கிழக்கு-தென்கிழக்கே 510 கி.மீ., ஓங்கோலுக்கு தென்கிழக்கே 530 கி.மீ., விசாகப்பட்டினத்துக்கு தெற்கு-தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. முரசு புயல் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (நவம்பர் 2) அதிகாலைக்குள் மத்திய மேற்கு வங்கக் கடலில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.

இதையும் படியுங்க  'அவன் ஒரு பொம்பள பொறுக்கிமா..! காலைப் பிடித்து கதறிய தாய், தந்தை… உதறி காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி..!

அதன்பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 2-ந் தேதி இரவு 11.30 மணி முதல் நவம்பர் 3-ந் தேதி அதிகாலை 4 மணிக்குள் ஆந்திர மாநிலத்தின் நெல்லூர்–நரசாபுரம் இடையே, பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் அருகே தீவிர புயலாகக் கரையைக் கடக்கக்கூடும். புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடையிடையே மணிக்கு 120 கி.மீ. வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடும். என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முரசு புயல் கனமழை எச்சரிக்கையால் நாளை 2.11.2026 திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 minutes ago at 10 minutes ago