Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

”அதிமுகவில் சாதாரண அடிப்படை உறுப்பினராவது என்னை சேர்த்துக்கங்கப்பா” என எடப்பாடி பழனிசாமியிடம் ஓபிஎஸ் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார். ஆனால் அண்ணன் எடப்பாடியோ கொஞ்சமும் இறக்கப்படாமல் ”முடியவே முடியாது. கெட் அவுட்” என கையை விரித்ததால் வேறு வழியே இல்லாமல் போன சட்டமன்ற தேர்தலுக்கு முன் கடைசி நேரத்தில் சென்று திமுகவில் தஞ்சம் அடைந்தார் ஓபிஎஸ்.

”வாங்க வாங்க வாங்க.. உங்களத்தான் எதிர்பார்த்தோம். நீங்க எங்க கட்சிக்கு வர்றதுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்” எனச் சொல்லி திமுகவில் அவருக்கு எம்எல்ஏ சீட்டு கொடுத்து ஜெயிக்கவும் வைத்தார்கள். ஆனால் தேர்தல் முடிவில் தவெக தனிப்பெரும்பான்மையோட ஜெயிச்சு ஆட்சி அமைச்சதும் ”ஆஹா போட்ட கணக்கெல்லாம் தப்பாயிடுச்சு. கட்டி வச்ச மனக்கொட்டை எல்லாம் இப்படி சுக்குநூறா உடைஞ்சிருச்சே. அடுத்த அஞ்சு வருஷத்துக்கு நாம என்ன பண்றது” என திமுகவில் இப்ப கொஞ்சம் மனக்கசப்போடதான் சுத்திட்டு இருக்காராம் ஓபிஎஸ்.

Republic Tamil

திமுக ஆளுங்கட்சியாக வர முடியாமல் போனதால் அங்கே ஓபிஎஸ் எதையோ பெருசா எதிர்பார்த்து போனாரு பாருங்க. அந்த காரியங்கள் எதுவுமே இன்னைக்கு வரைக்கும் நடக்கவே இல்லை. ”என்னைப்பற்றிக்கூட எனக்கு கவலை இல்லைங்க. ஆனால் என் மகன் முன்னாள் எம்.பி., ரவீந்திரநாத்தோட அரசியல் எதிர்காலம் என்ன ஆகுமோங்கிற பயம்தாங்க எனக்கு மனசுல ஓடிட்டே இருக்கு. அதுதான் என் கண்ணு முன்னாடி வந்து வந்து போகுது” என புலம்பிக்கொண்டு இருக்கிறாராம் ஓபிஎஸ்.

இதையும் படியுங்க  "திமுகவின் 8 மாஜிக்களுக்கு 'செக்'..! விஜய்யின் ஊழல் ஆக்சன்..! ஸ்டாலினின் பாஜக ரூட்..!?

இந்த நிலைமையில்தான் ”தலைவா இன்னைக்கு செங்கோட்டையன் இருக்கற இடத்துல நீங்கதான் கெத்தா இருந்திருக்கணும். பார்க்கலாம்… பார்க்கலாம்னு சொல்லி காலம் கடத்தி எல்லாம் போச்சு. இப்பவும் ஒன்னும் நஷ்டம் இல்லை. இப்ப வாச்சும் கொஞ்சம் முயற்சி பண்ணி பாருங்களேன்”னு அவரோட ஐடியா மணிங்க சில பேர் ஓபிஎஸ் காதில் ஓதிட்டு போயிருக்கிறார்கள். இதை கேட்டதும் உசுப்பேறிப்போன ஓபிஎஸ் தனக்கு ரொம்பவே வேண்டப்பட்ட தொழிலதிபர் சேகர் ரெட்டி மூலமாக முதலமைச்சர் விஜய்க்கு நெருக்கமான விஷ்ணு ரெட்டியை சந்திப்பதற்கு ரகசியமாக தூது விட்டு இருக்கிறார். ஆனால், இந்த விஷயம் தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காதுக்கு போகவும் ”ஆஹா வண்டி இங்கேயும் வர பார்க்குதா? நாங்க இருக்கறப்ப இதெல்லாம் நடக்கறதுக்கு சான்சே இல்லை” என கதவை இருக்க முடி லாக் பண்ணிவிட்டாராம். முக்கியமாக செங்கோட்டையனுக்கும் இதில் துளியும் விருப்பம் இல்லையாம்.

இப்படி அப்பா ஒரு பக்கம் விஷ்ணு ரெட்டி மூலமாக ரூட் போட்டுக்கொண்டு இருக்க, அவரோட மகன் ரவீந்திரநாத் இன்னொரு பக்கம் ஓல்ட் ஏஜ் பீப்பிள்ஸை வைத்து மூவ் பண்ணா வேலைக்கு ஆகாது. நாம கேட்க வேண்டிய இடத்தில் கேட்டு காய் நகர்த்த வேண்டிய இடத்தில் நகர்த்தினால் ஆட்டோமேட்டிக்காக நமக்கு நடக்க வேண்டியது நடக்கும் என நடிகை திரிஷா மூலமாக விஜயை நெருங்குவதற்கான முயற்சி செய்து இருக்கிறார். ரவீந்திரநாத், திரிஷா மூலமாகவா..? எப்படிங்க? எனக் கேட்டால் திரிஷாவும், ரவீந்திரநாத்தும் பல வருஷமா நல்ல திக் பிரண்ட்ஸ்தான். இந்த அறிமுகத்தை வைத்து திரிஷாவிடம் பேசிய ரவீந்திரநாத், ”நீங்க சொன்னால் விஜய் அண்ணன் கண்டிப்பா கேட்பாரு. எனக்காக கொஞ்சம் பேசி பாருங்களேன்.. ப்ளீஸ்” என திரிஷா மூலமாக தவெகவில் இணைய பிளான் போட்டு காய் நகர்த்தி இருக்கிறார்.

இதையும் படியுங்க  விஜய்யை நம்பி ஏமாந்த காங்கிரஸ்: கதவை சாத்திய ஸ்டாலின்… டெல்லியை அதிரவைத்த 'பிளான் பி'!

ஆனால் என்ன பிரச்சனை என்றால் அவர் நகர்த்தின காய் எங்கேயும் நகராமல் அவர் நகர்த்தி வைத்த அதே இடத்திலயே அப்படியே நிற்கிறது. இன்று வரை எந்தப் பதிலும் அங்கிருந்து வரவில்லையாம். ஆனால் காமெடி என்னவென்றால் திரைமறைவில் இவ்வளவு பெரிய ஸ்கெட்ச் போட்டு அப்பாவும், மகனும் வேலை பாத்துக்கொண்டு வெளியில் ”ஐயோ சாமி? எதை வைத்து இப்படி எல்லாம் வாய்க்கு வந்ததெல்லாம் சொல்றீங்க. நான் தவெகவில் இணைய போறேன்னு வர்றதெல்லாம் அப்பட்டமான வதந்திங்க” என ஓபிஎஸ் செம சாதுவாக மறுத்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் இவர் உள்ளுக்குள் நடத்துகிற அத்தனை கள்ளாட்டமும் திமுகவுக்கு நன்றாகத் தெரியும். என்னதான் பண்றாருன்னு பார்ப்போம்” என திமுக தரப்பில் அவர்களை நோட்டம் செய்து கொண்டிருக்கிறார்களாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago