லயோலாமணி பாடநூல் கழக தலைவரா? இல்லை பள்ளி கல்வித்துறை அமைச்சரா? என கல்வித்துறை அதிகாரிகள் கேள்வி கேட்கத் துவங்கி இருக்கிறார்கள். சமீப காலமாக பாடநூல் கழகத் தலைவரான அவரத கெடுபிடிகள் கல்வித்துறையில் அதிகமாகிக் கொண்டே வருவதாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் தவெக கொள்கையை பரப்பும் நபராக அறியப்பட்ட லயோலா மணி தவெக அமைந்த உடன் கல்வித்துறையில் பாடநூல் கழக தலைவராக நியமிக்கப்பட்டார். மாணவர்களுக்கான புத்தகங்களை தயாரிப்ப, அதை சீராக வினியோகப்படுத்துவதான் லயோலாமணியின் பொறுப்பு. ஆனால் பள்ளிக்கல்வித்துறை ஆய்வுகளில் லயோலாமணியும் கலந்து கொள்கிறார்.
தனி ரூட்டில் அதிகாரிகளுக்கு ஆர்டர் போடுகிறாராம். பல சமயங்களில் கல்வித்துறை இயக்குனர்களையும், உதவி இயக்குனர்களையும் தேவையில்லாம காக்க வைக்கிறாராம். அவர்களிடம் தேவையில்லாத கேள்விகளை கேட்பது, மரியாதை குறைவாக நடந்து கொள்வது என லயோலாமணி மீதான கல்வித்துறை அதிகாரிகளின் குற்றச்சாட்டுகள் நீண்டுகொண்டே போகிறது.
இதற்கிடையில் காலை உணவு ஆய்வு என்கிற பேரில் பள்ளிகளுக்கு விசிட் அடிக்கிற லயோலா மணி அங்கே ரீல்ஸ் எடுத்து போடுவதும், அங்கே இருக்கிற கல்வித்துறை முதன்மை அதிகாரிகளுக்கு உணவை ஊட்டி ரீல்ஸ் போடுகிறாராம். மைச்சருக்கு இணையான அதிகாரப் பசியோடு வலம் வரும் லயோலா மணியின் இந்தத் தொடர் அத்துமீறல்கள் குறித்து யாரிடம் புகார் செய்வது என்று தெரியாமல் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர். கட்சிப் பின்னணி மற்றும் முதலமைச்சருக்கு நெருக்கமானவர் என்ற பிம்பத்தைக் காட்டி அவர் மிரட்டுவதால், துறையின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூட மௌனம் காப்பதாகத் தெரிகிறது.
கட்சி வேறு, அரசாங்க நிர்வாகம் வேறு என்பதை உணராமல், த.வெ.க ஆட்சியின் பெயரைக் கெடுக்கும் வகையில் லயோலா மணி நடத்தி வரும் இந்த ‘அதிகார அத்துமீறல் நாடகங்களுக்கு’ முதலமைச்சர் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கல்வித்துறை அதிகாரிகளின் தற்போதைய குமுறலாக உள்ளது.
