கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவி வகித்தபோது, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தடையில்லாச் சான்றிதழ் பெற்றுத் தருவதாகக் கூறி, இடைத்தரகர்கள் மூலம் ரூ.100 கோடி முதல் ரூ.400 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இந்த வழக்கில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முத்துக்குமார் என்பவரின் வங்கிக் கணக்குகளில் இருந்து, சென்னையில் ஜவுளி மற்றும் ஆடை வணிகத்தில் ஈடுபட்டு வரும் பெண் தொழிலதிபர் சண்முகப்பிரியாவின் வங்கிக் கணக்குகளுக்குப் பெருமளவில் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அந்தப் பணப் பரிவர்த்தனைகளின் பின்னணி குறித்தும், அவை லஞ்சப் பணத்துடன் தொடர்புடையவையா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சண்முகப்பிரியா, ‘Aphrodite Drapes’ என்ற பெயரில் ஆடை மற்றும் ஜவுளி வணிகத்தை நடத்தி வருகிறார். இவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தொடர்பு வட்டாரத்தில் உள்ள முக்கிய நபராகக் கருதப்படுகிறார். கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் வசிக்கும் கிரீன்வேஸ் சாலைப் பகுதியில் அவர் வசித்து வந்ததாகவும், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு நீலாங்கரைப் பகுதிக்கு மாறியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகிய நிலையில், அவரது மனு நிராகரிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சண்முகப்பிரியா, ‘Aphrodite Drapes’ என்ற பெயரில் ஆடை மற்றும் ஜவுளி வணிகத்தை நடத்தி வருகிறார். இவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தொடர்பு வட்டாரத்தில் உள்ள முக்கிய நபராகக் கருதப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் வசிக்கும் கிரீன்வேஸ் சாலைப் பகுதியில் அவர் வசித்து வந்ததாகவும், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு நீலாங்கரைப் பகுதிக்கு மாறியதாகவும் கூறப்படுகிறது.

சண்முகப்பிரியாவுக்குச் சொந்தமான சென்னை பெருங்குடியில் உள்ள ராம்ஸ் ராகஸ்ரீ வில்லாஸ் பகுதியில் அமைந்துள்ள இல்லம் மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 10-க்கும் மேற்பட்ட போலீஸார் சோதனை நடத்தினர். நீலாங்கரையில் உள்ள அவரது குடியிருப்பிலும் சோதனை நடத்தப்பட்டன. சண்முகப்பிரியாவின் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்துள்ள நிலையில், கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் இந்த வழக்கின் விசாரணையில் முக்கியத்துவம் பெறுகின்றன. விசாரணையின் முடிவுகளைப் பொறுத்தே சண்முகப்பிரியாவின் பங்கு குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
ஷண்முக பிரியா வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனைக்கு சென்றபோது அமைதியாக இருந்திருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது. ஆனால் ஷண்முக பிரியா அதிகமாக பேசி இருக்கிறார்.

சண்முக பிரியா பேசிய தோரணை பணவரவுகளை தாண்டி அன்பில் மகேஷுடன் வேறு ஏதேனும் இருக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. அன்பில் மகேஷ் ஊழல் வழக்கில் சிறையில் இருப்பதை காட்டிலும் தற்போது அன்பிலுடன் இணைத்து பேசப்படும் ஷண்முக பிரியா விஷயம்தான் பெரிய அளவில் பேசு பொருளாக இருக்கிறது.

இந்நிலையில், இது குறித்து தற்போது பாஜகவில் உள்ள மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தனது எக்ஸ் தளப்பதிவில், சண்முக ப்ரியா, எ.வ.வேலு, ஆ.ராசா, கனிமொழி ஆகியோரின் புகைப்படங்களை பதிவிட்டு, ”சமூகத்தில் பொதுவாழ்வில் ஒரு காலத்தில் குடும்பப் பாரம்பரியமும், தனிமனித ஒழுக்கமும், பழிச்சொல்லுக்கு அஞ்சுவதும் மிக உன்னதமான பண்புகளாகக் கருதப்பட்டன. ” ஊழல் வழக்கில் சிறை செல்வது இன்றைய தியாகம். ஊழல் காசில் ஏகாந்தமாக இருப்பது passion என ஆகிவிட்டது. பாரதி இன்னைக்கு இருந்திருந்தா நீ பண்ணுன தொழிலை நொந்து இருப்பார் உன்னை பார்த்து.. அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் இதை பார்த்து கண்ணீர்…………..! எனக் கூறியுள்ளார்.
இதற்கு கமெண்ட் பதிவு செய்துள்ள சிலர், ”சும்மா காமெடி பண்ணாதீங்க. அவள் படிதான்டா, பத்தினியும் அல்ல. நான் முற்றும் துறந்த முனிவரும் அல்லன்னு… யார் சொன்னது? கலைஞர் போட்ட சுழி தான். இதுங்க தொடர்றதுங்க. 2006 முதல் 2011 வரை ராஜாத்தி அம்மாள் என்ன எல்லாம் கண்ட்ரோல் பண்ணுனாங்க என்று எல்லாருக்கு தெரியும். அவருக்கு அந்த உரிமையை தந்த கலைஞர் வழியை தான் இவர்கள் தொடர்கிறார்கள். இதான் உண்மை” எனக் கூறியுள்ளனர்.
