Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Keerthana

“நான் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை. என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். ஆதாரமின்றி அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழக தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் சுமத்தப்பட்டுள்ள ஊழல் மற்றும் லஞ்சக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து, அவர் நான்கு பக்க விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தன் மீதான லஞ்சப் புகார்களைத் திட்டவட்டமாக மறுத்துள்ள அமைச்சர் கீர்த்தனா, சமூக வலைத்தளங்களில் பரவும் ஆதாரமற்ற தகவல்களை உண்மை எனக் கருதிப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் இருந்தால் அவற்றைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தாராளமாகச் சமர்ப்பிக்கலாம் என்றும், ஆதாரமின்றி அவதூறு பரப்பும் நோக்கில் செயல்படுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிவகாசி–திருத்தங்கல் ரயில்வே மேம்பாலப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்காக, அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி அவரது ஆதரவாளர்கள் ஒப்பந்ததாரரிடம் ரூ.3 கோடி லஞ்சம் கேட்டதாக அண்மையில் ஒரு வார இதழில் செய்தி வெளியானது. இதற்குப் பதிலளித்துள்ள

இதையும் படியுங்க  நாளை வெளியாகப்போகும் அதிர்ச்சி..! விஜய் அறிவிக்கப்போகும் பகீர் திட்டம்..! ஆடி முடிந்து ஆவணியில் ஆட்டம் ஆரம்பம்..!

அமைச்சர், தான் எந்தவிதமான லஞ்சத்தையும் பெறவில்லை என்றும், எந்த நிதி முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தக் குற்றச்சாட்டைச் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரே மறுத்துள்ளதாகவும் தனது நான்கு பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சிவகாசியில் அமைச்சர் கீர்த்தனாவுக்கு ரூ.4 கோடி மற்றும் ரூ.10 கோடி மதிப்பிலான சொகுசு பங்களாக்கள் இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல்களையும் அவர் மறுத்துள்ளார். முதலில் ரூ.4 கோடி மதிப்பிலான பங்களா இருப்பதாகக் கூறியவர்கள், பின்னர் அதன் மதிப்பை ரூ.10 கோடியாக மாற்றிப் பேசி வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், கதைகளும் எண்களும் மாறிக்கொண்டிருக்கின்றன; ஆனால், அவற்றை உறுதிப்படுத்தும் முறையான ஆதாரங்கள் யாரிடமும் இல்லை என்று விமர்சித்துள்ளார்.

அமைச்சர் திருப்பதிக்குச் சென்றபோது அணிந்திருந்த நெக்லஸ் 30 சவரன் தங்கத்தால் செய்யப்பட்டதாகவும், அதன் மதிப்பு ரூ.50 லட்சம் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. இந்தச் சர்ச்சைக்கு விளக்கமளிக்கும் வகையில், கோவையைச் சேர்ந்த பிரபல கோல்டு கவரிங் நகை நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அதில், அமைச்சர் கீர்த்தனா அணிந்திருந்த காசி மாலை தங்களது ஷோரூமில் இருந்து வாங்கப்பட்ட சாதாரண ஃபேஷன் நெக்லஸ் என்று தெரிவிக்கப்பட்டதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்க  விஜய் ஆட்சியை ஆக்கிரமிக்கும் திமுக-அதிமுக ஐஏஎஸ்-கள் லாபி..! மாற்றம் எப்படி வரும் முதல்வரே..!?
Minister Keerthana

மேலும், அமைச்சர் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் மூன்று சவரன் தங்கம் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்டிருந்ததைச் சிலர் சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டினர். இதனுடன், திருப்பதியில் அவர் அணிந்திருந்த நகைகளின் அளவை ஒப்பிட்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த விவகாரமும் நகையின் விலை மற்றும் அதன் உண்மைத்தன்மை குறித்த சர்ச்சை பெரிதாகக் காரணமாக அமைந்தது.

தான் அமைச்சராகப் பதவியேற்ற நாள் முதல் பல்வேறு தரப்பினரின் கேலிக்கும், சந்தேகங்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள கீர்த்தனா, பொது வாழ்வில் விமர்சனங்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதேவேளையில், தனது நேர்மைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு இட்டுக்கட்டப்படும் தகவல்களை ஏற்க முடியாது என்றும், அவற்றைச் சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஊழலுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் சூழலில், அமைச்சரின் இந்த விளக்க அறிக்கை வெளியாகியுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உண்மையான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்றும், ஆதாரமின்றி அவதூறு பரப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கீர்த்தனா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்க  ''விஜய்யின் வெற்றியைக் கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ்..?'' என்னடா கதை இது..? கொளுத்திப்போடும் திமுக..!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago