Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Dhanush

சில நாட்களுக்கு முன் நடிகர் தனுஷ் தரப்பில் இருந்து அவருடைய ரசிகர் மற்றும் மகளிர் சந்திப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த கனமழை எச்சரிக்கை காரணமாக தென்மாவட்டங்களைசேர்ந்த பெண் நிர்வாகிகள் யாருமே வரவேண்டாம் என தனுஷ் தரப்பு சொல்லிவிட்டது.

அதனால் மதுரை, திருச்சி, கன்னியாகுமரி என தென்மாவட்ட மகளிர்கள் யாருமே வர முடியவில்லை. திருநெல்வேலியில இருந்து மட்டும் கொஞ்ச பேரும், வட மாவட்டங்களில் இருந்தும் பெருந்திரளான பெண்களும் திரண்டு வந்திருந்தார்கள். 5000 பேர் இந்த மகளிர் விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 3000 பெண்கள் கூடியிருந்ததுதான் ஆச்சரியத்தோட முதல் புள்ளி.

Dhanush

காலையில் நடக்க வேண்டிய இந்த கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு அதன்பிறகு மதியம் 2:30 மணிக்கு சாப்பாட்டுக்கு பிறகு ஆரம்பித்தது. மேடைக்கு வந்த தனுஷ் ஓபனிங்கிலேயே ”ஓம் நமச்சிவாயா” எனச் சொல்லி, தான் எழுதிய இட்லி கடை படத்தில இருந்து வரும் ”எத்தனை சாமி வந்ததய்யா..” என்ற பாட்டை பாடினார். பேசலாம் என தயாரான போடு டைம் அதிகமாயிடுச்சு. அதனால் அடுத்த கூட்டத்தில் நம்ம விரிவாக சந்திப்போம் என சொல்லிவிட்டு, வந்திருந்த ஒவ்வொரு பெண்களையும் தனித்தனியாக கூப்பிட்டு போட்டோவும் எடுத்துக் கொண்டார்.

இதையும் படியுங்க  கேரளாவில் மலைகள் இல்லையா? தமிழ்நாட்டின் கனிமவளத்தை அழிக்கத்தான் ஆட்சிக்கு வந்தீர்களா?

இந்த ஒட்டுமொத்த பிரம்மாண்ட கூட்டத்தையுமே பின் இருந்து கோஆர்டினேட் செய்தது யார் என்றால் தனுஷோட சொந்த சகோதரிகள் அந்த ரெண்டு பேர். அவர்கள் இருவருமே டாக்டர்ஸ். அதில் ஒரு டாக்டர் விமலா கீதா. இவர் ஒரு பல் மருத்துவர். இன்னொருவர் டாக்டர். கார்த்திகா தேவி. இவர் ஒரு மகப்பேறு மருத்துவர். பிளஸ் இவர்களின் கணவர்களான இருவருமே டாக்டர்கள்தான். இந்த நான்கு டாக்டர்களும் சேர்ந்துதான் மேடையில் நின்று வந்திருந்த மகளிர் அனைவருக்குமே காமாட்சி அம்மன் வெள்ளி விளக்குகளை கொடுத்து தனுஷோட போட்டோ எடுக்க வைத்தார்கள்.

Dhanush

வந்திருந்த3000 பெண்களுக்கும் கொடுத்த அந்த காமாட்சி அம்மன் வெள்ளிவிளக்கில் பின்னாடி தாமரை சின்னம் இருந்தது. தனுஷ் ஏற்கனவே பாஜகவின் சப்போர்ட்டில் தான் தனக்கான அரசியல் என்ட்ரியை தயார் செய்கிறார் என அரசியல் தளத்தில் இப்போதே பரவலாக பேசப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் அவர் டெல்லி போய் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்களை சந்தித்தார். இந்த நிலையில்தான் அவர் கொடுத்த 3000 வெள்ளி விளக்குகள் பின்னால் பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை இருக்கிறது என பெரிய புயலே கிளம்பிருந்தது.

இந்த விஷயம் பெருதானதுமே தனுஷ் ரசிகர்மன்ற நிர்வாகிகளிடம் பேசினோம். ”விளக்குகளில் இருக்கிற தாமரை சின்னம் விளக்குகளை செய்த கம்பெனியின் முத்திதை தானே தவிர அதற்கும், அரசியலுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை. நாங்க வேற ஏதாவது அரசியல் கட்சியோட இணைய நினைத்தால் கூட வெளியில் இன்னொரு கட்சியோட தேர்தல் சின்னத்தை ஓப்பனா பயன்படுத்துற அளவுக்கு நாங்க ஒன்னும் அவ்வளவு முட்டாள் இல்லையே ” எனச் சொல்லி இந்த சர்ச்சையை மொத்தமா மறுத்துவிட்டார்கள்.

இதையும் படியுங்க  விஜயை இப்போதே கிள்ளி எரியணும்..! டெல்லி பாஜக போட்ட பகீர் ஸ்கெட்ச்..!

சரி, தனுஷ் ஆளுங்க சொல்வது உண்மையாகவே உண்மைதானா? என தெரிந்து கொள்வதற்காக 3000 விளக்குகள் ஆர்டர் கொடுத்து வாங்கிய அந்த அடையாள இருக்கிற பிரபல ஜிஆர்டி நகை கடைக்கு நேரில் போய் செக் செய்தோம். அங்கே இருந்து அந்த 10 கிராமில் இருந்து 20 கிராம், 50 கிராமில் இருந்து அரை கிலோ வரை இருக்கிற எந்தவிதமான அம்மன் விளக்குகளை வாங்கி பார்த்தபோதும், ஒரு
விளக்கில் கூட பின்னால் இந்த தாமரை சின்னம் இல்லை. ஜிஆர்டியின் ஸ்டிக்கர் மட்டும்தான் ஒட்டி இருக்கிற்தே தவிர, அதில் தாமரை சின்னம் இருக்கிற மாதிரியான எந்த ஸ்டிக்கரும் இல்லை.

ஆனால் கடையில் சாதாரண விற்பனைக்கு இருக்கிற எந்த விளக்குகளிலுமே அந்த தாமரை சின்னம் இல்லாதபோது தனுஷ் தன் கட்சி மகளிரணிக்கு கொடுத்த அந்த 3000 விளக்குகளில் மட்டும் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது எப்படி? அப்படி என்றால் கடைகளில் இந்த சாதாரணமா விற்காத விளக்குகளை தனுஷ் வேண்டும் என்றே பிளான் செய்து கஸ்டமைஸ் செய்து தாமரை சின்னத்தை பதித்து வாங்கி கொடுத்தாரா?

இதையும் படியுங்க  "ரூ.3,600 கோடி டாஸ்மாக் டீலிங்… விடிந்ததும் பாய்ந்த புதிய FIR: செந்தில் பாலாஜி கோட்டையைச் சரிக்கும் DVAC புயல்!"
dhanush

பாஜக மேலிடத்தில் தனக்கு இருக்கிற அந்த தொடர்பை இப்படி மறைமுகமாக காட்டிக்கிறார் போல. இது உண்மையாக அவர்கள் தரப்பு சொன்ன மாதிரி இது எதேச்சையாக நடந்ததா? இல்லை பிளான் செய்து நடந்ததா? என அடுத்த மாதம் நமக்கு உண்மை தெரிந்து விடும். ஏனென்றால் அப்போது விடுபட்ட தென்மாவட்ட பெண் நிர்வாகிகளை தனுஷோட புதுப்பட ஷூட்டிங் தென்மாவட்டத்தில் நடக்கிறது. அந்த படத்துக்கான பூஜை இந்த மாசம் முதல் வாரம் மதுரையில் இருக்கிற புகழ் பெற்ற கருப்புசாமி கோயிலில் 60 அடி உயர அரிவாளை வைத்து ஆடு வெட்டி கறி விருந்தெல்லாம் போட்டு பிரம்மாண்டமாக போடப்பட்டது.

அடுத்த மாதம் சூட்டிங் போகிறபோது அங்கேயே தென்மாவட்டப் பெண்களை சந்தித்து இந்த காமாட்சி அம்மன் விளக்குகளை கொடுக்கப் போகிறார் தனுஷ். அதிலும், இதே தாமரை இருந்தது என்றால் இது பிளான் பண்ணிதான் என நாமே முடிவுக்கு வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago