Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

panagal maligai

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் அமைந்துள்ள ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் அலுவலகத்தில், பெண் ஊழியர்களின் பணிச்சூழல் தொடர்பாகப் பல்வேறு அதிர்ச்சிப் புகார்கள் எழுந்துள்ளது. அங்கு உதவி இயக்குநராகப் பணியாற்றி வரும் சேதுகுமார் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பு, பணிநேர எல்லைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.

மாலை 6 மணிக்கு மேல் பிரச்சினை
சேதுகுமார், மாலை 6 மணிக்குப் பிறகும் பெண் ஊழியர்களைத் தனது அறைக்கு வருமாறு அழைப்பதாகப் புகார். அலுவலகப் பணி நேரம் முடிந்த பின்னரும் இப்படிப்பட்ட அழைப்புகள் தொடர்வதாகக் கூறப்படுகிறது. இதனால் பெண் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பணிச்சூழல் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.

அலுவலகப் பணிகளுக்காகத் தேவைப்படும் ஃபைல்களை தயாரிப்பது உள்ளிட்ட பணிகள், உரிய நேரத்திலும் முறையான அலுவலக நடைமுறைகளின்படியும் நடைபெற வேண்டியவைதான். ஆனால், இரவு 10 மணிக்குப் பிறகும் பெண் ஊழியர்களின் செல்போன்களுக்கு அழைத்து, உடனடியாக ஃபைல்களை தயார் செய்ய அவர் வலியுறுத்துவதாக அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதையும் படியுங்க  ஐடி நிறுவனங்களே தோற்றது.. பளபளக்கும் பனகல் மாளிகை..! பொன்னையா ஐ.ஏ.எஸ் செய்த அசாத்திய மாற்றம்..!
panagal maligai

தடுக்கப்படும் விசாரணை
முதல்வரின் செயலாளர் செந்தில்குமார் ஐஏஎஸ்-க்கு நெருக்கமாகவும், அவருக்காக முக்கியப் பணிகளை மேற்கொள்பவராகவும் சேதுகுமார் செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்தத் தொடர்புகள் குறித்த தகவல்களும், அதன் காரணமாக அவர் செல்வாக்குடன் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

பாதிக்கப்படும் குடும்ப வாழ்க்கை
”இறுமாப்பில் மாலை 6 மணிக்கு மேல் பெண் ஊழியர்களை தனது அறைக்கு வரச்சொல்வது, இரவு பத்து மணிக்கு மேல் முழு போதையில் பெண் ஊழியர்களின் செல்போனில் அழைத்து, உடனடியாக கோப்புகளை தயார் செய்ய சொல்வது என அதிகார வரம்பு மீறுகிறார். 50 வயதான அவர், இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் அவர் குடி, கூத்து என முரட்டு சிங்கிளாக வலம் வருவதால் குடும்ப பெண்களின் நிலைமையை உணர்ந்து கொள்ளாமல் கெட்ட ஆட்டம் போட்டு வருகிறார். அலுவலகத்தில் பணியாற்றும் இவரால் பெரும் தொல்லைகளுக்கு ஆளாகி வருகிறோம். உரிய அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு சேதுவின் சேட்டைகளை அடக்க வேண்டும்” எனக் குமுறுகிறார்கள் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள்.

இதையும் படியுங்க  "வாக்காளர்களை அவமதிப்பதா? சட்டம் இயற்ற நீதிமன்றம் என்ன நாடாளுமன்றமா?" – சென்னை உயர் நீதிமன்றம் காட்டம்!

அலுவலகத்தில் அதிகாரம் என்பது நிர்வாகப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கானது. ஊழியர்களின் தனிப்பட்ட நேரத்தையும் வாழ்க்கையையும் கணக்கில் கொள்ளாமல் செயல்படுவதற்கான அனுமதி அல்ல. உண்மையான அவசரப் பணி இருந்தாலும், அதற்கான தெளிவான நடைமுறைகள் இருக்க வேண்டும். அதே நேரத்தில், தேவையற்ற அழுத்தம், முறையற்ற அணுகுமுறை குறித்த புகார்கள் எழுந்தால், அவை புறக்கணிக்கப்படக் கூடாது.

யாருக்கு எவ்வளவு செல்வாக்கு இருந்தாலும், அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் கண்ணியமும் பாதுகாப்பும் முதன்மையானவை.

அதிகாரிகள் உடனடியாகத் தலையிடுவார்களா?
சேதுக்குமார் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறை உயர் அதிகாரிகள் உண்மை நிலையை ஆராய வேண்டும் என பெண் ஊழியர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுக்கின்றனர்.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago