Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Vetri Payanam

தமிழ்நாட்டில் 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் கீழ் இயங்கும் 69 சதவீத அரசுப் பேருந்துகளில் மகளிர், மாணவிகள் மற்றும் திருநங்கைகள் கட்டணமின்றிப் பயணம் செய்யும் வகையில், விரிவுபடுத்தப்பட்ட வெற்றிப் பயணம் திட்டம் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (செப்டம்பர் 21, 2026) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

இதுவரை சாதாரண நகரப் பேருந்துகளில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த இலவசப் பயண வசதி, தற்போது எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ் (Limited Stop Service), டீலக்ஸ் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் மஃபுசில் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

நகர்ப்புற சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கிலோமீட்டர் வரையிலான மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் இச்சேவை, 40 கிலோமீட்டருக்கு மேற்பட்ட மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரணப் பேருந்துகளுக்கும் நீட்டிக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் இயக்கப்படும் மொத்தம் 18,413 அரசுப் பேருந்துகளில் 12,692 பேருந்துகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன. இதன் மூலம், மொத்த அரசுப் பேருந்துகளில் 69 சதவீதப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய முடியும்.

இதையும் படியுங்க  அமைச்சர்களுக்கு செக்..! தவெக ஆட்சியே என் கண் அசைவில்தான்..! ஆதவ் அர்ஜூனாவின் மாஸ்டர் பிளான்..!

மேலும், இத்திட்டத்தின் கீழ் வரும் பேருந்துகள் மேற்கொள்ளும் தினசரி மொத்தப் பயணங்களில் 85 சதவீதம், அதாவது 1,65,312 சிங்கிள்ஸ், மகளிருக்கான இலவசப் பயண வரம்பிற்குள் கொண்டுவரப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மகளிர், மாணவிகள் மற்றும் திருநங்கைகளும் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம். இதற்காக எந்தவிதமான வருமான வரம்பும் கிடையாது. ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயணங்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை. இதன் மூலம், பெண்கள் எப்போது பேருந்து நிலையத்திற்குச் சென்றாலும் இலவசப் பயண வசதியுள்ள பேருந்துகளை எளிதாகப் பயன்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேருந்துகளில் பயோமெட்ரிக் மற்றும் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்கள் (ETM) இணைக்கும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 25-ஆம் தேதிக்குள் சோதனை மற்றும் சரிபார்ப்புப் பணிகள் முடிக்கப்பட உள்ளன. தொடர்ந்து, செப்டம்பர் 27-ஆம் தேதி திட்டத்திற்கான சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இதையடுத்து, காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தை முறைப்படி தொடங்கி வைக்க உள்ளார்.

இதையும் படியுங்க  முதலமைச்சர் விஜய் தலைமையில் முக்கிய அறிவிப்பு: மகளிர் உரிமைத் தொகை தொடருமா?
Vetri Payanam

தமிழக வெற்றிக் கழகத்தின் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வெற்றிப் பயணம் வாக்குறுதியைச் செயல்படுத்தும் வகையில், இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

மகளிருக்கு கட்டணமில்லாப் பயண வசதியை விரிவுபடுத்துவதற்காக ஆண்டுக்கு சுமார் 6,000 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு, திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகள் குறித்து ஆலோசித்தனர்.

Vetri Payanam

இதற்கு முன்பு சாதாரண வெள்ளைப் பலகை (White Board) பேருந்துகளில் மட்டுமே இலவசப் பயண வசதி வழங்கப்பட்டதால், சென்னையில் டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் அதிகம் இயக்கப்படும் நிலையில், பெண்களுக்கு முழுமையான பயன் கிடைக்கவில்லை என்ற கருத்து நிலவியது. தற்போது எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் மற்றும் எல்எஸ்எஸ் பேருந்துகளும் இணைக்கப்படுவதால், தலைநகர் பகுதி பெண்களுக்கு இத்திட்டம் கூடுதல் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்க  வண்டலூரில் வெடித்த வாக்குவாதம்.. முதலமைச்சர் விஜய் பிறந்தநாளில் பரபரப்பு!

மாநிலத் திட்டக் குழுவின் முந்தைய ஆய்வுகளின்படி, கட்டணமில்லாப் பயணத் திட்டத்தின் மூலம் ஒரு பெண் பயணி மாதத்திற்கு சராசரியாக 888 ரூபாய் முதல் 1,012 ரூபாய் வரை சேமிக்கிறார். இந்தத் தொகையை குழந்தைகளின் கல்வி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள், சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்குதல் உள்ளிட்ட குடும்பத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதாகப் பெண்கள் தெரிவித்துள்ளனர். சிலர் சிறுசேமிப்பாகவும், தங்கம் வாங்குவதற்காகவும் சேமிப்புத் தொகையைப் பயன்படுத்துகின்றனர்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி, கல்லூரி மாணவிகளும் தொலைதூரக் கல்லூரிகளுக்குச் செல்லவும், மருத்துவத் தேவைகளுக்காக வெளியூர்களுக்குப் பயணம் செய்யவும் இத்திட்டம் உதவியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களின் பொருளாதாரச் சுமை குறைவதுடன், தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் உயர்ந்துள்ளதாகப் பயனாளிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago