பெரியார் பிறந்தநாளையொட்டி, தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணியில் இருக்கிறார்களா..? இல்லையா..? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். கூட்டணியில் இருந்து கொண்டே போட்டியிடுவது என்பது குழப்பான ஒரு நிலைபாடாகும். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் திமுக தயவால் வெற்றி பெற்றார்கள்.
இப்போது, தவெக கூட்டணிக்கு சென்றுவிட்டதும், வீர வசனம் பேசுவதில் அர்த்தம் இல்லை. சற்று அடக்கி வாசிக்க வேண்டும். அதிமுகவில் போட்டியிட்டு எம்எல்ஏக்களாக வெற்றி பெற்ற பிறகு, தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தற்போது தவெகவில் போட்டியிடுவோர் பற்றி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். இந்நிலையில் அன்புமணியின் பேச்சுக்கு சசிகாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக திருவள்ளூரில் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: காங்கிரஸ்காரர்கள் என்றால் ஆவேசமாக பேச மாட்டார்கள் என்று அன்புமணி ராமதாஸ் நினைத்து கொண்டு இருக்கிறார். அது நல்ல விஷயம் தான். எல்லாவற்றுக்கும் ஒரு லிமிட் இருக்கும். அந்த லிமிட்டை தாண்டி செல்லும்போது, காங்கிரஸ் கட்சியினரும் ஆவேசத்தை காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர் எங்களுக்கு பாடம் எல்லாம் எடுக்க தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் பட்டினப்பாகத்தில் தலைமை செயலகம் அமைக்க வேண்டுமென பரிந்துரை தான் செய்துள்ளனர். எல்லா கோணங்களிலும் ஆய்வு செய்து, அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி தான் முடிவு செய்யப்படும் என்றார்.
