முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம் சென்றதில் 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது என ஒரு பக்கம் வெடிவெடித்து கொண்டாடினாலும் அங்கே லண்டனில் விஜயை சுற்றி நடந்த அந்த ஒரு அதிர்ச்சி சந்திப்பும், அதை வைத்து அறிவாலய மேலிடம் போட்டிருக்கிற ஒரு மாஸ்டர் பிளானும் தான் இப்போது கோட்டை வட்டாரத்தையே அதிர வைத்துள்ளது.
செப்டம்பர் 10ஆம் தேதி இரவு சென்னை ஏர்போர்ட்டில் இருந்து லண்டனுக்கு பறந்தார் முதலமைச்சர் விஜய். அந்த பயணத்தை சுற்றி இப்போது எக்கச்சக்க விமர்சனங்களும், சந்தேகங்களும் கிளம்பி இருக்கிறது. நாங்கள் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கத்தான் லண்டன் போகிறோம் என தவெக தரப்பில் சொன்னார்கள். ஆனால் செப்டம்பர் 14ஆம் தேதி வரை அங்கே எந்த நிறுவனத்தை சந்தித்தார்? என்ன ஒப்பந்தம் போட்டார்கள்? அதனால் தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு வேலை கிடைக்க போகிறது? என எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வராமல் ஒரே மூடு மத்தமாக வைத்திருந்தார்கள்.

அவர் லண்டன் போனதிலிருந்து மீடியாக்களில் வந்த ஒரே செய்தி அஜித்தின் கார் ரேஸில் கலந்து கொண்டு அஜித்துடன் மாஸ் காட்டியது மட்டும் தான். பிறகு சில பல செய்திகள். அதனாலயே இங்கே உள்ள எதிர்க்கட்சிகளும், பல்வேறு நபர்களும் ”என்ன சொல்லிட்டு லண்டன் போனாங்க? என்னங்க அங்க போய் என்ஜாய் பண்ணிட்டு இருக்காங்க” என கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
போதாக்குறைக்கு ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் ”யோவ் மூணு மாசத்துல ஒரு லட்சம் கோடி ரூபாய் அந்நிய முதலீட்டை ஈர்த்ததா சொன்னீங்களே.. அது எந்தெந்த கம்பெனி? என்னென்ன புரிந்துணர்வு ஒப்பந்தம்? என அந்த விபரங்களை வெளிப்படையாக ஒரு வெள்ளை அறிக்கையாக விடுங்க” என டென்ஷன் ஆகி கேட்டிருந்தார். தமிழ்நாடு அரசியலில் இதுவரை எந்த ஒரு முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்திலும் அரசாங்கம் இப்படி ஒரு சுவாரசியமான மௌனத்தை கடைபிடித்ததே இல்லை.

இதை பார்த்துவிட்டு அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி, சோசியல் மீடியாவிலும் ”என்னப்பா அது? லண்டன் போய் முதலீட்டை ஈர்க்கிறார்களா? இல்ல சும்மா சுத்தி பார்த்துவிட்டு கார் ரேஸுக்கு கொடியை அசைக்க போனாங்களா? என நக்கலாக நிறைய கேள்விகள் கேட்டு மீம்ஸ் போட ஆரம்பித்து விட்டார்கள். ஆகையால் இப்படி அரசியல் களம் பயங்கர சூடானதுமே வழக்கம் போல செப்டம்பர் 14ஆம் தேதி மாலை அவசர அவசரமாக ஒரு பிரஸ் ரிலீஸ் இறக்கினார்கள். இங்கிலாந்து லண்டன் நகரில் சம்வர்தனா மதசன் இன்டர்நேஷனல் கம்பெனி மூலமாக தமிழ்நாட்டில் சுமார் 11000 கோடி ரூபாய் முதலீட்டில் பொறியியல் மற்றும் உற்பத்தி துறையில் 7000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிற மாதிரி ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கிறோம் என விஜய் தரப்பில் முதலீட்டுக்கான முதல்
அறிவிப்பை வெளியிட்டார்கள்.
அப்படா கார் ரேஸுக்கு போய்விட்டு வருகிற வழியில் ஒரு வழியாக ஒரு கம்பெனியை பிடித்து ஒப்பந்தத்தை போட்டு விட்டார்கள் என நெட்டிசன்கள்வ் இதையும் கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், லண்டனில் விஜய் செய்த இன்னொரு ரகசிய கூத்துதான் இப்போது அறிவாலயத்துக்கு சும்மா அல்வா சாப்பிடுற மாதிரி அமைந்திருக்கிறது. லண்டனில் எந்த கம்பெனியை சந்தித்தார்? என்கிற கேள்வி ஒரு பக்கம் இருக்க, விஜய் தனக்கு நெருக்கமானவர்களோடு உட்கார்ந்து ஒரு சீக்ரெட் மீட்டிங் நடத்தி இருக்கிறார். அதில் தவெக கட்சிக்குள் தனக்கு அடுத்த இடத்தில் அதாவது நம்பர் டூ-வை கொண்டு வரப் போகிற அந்த நபர் யார்? என்கிற அதிரடி பிளானை லண்டனில் வைத்தே ஆரம்பித்து இருக்கிறாராம்.

விஜய் சென்னை வந்ததஏகு பிறகு தமிழக வெற்றி கழகத்தில் முக்கியமான சில மாற்றங்கள் நடக்க போவதாக கூறுகிறார்கள். ஆனால் இங்கேதான் ஒரு பயங்கரமான ட்விஸ்ட் காத்திருக்கிறது. தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கும், மாப்பிள்ளை சபரீசனுக்கும் லண்டனில் ஏகப்பட்ட நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள். நண்பர்களை தாண்டி நிறைய ஸ்பை இருக்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து லண்டனுக்கு போகிற அந்த விஐபிக்கள் எல்லாம் எங்கெங்க போகிறார்கள்? எந்த ஹோட்டலில் யாருடன் தங்கப்போகிறார்கள்? என்ன மீட்டிங் போடுகிறார்கள்? என அவ்வளவு மேட்டரையும் சபரீசனுக்கு வாட்ஸ் அப்பில் லைவ்வாக அப்டேட் பண்ணிக் கொண்டே இருப்பார்களாம்
ஆகையால் அவர்கள் மூலமாக முதலமைச்சர் விஜய் லண்டனில் எங்கெல்லாம் சென்றார்? யாரையெல்லாம் சந்தித்தார்? எங்கிற விஷயங்களை ஒரு பிரைவேட் டிடெக்டிவ் கம்பெனி ரேஞ்சுக்கு உதயநிதியும், சபரீசனும் தோண்டி துருவி எடுத்து வைத்து இருக்கிறார்களாம். வெறும் தகவல்களாக மட்டும் இல்லை. விஜய் லண்டனில் அடித்த கூத்துகளின் போட்டோ, வீடியோ என சகல ஆதாரங்களையும் மாப்பிள்ளை சபரீசன் தரப்பு கையில் வைத்துக் கொண்டு சைலண்டாக சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். நேரம் வரும்போது இந்த ஆவணங்களை ஒரு பொலிட்டிக்கல் அணுகுண்டாக தூக்கி வீசுவோம் என அறிவாலய வட்டாரம் அந்த பென்டிரைவை விரலில் மாட்டிக் கொண்டு சுற்றி வருகிறது.
