Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

ECR Saravanan

தமிழக வெற்றிக் கழகத்தில் “நேர்மை, மாற்றம்” என மேடைகளில் முழங்கப்பட்டாலும், களத்தில் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் அதற்கு நேர்மாறாக இருப்பதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. குறிப்பாக, முதல்வர் விஜய்யின் சொந்தத் தொகுதியும், அவர் வசிக்கும் ஈ.சி.ஆர் பகுதியும் அடங்கிய சோழிங்கநல்லூரிலேயே, தவெக கட்சிப் பதவிகள் “ரேட் கார்டு” போட்டு விற்பனை செய்யப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, கட்சித் தலைமையையும் அடிமட்டத் தொண்டர்களையும் ஒரே நேரத்தில் உலுக்கியெடுத்துள்ளது.

கட்சி பதவிகளுக்கு தவெக மாவட்ட செயலாளர்கள் பெரும் தொகை வாங்குவதாக குற்றசாட்டுகள் பரவி வரும் வந்த நிலையில் முதல்வர் விஜய் குடியிருக்கிற ஏரியாவுக்கே தவெக மாவட்ட செயலாளராக இருக்க ஈ.சி.ஆர். சரவணன் மீதும் அப்படி ஒரு புகார் பாய்ந்திருக்கிறது.

Republic Tamil

தவெக எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள் பெரும் தொகையை வாங்கிக்கொண்டு கட்சிக்கான பொறுப்பாளர்களை நியமிக்கிறார்கள் என பரவலாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வந்த நிலையில்
முதல்வர் விஜய் குடியிருக்கிற சென்னை நீலாங்கரையை உள்ளடக்கிய சென்னை புறநகர் மாவட்டத்தோட தவெக செயலாளராகவும், சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ,வாகவும் இருக்கிற ஈ.சி.ஆர்.சரவணன் சமீபத்தில் கட்சி பதவிகளை கூறு போட்டு விற்பதாக தவெக நிர்வாகிகள் கொதிக்க துவங்கி இருக்கிறார்கள்.

இதையும் படியுங்க  பாஜகவின் மிகப்பெரிய தலையை தூக்கிய CM விஜய்..! பெரும் படையுடன் தவெக-வுக்கு படையெடுப்பு..!

மாற்று கட்சியில் இருந்து வருகிற நிர்வாகிகளுக்கான தவெக பதவிகளுக்கு ஒரு தொகையும், தவெகவிலேயே இருக்கிறவர்களுக்கு 50% டிஸ்கவுண்டில் பாதி தொகையில் பதவிகளையும் கொடுக்கிறாராம் சரவணன். எப்போதும் இவர் உடனே இருக்கிற ஆகாய விரும்பியான ஒரு வக்கீல்தான் எல்லா டீலிங்குகளையும் பார்த்துக் கொள்கிறாராம். ”கட்சியில எவ்வளவோ செலவுகள் இருக்கு பாஸ். அதையெல்லாம் சமாளிக்கணும்ல” என கட்சி பதவிகளின் கட்டணத்துக்கான காரணத்தை கூலாக சொல்கிறாராம் ஈ.சி.ஆர்.சரவணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago