Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

200 கோடி ரூபாய் பணப் பறிப்பு வழக்கில், சுகேஷ் சந்திரசேகர் மற்றும் நடிகை ஜாக்லின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால் மற்றும் நடிகை ஜாக்லின் பெர்னாண்டஸ் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளன.

சுகேஷ் மற்றும் ஜாக்லின் பெர்னாண்டஸ் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், வரும் ஜூன் 3ஆம் தேதி குற்றச்சாட்டுகள் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

200 கோடி ரூபாய் பணப் பறிப்பு வழக்கில் சுகேஷ் சந்திரசேகர், ஜாக்லின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க  பதிவிட்ட சில நிமிடங்களிலேயே டெலிட் செய்தது ஏன்?! நாஞ்சில் விஜயன் - மரியா பிரிவின் பின்னணியில் நடக்கும் மர்மம் என்ன?
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 months ago at 5 months ago