Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

ராணிப்பேட்டை மாவட்ட பத்திரிகையாளர்கள் மீது சோளிங்கர் தவெக எம்.எல்.ஏ தாக்குதல் நடத்திய‌ சம்பவம் குறித்து திருப்பத்தூரில் TIJA – பத்திரிகையளர் சங்கங்கம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ராணிப்பேட்டை மாவட்டம் , சோளிங்கர் பகுதியில் ஒரு கடையில் தாக்குதல் நடந்த சம்பவம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தினமலர் செய்தியாளர் கல்யாணசுந்தரம் மற்றும் தினகரன் செய்தியாளர் அரங்கநாதன் ஆகியோர் மீது, சோளிங்கர் த.வெ.க. எம்.எல்.ஏ. கபில் மற்றும் அவருடன் வந்த நபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்

இந்தத் தாக்குதல் நடந்த போது அருகில் இருந்த சோளிங்கர் உதவி காவல் ஆய்வாளர் முனீர் பாஷா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த செய்தியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் , பத்திரிகையாளர் சங்கங்கள் சாலை மறியல் போராட்டம் ,கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்

அந்த வகையில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர், கபீல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்ககோரி “தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர் சங்கம் ” சார்பில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்பை பதிவு செய்துள்ளார்கள்.

இதையும் படியுங்க  From a hands-free vibrator to an intercourse game-changer

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago