Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

திருப்பத்தூர் மாவட்ட வனக் கிடங்கில் 55 செம்மரக் கட்டைகள் மாயமானதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படைகள் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை..

திருப்பத்தூர் மாவட்ட வனக் கிடங்கில் விற்பனை சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டு சந்தனம் மற்றும் செம்மரக் கட்டைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது ஜவ்வாது மலையில் ஒருகாலத்தில் விளைந்த புகழ்பெற்ற சந்தன கட்டைகளை நகரின் மையப்புள்ளியில் அமைந்துள்ள இந்த கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்

உலக நாடுகளில் இருந்து வரும் வியாபாரிகள் ஏலம் எடுக்க இங்கு குவிவார்கள் இதனாலே திருப்பத்தூர் sandal City என பெயர் பெற்றது அப்படிப்பட்ட இந்த கிடங்கில் மிச்ச மீதி இருந்த சந்தனக்கட்டைகளோடு பறிமுதல் செய்யப்படும் செம்மரக் கட்டைகள் இங்குதான் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்,

குறிப்பாக, பச்சூர் , வாணியம்பாடி மற்றும், ஆம்பூர் ஓட்டியுள்ள ஆந்திரா எல்லைப் பகுதிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 190 டன் செம்மரக் கட்டைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த கிடங்கை சுற்றி மின் வேலி அமைத்து , நான்கு திசைகளிலும் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாத்து வருகின்றனர், நான்கு திசைகளிலும் 1/2 மணி நேரத்திற்கு ஒருமுறை மணியோசை எழுப்பி வனத்துறை ஊழியர்களும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் , இப்படி பல அடுக்கு பாதுகாப்பு வளையத்தின் கீழ் இருக்கும் கிடங்கில்தான் ஏலகிரி கோடை விழா அன்று 50 லட்சம் மதிப்புள்ள செம்மரைக் கட்டைகள் காணாமல் போனதாக நகர காவல்நிலையத்தில் புகார் பெறப்பட்டிருக்கிறது

இதையும் படியுங்க  Dupe luggage permit patrons to enjoy the same appear and feel

கடந்த 18-ம் தேதி நள்ளிரவு, சுற்றிலும் இருந்த சிசிடிவி கேமராக்களை அணைத்துவிட்டு உள்ளே (புகுந்த மர்ம கும்பல் ?‌) சுமார் 40-லட்சம் மதிப்புமிக்க 55 செம்மரக் கட்டைகளை கானாமல் போனதாக கடந்த 19-ம் தேதி காலையில், கிடங்கு பாதுகாப்பு அலுவலர் ஜோதிலிங்கம் வழக்கமாக ஆய்வு மேற்கொண்ட போது தெரியவந்திருக்கிறது இது தொடர்பாக, ஜோதிலிங்கம் கொடுத்த புகாரின்பேரில், திருப்பத்தூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்காக கானாமல் போன செம்மரக் கட்டைகளை மீட்க வனத்துறை சார்பில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது

மாயமானது எப்படி? இந்த கிடங்கின் சுற்றுச் சுவரையோட்டி தாலுகா காவல் நிலையம், மாவட்ட நீதிமன்றம் , போலீசார் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு , மாவட்ட வருவாய் அலுவலகம் , ஊராட்சி ஒன்றிய அலுவலகம் , என முக்கிய அலுவலகங்களும் கிழக்குப் பக்கம் கிடங்கின் மதில் சுவரையோட்டி நகரின் நான்கு வழிச்சாலை அமைந்துள்ளது அப்படி இருந்தும் சுமார் 1500 கிலோ செம்மரக் கட்டைகள் மாயமாகி உள்ளது ,

இதையும் படியுங்க  In addition to carrying items for your favorite city or state

ஏலகிரி மலையில் கடந்த 18 மற்றும் 19-ம் தேதிகளில், `கோடை விழா’ நடத்தப்பட்டது. அதில், சம்மந்தப்பட்ட துறை அமைச்சரான வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் கலந்துகொண்டார். மாவட்டத்தில் பொறுப்பு அமைச்சர் இருக்கும் போது வனத்துறைக்குச் சொந்தமான குடோனில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 55 செம்மரக் கட்டைகள் திருடுபோய் இருப்பது பொதுமக்களிடையே சந்தேகத்தையும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது

இதற்கிடையில், ஜூலை 21-ந்தேதி நாட்றம்பள்ளி அடுத்த சோம நாயக்கன்பட்டி பகுதியில் பச்சையப்பன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட வன அலுவலர் மகேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறி அங்கு நடைப்பெற்ற சோதனையில் 60 கிலோ எடையுள்ள 2 செம்மரக் கட்டைகளுடன் 8 இரண்டு சக்கர வாகனங்களையும் சேர்த்து வனத்துறையினர் கைப்பற்றி இருப்பதாக செய்திகள் வெளியாகின!

காணாமல் போன செம்மரக் கட்டைகளை மீட்க இதற்காக ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆறு நாட்கள் ஆகியும் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில் தனிப்படைகள் கமுக்கமாக இருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க  Kanojo Toys is situated in Tokyo
Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago