Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழ் திரையுலகில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராகப் பயணித்து வருபவர் நடிகர் ஸ்ரீமான். தனது நீண்ட கால நண்பரான தமிழக முதல்வர் விஜய் உடனான நட்பு, தவெக மீதான அரசியல் விமர்சனங்கள், நடிகர் மாஸ்டர் மகேந்திரனின் சர்ச்சை பேச்சு குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

40 ஆண்டுகால நட்பு
முதல்வர் விஜயைஒ அவரது ஆரம்பகால சாலிகிராமத்து இல்லத்து நாட்களிலிருந்தே மிக நெருக்கமாக அறிந்தவன் நான். விஜய் தனது 16 வயதில் இருந்தே மிக அமைதியான, கூர்ந்து கவனிக்கும சுபாவம் கொண்டவர். அவரது தங்கை வித்யாவின் மறைவிற்குப் பிறகு, வீட்டில் தனிமையோடு வளர்ந்ததும், பாட்டியின் பராமரிப்பில் இருந்ததும் அவரது இந்த அமைதியான குணத்திற்குக் காரணம்.

“விஜய் எனும் நான்…” என்று அவர் முதல்வராக பதவியேற்பார் என்பதை நான் மூன்று மாதங்களுக்கு முன்பே ஒரு வீடியோவில் கூறியிருந்தேன். விக்ரவாண்டியில் நடந்த தவெக-வின் முதல் மாநாட்டிற்கு மக்கள் தங்களது சொந்தப் பணத்தைச் செலவழித்துத் திரண்டு வந்தபோதே விஜய்யின் அரசியல் வெற்றி உறுதியாகிவிட்டது.

இதையும் படியுங்க  நான் சிஎம் விஜயை பார்த்தே ஆக வேண்டும்” – தலைமைச் செயலகத்தில் பெண் பரபரப்பு

சமீபத்தில் முதலமைச்சர் விஜய்யை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தேன். முன்னரெல்லாம் நண்பராக சாதாரணமாகச் சென்று பார்த்த எனக்கு, தற்போது கார் எண், பாதுகாப்பு கெடுபிடிகள், குறிப்பிட்ட கேட் வழியாக நுழைவது போன்ற சிஎம்-க்கான ‘ப்ரோட்டோகால்’ நடைமுறைகள் மிகவும் புதுமையாக இருந்தது.

ஆனாலும், தனிப்பட்ட முறையில் பேசும்போது “வீட்டில் எல்லாரும் சௌக்கியமா? கார்டு பத்திரமா வந்து சேர்ந்ததா?” என்று பழைய நண்பராக விஜய் அதே அன்புடனும், மிக இலகுவான மனதுடனும் விசாரித்தார் விஜய். சிம்பு, சினேகா, குடும்பத்தினர் என்னைப் போன்ற பழைய நண்பர்களை முதலமைச்சர் விஜய் தொடர்ந்து சந்தித்து வருவதைச் சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சித்து வருகின்றனர். “நாட்டில இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது, சினிமாக்காரர்களைச் சந்திக்க இவருக்கு எப்படி நேரம் கிடைக்கிறது?” என்கிறார்கள்.

இந்த விமர்சனங்களை முன்வைப்பவர்கள், ஏதோ ஒரு தரப்பிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு, திட்டமிட்டுக் குழுவாக அமர்ந்து “நான் இன்று இந்தப் போஸ்ட்டைப் போடுகிறேன், நான்கு நாள் கழித்து நீ அதைப் போடு” என்று அஜெண்டா அடிப்படையில் வேலை செய்கிறார்கள்.

இதையும் படியுங்க  இறப்பதற்கு சில மணி நேரம் முன் சிரித்த மிஸ் புனே துவிஷா… கணவர் சரணடைந்ததால் வழக்கில் புதிய திருப்பம்

முதலமைச்சருக்குக் கீழ் திறமையான ஐஏஎஸ் அதிகாரிகள் சிஸ்டத்தை மிகச் சரியாகக் கொண்டு செல்கிறார்கள். விஜய் எதையும் மிக வேகமாக கற்றுக்கொள்ளும் திறன் கொண்டவர். இன்னும் 6 மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்குள் அவரது நிர்வாகத் திறன் என்ன என்பதை விமர்சிப்பவர்கள் உணர்வார்கள்.

தமிழகத்தில் அண்மைக்காலமாக நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினை குறித்து நடிகர் மாஸ்டர் மகேந்திரன், “என் வீட்டில் கரண்ட் எடுத்துட்டுப் போங்க” என்று திமிராகப் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகேந்திரன் நிதானமிழந்து பேசியது மிகவும் தவறான பேச்சு. பொதுமக்கள் கொந்தளிப்பில் இருக்கும்போது இப்படி ஒரு கருத்தை முன்வைக்கக் கூடாது.

தவெக அமைச்சரான நிர்மல் குமார் போன்றவர்கள் களத்தில் நிலைமையைச் சரிசெய்யப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், இத்தகையப் பேச்சுக்கள் கட்சிக்குத் தேவையற்ற பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, மாஸ்டர் மகேந்திரன் உடனடியாகப் பொதுச் சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், சஞ்சய் வெளிநாட்டில் முறையாக சினிமா படித்து, குறும்படங்கள் இயக்கி, தன்னை முழுமையாகத் தயார்படுத்திக் கொண்டே இயக்குநராகக் களம் இறங்கியுள்ளார். தளபதி ரசிகர்கள் அனைவரும் சஞ்சயின் படத்திற்கும் முதல் நாள் முதல் ஷோ சென்று விசில் அடித்துக் கொண்டாடுவோம்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க  “விமர்சனங்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில் திட்டமிட்ட நகர்வுடன் CM விஜய் மீண்டும் டெல்லி பயணம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago