Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

இயக்குநர் கஸ்தூரி ராஜா நடித்துள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தில் அவரது நடிப்பைக் கண்டு வியந்ததாகவும், தந்தையின் நடிப்பைப் பார்த்து பெருமையடைவதாகவும் நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தொடர்ச்சியான படப்பிடிப்பு பணிகளால் ‘ஹபீபி’ திரைப்படத்தை தாமதமாக இன்றுதான் பார்க்க நேர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கே முற்றிலும் புதியதாக இருந்த ஒரு உலகத்திற்குள் நுழைந்து, அதில் ‘யூசுப்’ என்ற கதாபாத்திரமாகவே தனது தந்தை கஸ்தூரி ராஜா முழுமையாக வாழ்ந்திருப்பதைப் பார்த்து பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தனது தந்தை மற்றும் பிற நடிகர்களிடமிருந்து மிகச் சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்ததற்கும், சிறந்த திரைப்பட அனுபவத்தை வழங்கியதற்கும் இயக்குநர் மீரா கதிரவனுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தனுஷ் பகிர்ந்துள்ளார்.

கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் சமூகத்தின் நெசவு வாழ்வியலையும், அவர்கள் சந்தித்து வரும் சமூக மற்றும் வாழ்க்கை மாற்றங்களையும் மையமாகக் கொண்டு இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்க  "25 வருடப் பகை ஓவர்! தனுஷுக்காக இறங்கிவந்த கரீனா கபூர்.. பன்சாலி கூட்டணியில் இணையும் பிரம்மாண்ட பான்-இந்தியா மூவி!"

தற்போது இந்த திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago