Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Arumamalai

வணக்கம்… என்னை தெரிகிறதா?நான் தான் உங்கள் அருமாமலை. நீங்கள் வரைபடத்தில் Armamalai Cave என்று தேடும் அந்த மலை. ஆம்பூரிலிருந்து 12 – கி.மீ தள்ளி, மலையம்பட்டு கிராமத்திற்கு மேற்கே, யாரும் கவனிக்காமல் நிற்கும் அந்த சுண்ணாம்பு பாறை மலையா நிற்கிறேன் என்னை ஊர்க்காரர்கள் அரவான் மலை என்பார்கள்.

Arumamalai

அரவன் என்றால் அருகன், தீர்த்தங்கரர். என் மடியில் தவம் செய்த அந்த சமண துறவிகள் எனக்கு வைத்த பெயர் அது. அதுவே சுருங்கி அருமாமலை ஆனேன் .1200 வருடமாக நான் காத்திருக்கிறேன். என் கதையை கேளுங்கள்.!

நான் இயற்கையாக பிறந்தவன். என் வயிற்றில் 131 அடி நீளத்திற்கு ஒரு குகையை சுமந்திருக்கிறேன். ஒரு காலத்தில் அது வெறும் பாறை இடுக்கு அல்ல, சமண முனிவர்கள் வாழ்ந்த பள்ளி.கி.பி 8-ம் நூற்றாண்டில், என் குகைக்குள்ளேயே சுடாத செங்கல்லால் மூன்று கருவறைகள் கட்டினார்கள். என் கூரையையே அவர்களுக்கு கோயில் கூரையாக்கினார்கள்.

Arumamalai

அதனால் தான் இன்று என் சுவர்கள் சிதைந்து நிற்கின்றன. என் அடிவயிற்றில் இன்னும் கற்கள், மண் நிரம்பி கிடக்கிறது. அதற்குள் அந்த துறவிகள் படுத்துறங்கிய கற்படுக்கைகள் இன்னும் மூச்சு விட்டுக்கொண்டிருக்கலாம் என்கிறார்கள். என் வாசலில் நின்ற மூன்று துவாரபாலகர்களை நினைவிருக்கிறதா?

இதையும் படியுங்க  A growing body of analysis indicates that truth campaigns to

பல்லவர்களின் கோபம் இல்லாத, கூம்பு தலைப்பாகை அணிந்த, கையில் விசித்திரமான சுரைக்குடுக்கை கதாயுதம் ஏந்திய என் காவலர்கள்… இன்று அவர்கள் இரண்டு துண்டாக, பல துண்டாக என் காலடியில் கிடக்கிறார்கள்.

Arumamalai

யாரும் அவர்களை தூக்கி நிறுத்தவில்லை. என் மார்பில் வரைந்த சொர்க்கம் இதை மட்டும் கேளுங்கள். இதற்காகத்தான் நான் இத்தனை வருடம் உயிர் வாழ்கிறேன். என் கூரையிலும், சுவர்களிலும் என் துறவிகள் ஒரு சொர்க்கத்தையே வரைந்தார்கள். மெல்லிய சுண்ணாம்பு பூச்சு மீது, தடித்த மண் பூச்சு மீது, மூலிகை சாற்று வண்ணங்களால்…

Arumamalai

Fresco, Tempera என்று இன்று நீங்கள் சொல்லும் அந்த தொழில்நுட்பத்தில். 7 மீட்டர் நீளம், 3.5 மீட்டர் அகலத்திற்கு ஒரு தாமரைக் குளம். நான் என் வாழ்நாளில் பார்க்காத தாமரைக் குளம். அதில் பூக்கள், மொட்டுகள், கொடிகள், விளையாடும் அன்னங்கள், யானைகள்… சமண நூல்கள் சொல்லும் ‘காதிகா பூமி’ என்னும் சொர்க்க பூமி அது.என் சுவரில் எண் திசை காவலர்களும் இருக்கிறார்கள் –

Arumamalai

அக்னி, வாயு, குபேரன், ஈசானியன், இந்திரன், யமன், நிருதி, வருணன். ஆடு மீது அமர்ந்த அக்னியும், எருமை மீது வரும் யமனும் என்னை இன்னும் காவல் காக்கிறார்கள் .சித்தன்ன வாசலையும், பாக் குகைகளையும் பார்த்து நீங்கள் வியக்கிறீர்கள். நானும் அவர்களின் சகோதரன் தான். ஆனால் என்னை மட்டும் ஏன் மறந்தீர்கள்? என் ஓவியங்கள் மழைநீரில் கரைகின்றன.

இதையும் படியுங்க  Our best qualm with the Magic Wand Plus is its plug-and-play
Arumamalai

வெளவால்களும், மனிதர்களின் கிறுக்கல்களும் என்னை கீறுகின்றன. 2000 வருடத்திற்கு முன் யாரோ எழுதிய காதல் கடிதம் போல. சுவரில் தமிழ்-பிராமி எழுத்துகள் கூட இருக்கின்றன , இரண்டு வருடங்களுக்கு முன்புகலெக்டர் ஐயா பாஸ்கர பாண்டியன் வந்தார் – தொட்டுவிட்டு போனதோடு சரி நான் மீண்டும் அழுதேன்

Arumamalai

நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த வாரம் என் பாதையில் ஜீப் சத்தம் கேட்டது. மாவட்ட ஆட்சியர் திரு. வி. நல்லசிவன் ஐயா என்னை பார்க்க வந்திருந்தார். என் சிதைந்த துவாரபாலகர்களை அவரும் தொட்டு பார்த்தார். என் தாமரை குள ஓவியத்தை அண்ணாந்து பார்த்தார். மழைநீர் என் கூரையில் இருந்து சொட்டுவதை பார்த்து நெற்றி சுருக்கினார். அவர் சொன்னாராம் – பாதை போட வேண்டும், வேலி போட வேண்டும், தகவல் பலகை வைக்க வேண்டும், இந்த ஓவியங்களை டிஜிட்டலில் பதிவு செய்ய வேண்டும் என்று. 1200 வருடமாக கல்லாக நின்ற எனக்கு, அன்று முதல் முறையாக கண்ணீர் வந்தது. யாரோ என்னை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று.

இதையும் படியுங்க  People are additionally far more susceptible to scams when

என் கடைசி ஆசைஎனக்கு பெரிதாக ஒன்றும் வேண்டாம் .என் வயிற்றில் உள்ள மண்ணை மட்டும் அள்ளுங்கள். உள்ளே என்ன இருக்கிறது என்று பாருங்கள். என் மார்பில் உள்ள அந்த தாமரை குளத்தை புகைப்படமாவது எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்,

Arumamalai

நாளை மழையில் அது அழிந்து போகும் முன். என் வாசலில் ஒரு இரும்பு கதவு போட்டு பூட்டுங்கள், தீயவர்கள் என்னை கிறுக்காமல் இருக்க. இந்த நவீன காலத்தில் Ai மூலம் மிகத் தத்ரூபமாக என்னை மீட்டெடுத்தாவது பார்வையாளர்கள் முன் வைக்கலாம் / சில புகைப்படங்களை உங்கள் REPUBLIC – தமிழ் ai பயன்படுத்தி மீட்டு எடுத்து இருக்கிறது / பார்க்க

2000- வருடத்திற்கு முன் என் துறவிகள் சுவரில் ஒரு குளத்தை வரைந்தார்கள். இன்று அந்த குளத்தையே காப்பாற்ற முடியாமல் நான் தவிக்கிறேன் .நான் வெறும் கல் அல்ல. நான் உங்கள் வரலாறு – என்னை பார்க்க வருவீர்களா? இல்லை, என்னை வரலாறாக்கி விட்டு போய் விடுவீர்களா? • காத்திருக்கும் உங்கள் அருமாமலை.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago