Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய், தனது முதற்கட்ட அரசுமுறை வெளிநாட்டுப் பயணத்தை செப்டம்பர் மாதம் மேற்கொள்ள உள்ளார். செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 16 வரை இங்கிலாந்து செல்லும் அவர் தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, உலகளாவிய வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து ஆலோசிப்பதற்காக அவர் இங்கிலாந்து செல்வதாக கூறப்படுகிறது தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைந்தவுடன், மத்திய வெளியுறவுத் துறையின் ஒப்புதலுடன் இந்த அதிகாரப்பூர்வப் பயணம் தொடங்குகிறது.

ஆனால் அவரது இங்கிலாந்து பயணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்தே ல ஒரே பரபரப்புதான். அனுபவம் இல்லாத அமைச்சர்கள், ஒத்துழைக்காத அதிகாரிகளை வைத்துக்கொண்டு அரசாட்சியைத் திறம்பட நடத்தவே தடுமாறிப்போயிருக்கிறார் விஜய். எதிரணியினர் செய்யும் அமளி துமளியால், சட்டசபையே ரணகளமாகி கிடக்கிறது. இந்தச் சூழலில், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக விரைவிலேயே ‘அகஸ்டா’ நகரத்துக்குப் பறக்கவிருக்கிறார் விஜய். அவர் பறப்பது முதலீடுகளை ஈர்க்க மட்டுமல்ல, குடும்பப் பஞ்சாயத்தையும் தீர்க்கத்தான் என்கிறார்கள் அராசாங்க ரகசியம் அறிந்தவர்கள்.

இதையும் படியுங்க  பாஜக டூ அதிமுக.. இப்போ அங்கேயும் பாய் பாய்! கௌதமியின் அரசியல் மூவ்.. அடுத்து என்ன?

விஜய் முதல்வராக பொறுப்பேற்று புகழின் உச்சியில் இருந்தாலும், அவரது இல்வாழ்க்கை குழப்பங்கள் நிறைந்தது. அவரைத் திருமணம் செய்துகொண்ட சங்கீதா இலங்கையை பூர்வீகமாகக்கொண்டவர். ‘இங்கிலாந்தில் பெரும் செல்வாக்கு படைத்தவரான சங்கீதாவின் தந்தை, தடைசெய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்துக்குப் பெரும் பொருளுதவிகளைச் செய்தவர். அவர் மூலமாகத்தான் விஜய்க்கு இலங்கை மக்களுடன் பிணைப்பு உருவானது.

Republic Tamil

சில ஆண்டுகளுக்கு முன்னர், மகளுக்கும் மருமகனுக்கும் இடையே மனக்கசப்பு தீவிரமடையவே, பேரப் பேரப்பிள்ளைகளை விஜயின் மாமனார்தான் இங்கிலாந்தின் அகஸ்டா நகரத்தில் வைத்து வளர்த்தார். விஜய்க்கும், சங்கீதாவுக்கும் இடையேயான மனக்கசப்பு தீவிரமடைந்து வழக்காடு மன்றம் வரையில் போனது. அண்டை தேசத்து பெரிய மனிதர்கள் எடுத்துச் சொல்லவே, பிள்ளைகளின் எதிர்காலம் கருதி மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா. இரு தரப்பையும் அழைத்துப் பேச முடிவெடுத்த பெரியவர்கள், ‘அகஸ்டா’ நகரத்தில் பஞ்சாயத்தைக் கூட்டியிருக்கிறார்கள். அதில் கலந்துகொள்ளவும்தான் பயணமாகிறார் விஜய்.

முன்னதாகத் தன்னிடம் பேசவந்த சங்கீதாவின் உறவினர்களிடம், ‘என் பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைத் தனியாகச் செய்துவிடுகிறேன். சங்கீதாவுக்கு என்ன வேண்டுமோ அதைக் கேட்கச் சொல்லுங்கள். என் வாழ்க்கையில் அவர் இனி குறுக்கிடக் கூடாது’ என்று சொல்லிவிட்டார் விஜய். அது குறித்த பேச்சுவார்த்தைதான் சங்கீதாவின் தந்தை முன்பாக ‘அகஸ்டா’ நகரத்தில் நடைபெறப்போகிறது. ஒரு பெரிய தொகையைக் கொடுத்து உறவை முடித்துக்கொள்ளப் பார்க்கிறாராம் விஜய்.

இதையும் படியுங்க  விஜய்- த்ரிஷாவுக்கு விவகாரத்துல உதயநிதிக்கு ஏன் வலிக்குது..? வெளுத்து வாங்கிய பாஜக எம்.பி..!

டீக்குக்கூட ஒரு டீஸ்பூன் சர்க்கரையைக் கூடுதலாகப் போடுவதை விரும்பாதவர் விஜய். பண விஷயத்தில் கறார் பேர்வழிதான். வார்த்தைகளைக்கூட அளந்துதான் பேசுவார். ‘விஜய், பொறுப்பேற்றுக்கொள்வதற்கு முன்பு, தன் பெயரிலிருந்த பெரும்பாலான சொத்துகளை விற்று அரபு தேசத்துக்கு அனுப்பிவிட்டார். இவர் எங்கிருந்து சங்கீதாவுக்கு அள்ளிக் கொடுக்கப்போகிறார்?’ என்று இங்கிலாந்து நாட்டில் பலரும் சந்தேகம் கிளப்புகிறார்கள்.

Republic Tamil

குடும்பப் பஞ்சாயத்துக்காகச் செல்வது தெரிந்தால் தன் பெயர் ரிப்பேர் ஆகிவிடுமெனக் கருதியே, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நிகழ்வுகளையும் ‘இங்கிலாந்தில் நடத்தச் சொல்லியிருக்கிறார் விஜய். இதில் ஒரு சுவாரஸ்ய நிகழ்வும் உண்டு. விஜயின் தோழி த்ரிஷாவும் முன்கூட்டியே இங்கிலாந்து சென்றிருப்பதைபரபரப்பாகப் பேசிவருகின்றனர்.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago