Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

eps-Stalin

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, தனது கோட்டைகளாகக் கருதப்பட்ட கொங்கு, தெற்கு மண்டலங்களில் கூடப் பலத்த சரிவைச் சந்தித்து, 46 இடங்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான திமுக 76 இடங்களைப் பெற்றுப் பின்னடைவைச் சந்தித்துள்ளதுடன், முதல்வர் ஸ்டாலினே கொளத்தூரில் தோல்வியை டட ட ட தழுவியுள்ளார்.

மறுபுறம், நடிகர் விஜய்யின் தவெக 109 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பாரம்பரியத் திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியைச் சரித்து, புதிய சக்தியாக விஜய் விஸ்வரூபம் எடுத்துள்ளது தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளது. ஆனாலும், முழுமையான பெரும்பான்மை இல்லாததால் ‘தொங்கு சட்டசபை’ நிலவும் ஏற்பட்டுள்ளது.

இதனை கொண்டாடி தீர்க்கும் தவெகவினர் அதிமுக, திமுக என இரு கட்சிகளையும் கிண்டலடித்து வருகின்றனர். எக்ஸ்தளத்தில் ஒருவர், ”திமுக77 + அதிமுக 53 = 130. 118க்கு மேல 12 அதிகமாகவே இருக்கு…. யோசிங்க பங்காளிஸ். முதல்வர் பதவியிலும், ஆட்சியிலும் 50:50 ஒன்னும் நட்டம் வராது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  தவெக-வின் 'சாஃப்ட் கார்னர்..! பா.ஜ.க-வை எதிர்க்கத் தயங்கும் விஜய்..! தர்மசங்கடத்தில் கூட்டணி கட்சிகள்..!

அவருக்கு பதிலளித்துள்ள நெட்டிசன்கள், ”அதையேதான் நானும் சொன்னேன். அதற்கு என் மகன், “நாம் இப்படிச் செய்தால், அது திமுக தற்கொலை செய்துகொள்வதற்குச் சமமாகிவிடும்” என்று கூறினான் (பாஜக அருகில் இருக்கும்போது, ​​இது கண்ணாமூச்சி ஆட்டம் போன்றது).

பெரும்பான்மையை நிரூபிக்க, தனிப்பெரும் கட்சியை மட்டுமே ஆளுநர் முதலில் அழைப்பார். தவெக சிறிய கட்சிகளின் துணையுடன் எளிதாக ஆட்சி அமைக்க முடியும். மக்கள் தங்கள் தீர்ப்பை அளித்துவிட்டார்கள். போதும், இனிமேல் தாங்காது. கட்சிகள் திமுக அல்லது அதிமுக கூட்டணியிலிருந்து விலகி, விஜயின் கட்சிக்கு ஆதரவு அளிக்கும். தோல்வியை உங்களால் ஏன் தாங்கிக்கொள்ள முடியவில்லை? இதற்காகவா நீங்கள் எதிரியோடு கூட்டணி அமைக்கப் போகிறீர்கள்? பரிதாபம்” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்க  விஜய்யின் 3-வது பித்தலாட்டம்..! பிறக்கப் போகும் குழந்தைகளை ஏமாற்றுகிறார்..! வெளுத்து வாங்கிய முரசொலி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 months ago at 6 months ago