CIRCULAR No: TNRERA/A3/3139/2026 பொருள்: Blank Document / Form-5 / Site Photo / Form-B இல்லாமல் விண்ணப்பித்தால் உடனடி Return – 30 நாள் அவகாசம் கிடையாது
தமிழ்நாட்டில் பிளாட் போட்டு விற்கிறேன், அபார்ட்மெண்ட் கட்டுகிறேன் என்று போர்டு வைத்து, RERA-வில் அப்ளை பண்ணிவிட்டு, “RERA Applied” என்று விளம்பரம் செய்து வந்த பில்டர்களுக்கு இனி அந்த விளையாட்டு செல்லாது.
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNRERA) தலைவர் இன்று (05.11.2026) பிறப்பித்துள்ள அறிக்கை ஒன்றில் புதிய சுற்றறிக்கையின் படி, இனி அரைகுறை டாக்குமெண்ட் கொடுத்தால் அவ்வளவுதான்
இதுவரை நடந்தது என்னவென்றால், பல பில்டர்கள் TNRERA ஆன்லைன் போர்ட்டலில் லேஅவுட் / கட்டிட திட்டத்தை பதிவு செய்யும்போது, போர்ட்டலில் ஃபைல் அப்லோட் பண்ண வேண்டும் என்பதற்காக வெறும் காலி PDF-ஐ, வெற்று டாக்குமெண்டை அப்லோட் செய்து விண்ணப்பித்து வந்தனர்.
அதன் பிறகு அதிகாரிகள் கேள்வி (Query) எழுப்பி, 30 நாள் அவகாசம் கொடுத்து, மீண்டும் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டியிருந்தது. இதனால் பதிவு பிரிவுக்கு தேவையில்லாத வேலைப்பளு.
2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 15 வரை மட்டும் TNRERA-வுக்கு 5,423 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில் 3,251 மட்டுமே பதிவு செய்யப்பட்டன, 1,199 விண்ணப்பங்கள் முழுமையற்ற ஆவணங்களால் திருப்பி அனுப்பப்பட்டன என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் சொல்கிறது. இந்த தாமதத்தை தடுக்கவே இந்த அதிரடி.இனி இந்த 4 தவறு இருந்தா உடனே Return – 30 நாள் கூட கிடையாது!
புதிய விதிப்படி, ஆரம்பக்கட்ட பரிசீலனையிலேயே (Initial Scrutiny) கீழ்க்கண்ட 4 குறைபாடுகள் இருந்தால், எந்த கேள்வியும் கேட்காமல், வழக்கமான 30 நாள் பதில் அவகாசம் கூட கொடுக்காமல் உடனடியாக விண்ணப்பம் Return செய்யப்படும்.

1. காலி டாக்குமெண்ட் (Blank / Empty Document): போர்ட்டல் கேட்கிறது என்பதற்காக 0 KB பைல், வெற்று PDF அப்லோட் செய்தால் உடனே அவுட்.
2. Form-5 இல்லை: கட்டுமான பணி / லேஅவுட் முன்னேற்றத்தை பொறியாளர் / கட்டிடக் கலைஞர் / பட்டய கணக்காளர் சான்றளிக்கும் Form-5 இல்லை என்றால் அவுட். இதுதான் நிஜத்தில் வேலை நடக்கிறதா என்பதற்கான ஆதாரம்.
3. Site Photo இல்லை: திட்ட இடத்தின் தற்போதைய நிலையை காட்டும் Geo-tagged புகைப்படங்கள் இல்லை என்றால் அவுட். ரோடு, வடிகால் இருக்கிறதா என்பதை இதை வைத்துதான் அதிகாரிகள் உறுதி செய்கிறார்கள்.
4. Form-B இல்லை / தவறு: விண்ணப்பதாரரின் சட்டபூர்வ பிரமாணப் பத்திரமான Form-B-யை பதிவேற்றவில்லை, கையெழுத்து இல்லாமல், குறிப்பிட்ட முத்திரைத்தாளில் இல்லாமல் பதிவேற்றினால் அவுட். இதில் தான் பில்டர் முழு பொறுப்பையும் ஏற்கிறார்.
எப்போது முதல் அமல்? இந்த விதி 12.10.2026 முதல் அமலுக்கு வந்துவிட்டது. சுற்றறிக்கை TNRERA/A3/3139/2026-ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன் சமர்ப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்களுக்கும் இது பொருந்தும் என்றும், பரிசீலனை அதிகாரிகள் எந்த விலகலும் இல்லாமல் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வாங்குபவர்களுக்கு என்ன பாடம்? இனி யாராவது பில்டர் “RERA Applied” என்று சொன்னால் நம்பாதீர்கள். காலையில் அப்ளை பண்ணினால் மதியமே ரிஜெக்ட் ஆகும் நிலை வந்துவிட்டது.
வாங்குவதற்கு முன் tnrera.tn.gov.in போர்ட்டலில் Active Registration இருக்கிறதா என்று பார்த்து விட்டு வாங்குங்கள்.
