விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே தீபாவளி பரிசு தொகுப்பை வழங்கி வரும் சி. விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில் விராலிமலை சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு மாவட்ட அமைப்புச் செயலாளராகவும் விராலிமலை சட்டமன்ற தொகுதி மாவட்டச் செயலாளராகவும் கட்சி தலைமை அவருக்கு பதவி வழங்கி உள்ளது.

வழக்கமாக விராலிமலை சட்டமன்ற தொகுதி தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே அந்த தொகுதிக்கு சி விஜயபாஸ்கர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரக்கூடிய நிலையில் ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும் நேரத்தில் பொங்கல் பண்டிகையின் போது விராலிமலை சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு விஜயபாஸ்கரின் பொங்கல் சீர் என்ற பெயரில் பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கமாகும்.

இதையும் படியுங்க  "விஜய்யின் 1 மாத ஆட்சி... போட்டுடைத்த சகாயம் IAS! - திருச்சி கிழக்கு தொகுதிக்கு இவர்தான் வேட்பாளரா?!"

இந்நிலையில் தற்பொழுது விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள சுமார் 80,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு தொகப்பாக ஒரு சில்வர் சம்படம் அரை கிலோ குலோப் ஜாமுன் ஆகியவற்றை ஒரு பை வழங்கப்பட்டு வருகிறது. அந்தப் பையில் என்றும் மக்கள் பணியில் சி விஜயபாஸ்கர் என்று அவரது படமும் இடம்பெற்றுள்ளது.

இடைத்தேர்தலில் சி விஜயபாஸ்கருக்கு தான் மீண்டும் தவெக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே விராலிமலை தொகுதி பொதுமக்களுக்கு தீபாவளி பரிசு தொகை சி விஜயபாஸ்கர் வழங்கி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *