Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Government Girls' School

ஜோலார்பேட்டை அருகே அரசுப்பள்ளி ஒன்றில் மாணவர்கள் சேர்க்கைக்கு அதிக  கட்டணம் வசூலிக்கப்பட்டதால் மாவட்ட கல்வி அலுவலர் கள ஆய்வு‌ மூலம் அம்பலமாகி  தலைமை ஆசிரியை சஸ்பெண்டு செய்யப்பட்டதாகவும்  , அதெல்லாம் இல்லை பிரச்சனையே வேறு , இந்த  காரணங்களால்தான் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார் என  தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக  பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 

48044

மேலும் , ஜோலார்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் *SUSPEND* செய்யப்பட்டது கிட்டதட்ட 5 ஆண்டு காலமாய் திட்டமிட்ட சதியாகும். அவர் சஸ்பெண்டுக்கு பின்னால் முன்னாள் APO திரு. பிரபாகரன் மற்றும்  பள்ளி ஆய்வாளர்களுமே  முழுக்காரணம் அரசுப் பள்ளிக்கு மிக அருகாமையில் உள்ள ஒரு குறிப்பிட்ட தனியார் பள்ளி மாணவர் சேர்க்கையில் பாதிப்பு அடைந்துள்ளதை பொருத்துக் கொள்ள முடியாத அந்த  தனியார் பள்ளி  நிர்வாகம்தான்  பல லட்சங்களை செலவு செய்து பள்ளி ஆய்வாளர்களையும்  (DI)  தரகர்களையும் சில டுபாக்கூர் நிருபர்களையும் தூண்டி , அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளர்ச்சி  பாதையில் கொண்டு சென்ற தலைமை ஆசிரியை சாந்தியை   *SUSPEND* இடை நீக்கம் செய்து உள்ளார்கள் , தனியார் பள்ளிக்கு ஆதரவாக செயல்பட்ட APO போன்றவர்களுக்கு நல்ல ஆசிரியர் விருது கிடைத்தது, ஆனால் ஜோலார்பேட்டை அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியை மாணவர் சேர்க்கை மூலம் உயர்த்தி  அதற்காக பாடுபட்ட தலைமை ஆசிரியர்   தற்பொழுது  சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்… இதற்கு பின்னால் இருக்கும் அரசியல் சதி யாரோ? என கேள்வி குறியோடு  நம் வாட்சப்பில் வந்து விழுந்தது இதனை 

உண்மைத்தன்மையை கண்டறிய republic -தமிழுக்காக கள ஆய்வில் இறங்கினோம் 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகரத்திற்குட்பட்ட இடையம்பட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஜோலார்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த  சுமார் 960  மாணவர்கள் படித்து  வருகின்றனர்  இப்பள்ளி மாணவர்களிடம் பள்ளி வளர்ச்சி குழு சார்பில் , பள்ளி வளர்ச்சி நிதியாக  தலா 500/ வீதம் ரசீது கொடுத்து நிதி  வசூலிக்கப்பட்டது  தெரியவந்தது. 

இதை காரணமாக வைத்து , ஆகஸ்ட் 31-அன்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பள்ளிக்கு வந்து பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை வெளியேற செய்துவிட்டு மாணவர்களிடம் போர்டில் நான் எழுதுவதை அப்படியே உங்கள் பேப்பரில் எழுதி கொடுக்க வேண்டுமென தலைமை ஆசிரியர் சாந்தி மீது புகாரை கட்டாயப்படுத்தி எழுதி வாங்கி சென்றதாக கூறப்படுகிறது , இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 8 – ந்தேதி தலைமை ஆசிரியர் சாந்தி சஸ்பெண்டு செய்யப்பட்டார். மறுநாள் காலை 9-ந்தேதி மாணவர்களின் பெற்றோர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியை சாந்தியை மீண்டும் பணியமரத்த கோரி போராட்டத்தை கையில் எடுத்து எதிர்ப்பை தெரிவித்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கைவிட்டனர் ,  ஆனாலும் தலைமை ஆசிரியர் சாந்தியின் சஸ்பெண்டு ஆர்டரை அவரின் அலுவலக அறை முன் ஒட்டி விட்டு சென்றதாக தெரியவந்ததையடுத்து , பள்ளியின்  தரம் குறைந்துவிட கூடாது மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் விருப்பத்தின் பெயரில் தலைமை ஆசிரியை சாந்தியை மீண்டும் பணியமரத்த கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் செப்டம்பர் 17- (இன்று/ போராட்டித்தை கையில் எடுக்க அக்கட்சியின் சார்பில் நேற்று முன்தினம் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது , இதனை ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு புதுசா வந்திருக்கும் SI கார்த்திக் என்பவர் மிரட்டி தடுத்துள்ளார் , இதனை போட்டோ எடுத்த சில நிருபர்களை அதட்டி  உங்கள் ஐடி கார்டு கொடுங்க பிஆர்ஓ இடம் விசாரிக்கனும் என அட்ராசிட்டியில் ஈடுபட்டதை கண்டு தனியார் பள்ளி ஏவல் ஏஜெண்ட்டா போலீஸ்  என போராட்டக்காரர்கள் கொதித்தனர்

இதையும் படியுங்க  சமூக ஆர்வலரின் லீலை..! 26 வயது மருமகளை கர்ப்பமாக்கி மிரட்டிய 66 வயது மாமனார் கைது..!

*குற்றச்சாட்டு குறித்து தலைமை ஆசிரியர் சாந்தியின் அவரது எண்ணிற்கு தொடர்பு கொண்டோம் தொடர்ந்து நமது அழைப்பை எடுக்கவில்லை* 

*இது குறித்து பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவரிடம் கேட்டதற்கு*  குடிநீர். கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகளுக்கும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் அலுவலக உதவியாளர், காவலாளி போன்றவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக மாணவர்களிடம் இது போன்ற கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம்தான்  தற்போது இந்த பணத்தை கொண்டு 6 புதிய தற்காலிக ஆசிரியர்களை நிரப்பி உள்ளோம்,  அவர்களுக்கு இந்த பணத்தில் இருந்துதான் சம்பளம் கொடுத்து வருகிறோம் பள்ளியின் அனைத்து அடைப்படை வசதிகளை செய்து வருகிறோம்,  இந்த பணத்தில் எந்தவித கையாடலும் இல்லை கணக்கு வைத்து இருக்கிறோம் என்றார் 

*பெயரை கூற விரும்பாத மாணவி ஒருவரின் பெற்றோர் கூறுகையில்*  சாந்தி மேடம் மிகவும் கண்டிப்பானவர்தான் என் பொண்ணை கூட லேட்டாக சென்றதற்கு ஒருமையில் திட்டி இருக்கிறார் அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை  மாணவர்களின் நலனுக்கும் பாதுகாப்புக்குதான் அவர் அப்படி உரிமையுடன் நடந்துக் கொள்கிறார், சக ஆசிரியர்கள் அதிகாரிகளை கூட சில நேரங்களில் ஒருமையில் பேசுவதாக கேள்விப்பட்டேன் ,  நல்லவர்கள் எப்பவும் தவறை கண்டு ஆத்திரப்படுவார்கள்  ஏசுவார்கள் சாந்தி மேடம் நல்லவர்தான் அருகில் தனியார் பள்ளிகள் இருக்கிறது அங்கெல்லாம் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது , சாந்தி மேடம் வந்த பிறகு தான் ஒழுக்கம். கட்டுப்பாடு மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது,  இவரை இங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டால் அரசு பள்ளி தரம் குறையும் மாணவர்கள் தனியார் பள்ளிகளை நாடி செல்வார்கள் இந்த சதி திட்டத்தை  மாவட்ட கல்வி அலுவலர் முதல் சில ஆசிரியர்கள் போலீஸ் மற்றும் இடைத்தரகர்கள் வரை செயல்படுத்த தொடங்கி உள்ளதாக  போராட்டத்தில் பேசினார்கள்,  தனியார் பள்ளியில் எம் பொண்னை படிக்க வைத்தால் ஆண்டுக்கு 50 ஆயிரம் முதல் லட்சங்கள் வரை செலவு ஆகலாம்  , அரசு பள்ளியில் எந்த பணமும் கட்ட வேண்டியதில்லை அடிப்படை வசதிகளை செய்யதான் அதுவும் இந்தாண்டு வெறும் 500/ ரூபாய் கொடுத்தோம் அதற்கு ரசீதுகளும் கொடுத்திருக்கிறார்கள் என்றார் 

இதையும் படியுங்க  மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் `செக்' - சூடாகும் திருப்பத்தூர் திமுக !

இதுகுறித்து மாவட்ட முதன்மை பள்ளி கல்வி அலுவலர் புண்ணியக்கோட்டியை தொடர்பு கொண்டோம்*  . நீங்கள் யார் ? என விவரத்தை கேட்டுவிட்டு சில நிமிடங்கள் வரை அமைதியாக இருந்தவர் அவசர மீட்டிங்கில் இருப்பதாகவும் பின்னர் பேசுவதாக கூறி அழைப்பு துண்டித்தார் 

தலைமையாசிரியர் குறித்து  ஆர்எஸ்எஸ் பிரமுகர் விக்னேஷ் கூறுகையில்*  .. தலைமை ஆசிரியர் சாந்தி பள்ளி மாணவர்களிடம் ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்து பள்ளியின் தரத்தை மேம்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியதை வரவேற்கிறேன் . ஆனால் பள்ளி மாணவர்களிடம் தலா 500/ விதம் வசூல் செய்தது எந்த நோக்கத்திற்காக ? 960 மாணவர்களிடம் 4லட்சத்து 80 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது ! அந்த பணம் எதற்கெல்லாம் செலவிடப்பட்டுள்ளது ? என்ன நோக்கத்திற்காக வசூலித்தார் கடந்த 7 ஆண்டுகளாக இதே பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார் சாந்தி ,வேறு பள்ளிக்கு மாறுதலாகி செல்லாமல் இருக்கும் காரணம் என்ன? , வேறு அரசு பள்ளியின் தரத்தை இதே போன்று உயர்த்தலாமே ! ஏன் பணி மாறுதல் செய்தாலோ பணியிடைநிக்கம் செய்தாலோ மாணவர்கள் அவர்களது பெற்றோர்களை தூண்டி போராட்டத்தில் ஈடுபட்ட வைக்கிறார் என அடுக்காக குற்றச்சாட்டுகளை அடுக்கினார் 

இதையும் படியுங்க  We named the Magic Wand Rechargeable Cordless Vibrator one of

*போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி முல்லை என்பவரிடம் பேசினோம்* 

தலைமை ஆசிரியர் சாந்தி 2019 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். ஆரம்பத்தில் 400 மாணவர்கள் பயின்று வந்த நிலையில் சாந்தியின் அதிரடி நடவடிக்கையால் ஆண்டுதோறும் மாணவர்கள் அதிகரிக்கப்பட்டு தொடர்ந்து 5 வருடங்களாக 💯 சதவீதம் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் இப்பள்ளி அதிக மதிப்பெண்களை பெற்ற பட்டியலில் இடம்பிடித்துள்ளது 

சம்மந்தப்பட்ட பெண்கள் அரசு பள்ளியை சுற்றி இருக்கும்,  சில தனியார் பள்ளிகளின் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது,  இதற்கு காரணம் தலைமை ஆசிரியர் சாந்தி’தான் , இதனை பொறுத்துக் கொள்ள முடியாத தனியார் பள்ளி நிர்வாகிகள் சில புரோக்கர்களை தூண்டிவிட்டு அரசு பள்ளியில் நுழைந்து அக்கரமத்தில் ஈடுபட வைத்தனர்,  சம்மந்தப்பட்ட பெண்கள் பள்ளியில் வட்டார கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது இங்கு செல்வதாக கூறி சில போதை கும்பல்களை அனுப்பி அச்சுறுத்தல் செய்ய பார்த்தனர் , வேறு வழியின்றி இப்ப  ஏதேதோ காரணத்தை சொல்லி தலைமை ஆசிரியரை  பனியிடை நீக்கம் செய்துள்ளார்கள், முன்பிருந்த CEO முதல் தற்போது உள்ள CEO வரை பள்ளியின் தரத்தை கெடுக்க உடந்தையாக இருந்ததாக பெற்றோர்கள் தரப்பில் பேசப்படுகிறது.  பள்ளியின் தரத்தை கெடுக்க நினைப்பதாலே அதனை முறியடிக்க கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டத்தை கையில் எடுத்து இருக்கிறோம் என்றார் .

தலைமை ஆசிரியர் மீதான புகார் அவரது தனிப்பட்டது  விசாரிக்கப்படுவதும் உரிமையும் கூட , ஆனால் அரசு பள்ளியின் வளர்ச்சிக்கு தடையாகவும், தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முதல்  பள்ளி ஆய்வாளர் போலீஸ் வரை அரசுப் பள்ளிக்கு ஆதரவாக குரல் எழுப்பவர்களை கண்டு பதட்டப்படுவதும் பதறி நசுக்கப்பார்ப்பதும்  தெள்ளத்தெளிவாக தெரிகிறது, சமீபகாலமாக தவெக ஆட்சியில் அரசு பள்ளிகள் மூடி வருவதாகவும் , தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக பரவலான குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் தற்போது இப்பள்ளியின் சர்ச்சை குறித்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் , ஒரு புறம் அரசு பள்ளிக்கு ஆதரவாக போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதாலும்  960 அரசு பள்ளி மாணவிகளின் படிப்பு கேள்வி குறியாகியிருக்கிறது?.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago