Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Mandati

பொன்னியின் செல்வன் 2, ஜப்பான், மெய்யழகன், கங்குவா, வா வாத்யார், சர்தார் 2 என தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார் கார்த்தி. நான் மகான் அல்ல, கடைக்குட்டி சிங்கம், விருமன் படங்களில் கார்த்தியுடன் காமடியனாக நடித்த சூரி.. இப்போது அவருடன் கதாநாயகனாக மோதி ஜெயித்துள்ளார். பாக்ஸ் ஆபீஸ் ரேஸ்ல இப்போ எல்லாரோட கவனமும் சூரி நடித்த ‘மண்டாடி’ பக்கம் தான் திரும்பியிருக்கு. கார்த்தியோட ஸ்பை த்ரில்லர் படமான ‘சர்தார் 2’ கூட மோதி, வசூல்ல செம்ம கெத்து காட்டி முன்னிலையில போய்ட்டு இருக்கு ‘மண்டாடி’. ஃபர்ஸ்ட் வீக்கெண்டுக்கு அப்புறம் ரெண்டு படத்தோட வசூலும் கொஞ்சம் கம்மியானாலும், கார்த்தி படத்தை விட சூரி படம் ரொம்பவே ஸ்ட்ராங்கான பொசிஷன்ல இருக்கு.

Republic Tamil

செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, ‘மண்டாடி’ படம் ரிலீஸான 6-வது நாள்ல மட்டும் ரூ. 2.95 கோடி வசூல் பண்ணியிருக்கு. இதனால இந்தியாவில் இதோட மொத்த நிகர வசூல் (Net Collection) இப்போ ரூ. 48.80 கோடியைத் தொட்டுடுச்சு! தமிழ்நாட்டுல மட்டும் இல்லாம இந்தியா முழுக்க ரூ. 50 கோடி வசூல்ன்ற பெரிய மைல்கல்லைத் தொட இதுக்கு இன்னும் வெறும் ரூ. 1.20 கோடி தான் தேவைப்படுது.

இதையும் படியுங்க  Look for neat stitching, sturdy materials, strong hardware,

ரூ. 50 கோடி கிளப்பில் இணையப் போகும் சூரி!

வழக்கமா வீக்கெண்ட் முடிஞ்சு ஒர்க்கிங் டேஸ் வந்தாலே தியேட்டர்ல கூட்டம் கொஞ்சம் குறையும். அதே மாதிரி தான் ‘மண்டாடி’ படத்துக்கும் முதல் செவ்வாய்க்கிழமை கொஞ்சம் வசூல் குறைந்திருக்கு. 5-வது நாள்ல ரூ. 11.25 கோடி வசூலிச்ச இந்தப் படம், 6-வது நாள்ல மாலை வரைக்கும் ரூ. 2.95 கோடிய ஈட்டியிருக்கு.

செவ்வாய்க்கிழமை மட்டும் கிட்டத்தட்ட 2,980 ஷோக்கள் திரையிடப்பட்டு, 27.7% தியேட்டர் ஆக்குபென்சி இருந்திருக்கு. இதையெல்லாம் வச்சுப் பார்க்கும்போது, இந்தியாவில் இதோட மொத்த கிராஸ் வசூல் ரூ. 57.11 கோடியை எட்டியிருக்கு. வேர்ல்டுவைடா பார்த்தா ‘மண்டாடி’ படம் இதுவரைக்கும் ரூ. 65 கோடிக்கும் அதிகமா கலெக்ட் பண்ணி செம்ம மாஸ் காட்டியிருக்கு!

Republic Tamil

கடுமையான சரிவில் ‘சர்தார் 2’!

இன்னொரு பக்கம், பெரிய எதிர்பார்ப்போட வந்த கார்த்தியின் ‘சர்தார் 2’ பாக்ஸ் ஆபீஸ்ல ரொம்பவே தடுமாறிட்டு இருக்கு. 5-வது நாள்ல ரூ. 1.50 கோடி வசூலிச்ச இந்தப் படம், 6-வது நாள்ல வெறும் ரூ. 39 லட்சம் மட்டுமே வசூலிக்க முடிஞ்சிருக்கு. இதுவரைக்கும் இந்தியாவில் ‘சர்தார் 2’ படத்தோட மொத்த நிகர வசூல் ரூ. 13.49 கோடி தான் (கிராஸ் வசூல் ரூ. 15.81 கோடி).

இதையும் படியுங்க  கதிகலங்கிய கடலூர்.. அதிகாலையிலேயே துப்பாக்கி சத்தம்.. ரவுடியை ரவுண்ட் கட்டிய போலீஸ்.. யார் இந்த கோபி?

இப்போதைக்கு இந்த படம் 1,955 காட்சிகளோட ஓடிட்டு இருக்கு, செவ்வாய்க்கிழமை தியேட்டர் வருகை வெறும் 20.2% தான் பதிவாகியிருக்கு. ‘சர்தார் 2’ மொத்த வசூலே இன்னும் 15 கோடியை தாண்டாத நிலையில், ‘மண்டாடி’ படம் அதைவிட பல மடங்கு பெரிய வித்தியாசத்துல வேற லெவல்ல முன்னிலையில் இருக்கு.

இன்னும் ஓரிரு நாட்கள்ல ‘மண்டாடி’ அசால்ட்டா ரூ. 50 கோடி கிளப்ல இணைந்துவிடும்னு எதிர்பார்க்கப்படுது. செவ்வாய்க்கிழமை நைட் ஷோக்கள் வசூலும் சேர்ந்தா இந்த கணக்கு இன்னும் எகிறும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 days ago at 7 days ago