Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Tension in Aathiyur.

திருப்பத்தூர் அரசியல் களத்தில் அடிக்கல் நாட்டுவதும், ரிப்பன் கத்தரிப்பதும் சாதாரண விஷயம்தான். ஆனால், “நீங்க கட்டினீங்க… நாங்க திறக்கிறோம்… பிறகு நீங்க ஆட்சிக்கு வந்து கிராண்டா திறந்துக்கோங்க!” என்று ஒரு எம்.எல்.ஏ-வே ஸ்பாட்டில் பஞ்ச் டயலாக் பேசி, தண்ணீர் தொட்டியைத் திறந்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ரூ.5 கோடி கட்டிடங்கள்… திறக்கப்படாமல் முடங்கிய கதை!

கந்திலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காக்கங்கரை, நத்தம், பேராம்பட்டு, கசிநாயக்கன்பட்டி, ஆதியூர் உள்ளிட்ட 7 இடங்களில், கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் சுமார் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பள்ளிக் கட்டிடங்கள், அங்கன்வாடி மையங்கள், குடிநீர்த் தொட்டிகள், மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்த நிலையிலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அவை முறையாகத் திறந்து வைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் அப்பகுதி மக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது

இந்த நிலையில்தான், இன்னும் சில தினங்களில் இந்த மாவட்டத்தின் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் இதனால், பதவிக்காலம் முடிவதற்குள் இந்தக் கட்டிடங்களைத் திறந்துவிட வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் விருப்பமாக இருந்தது,

இதையும் படியுங்க  "ரசிகன் உயிருக்கு ₹3 லட்சம் இன்சூரன்ஸ்!" - திரையுலகை அதிரவைத்த அல்லு அர்ஜுனின் மாஸ் அதிரடி!

இதனை அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் அவசரம் ஏற்ப்பாடாக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்குத் நேற்று முன்தினம் மிட்நைட்டில் தகவல் கொடுக்கப்பட்டு, அவசர அவசரமாகத் இன்று காலை திறப்பு விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக அப்பகுதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் நிகழ்ச்சியாக ஆதியூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர்த் தொட்டியைத் திறந்து வைக்க த.வெ.க எம்.எல்.ஏ திருப்பதியை அழைத்து சென்றார் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்போது, ஆதியூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவரும், தி.மு.க-வைச் சேர்ந்தவருமான பழனிவேல் அங்கு வந்து “தங்களுக்கு எந்தவொரு முறையான தகவலும் அளிக்காமல் நடு ராத்திரியில் தகவல் சொல்லிட்டு யாருக்கும் தெரியாமல் திறந்து வைப்பதாக” கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

அப்போது பேசிய எம்.எல்.ஏ திருப்பதி, “தற்போது நாங்க திறந்து வைக்கிறோம்… பின்னர் நீங்கள் ஆட்சிக்கு வந்து கிராண்டாக திறந்து வையுங்கள்!” என்று கூறி, தண்ணீர் தொட்டியைத் திறந்து வைத்துவிட்டு சென்றார் அடுத்த திறப்பு விழாவிற்கு ,இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்க  மோடியின் WFH சிஸ்டம் சரிப்பட்டு வராது..! பாஜகவின் நண்பர் ஜோஹோ- ஸ்ரீதர் வேம்பு அதிரடி முடிவு..!

உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் உரிமை எங்கே? இந்தச் சம்பவம், தமிழக அரசியலில் மீண்டும் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளது. அதுதான், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான முக்கியத்துவம்! அரசமைப்புச் சட்டத்தின் 73-வது திருத்தத்தின்படி, அதிகாரப் பரவலாக்கலின் அடிநாதமே உள்ளாட்சி அமைப்புகள்தான். ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் என மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தங்கள் பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளில் முறையாகப் பங்கேற்க வேண்டும் என்பதே ஜனநாயக மரபு. குடிநீர்த் தொட்டியோ, பள்ளிக் கட்டிடமோ… அது எந்த ஆட்சியில் கட்டப்பட்டது என்பதைவிட, அது மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டது என்பதே உண்மை. அதைத் திறக்கும் போது சம்பந்தப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு முறையான அழைப்பு விடுத்து, அவர்களின் பெயர்களை கல்வெட்டில் பதித்து முன்னிலைப்படுத்துவதுதான் நாகரிகம் கடமையும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.”

ராத்திரியோடு ராத்திரியாக தகவல் கொடுத்துவிட்டு, கடமைக்கு அழைத்தோம் என்று சொல்வதும், அவர்களை ஓரங்கட்டிவிட்டு திறப்பு விழா நடத்துவதும் உள்ளாட்சி ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் செயல்” என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்

இதையும் படியுங்க  Sellers who offer PSP QC, talk clearly, and stand behind

மறுபுறம், “கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் பயன்பாடின்றி கிடந்தால், அது மக்களுக்குத்தான் நஷ்டம். யார் திறந்தால் என்ன… மக்கள் பயன்பாட்டிற்கு வந்தால் போதும்” என்று மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்

எது எப்படியோ… ஆதியூர் தண்ணீர் தொட்டி திறப்பு விவகாரம், திருப்பத்தூர் மாவட்ட அரசியலில் அடுத்த சில நாட்களுக்கு அனல் பறக்க வைக்கும் என்பது மட்டும் நிச்சயம்!

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 hours ago at 6 hours ago