Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

திருவள்ளூர் அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்த மாணவன், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்றது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மும்மடி பூண்டி அடுத்த அரியத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு – செல்லா தம்பதியின் மகன் அபிஷேக். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.

தேர்வுகள் முடிந்து விடுமுறையில் இருந்த நிலையில், தனது நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானபோது, உயிரிழந்த மாணவன் அபிஷேக் 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளதாக தெரியவந்தது.

இந்தச் செய்தி அப்பகுதி மக்களின் மனதை ஆழமாக கலங்கடையச் செய்துள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago