கரூர் மாவட்டத்தில் 19 போலீசார் பணியிட மாற்றம்
கரூரில் துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட 19 பேர் பணியிடமாற்றம்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது பணியாற்றிய காவலர்களும் பணியிடமாற்றம்
டாஸ்மாக் சூப்பர்வைசர் கைது
சீர்காழியில் பாட்டிலுக்கு ரூ.10 வசூல் செய்ததாக டாஸ்மாக் சூப்பர்வைசர் கைது. கைதை கண்டித்து மயிலாடுதுறை முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை அடைத்து போராட்டம். பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டத்தை கைவிட்ட டாஸ்மாக் ஊழியர்கள்
“எங்கள் முடிவை பரிசீலிப்போம்”
“அதிமுக ஆதரவை தவெக பெற்றால் எங்களது முடிவு குறித்து மறுபரிசீலனை செய்வோம். ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தோம். அதிமுகவை அமைச்சரவையில் சேர்ப்பது மக்கள் தீர்ப்புக்கு எதிரானது” – சிபிஐ மாநில செயலாளர் சண்முகம்
மீண்டும் உயர்வு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 79 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு 86 காசுகள் உயர்வு
பெட்ரோல், டீசல் விலை ஏற்கனவே ரூ.3 உயர்ந்த நிலையில், மேலும் உயர்வு. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.46க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.96.11க்கும் விற்பனை
“துரோகம்”
“பதவிக்காக சிலர் துரோகம் செய்துவிட்டு சென்றுள்ளனர். இக்கட்டான சூழலில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்”- மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஈபிஎஸ் பேச்சு
3 போதைப்பொருள் தடுப்பு படை
சென்னை வடக்கு மண்டலத்தில் 3 போதைப்பொருள் தடுப்பு படை அமைப்பு. ஒவ்வொரு தனிப்படையும் உதவி ஆய்வாளர் தலைமையில் செயல்படும்
இந்த தடுப்பு படை CM விஜய்யின் நேரடி கண்காணிப்பில் செயல்படும். தமிழகம் முழுவதும் 65 போதைப்பொருள் தடுப்பு படைகள் அமைப்பு
CM விஜய்யிடம் மக்கள் எதிர்பார்ப்பது..?
“நான் பார்த்தவரை CM விஜய் தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என மக்கள் நினைக்கவில்லை, சட்டம், ஒழுங்கு நன்றாக இருக்க வேண்டும், முந்தைய திட்டங்கள் தொடர வேண்டும், அன்றாடம் எந்த பிரச்னையும் இருக்க கூடாது, இது தான் மக்கள் எதிர்பார்ப்பது..”
“ஏமாற்ற முடியாது”
“பலரைச் சில காலம் ஏமாற்றலாம். சிலரைப் பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது!”- திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் X தளத்தில் பதிவு
இந்தியா வருகிறார் புதின்
வரும் செப்டம்பர் 12,13-ல் இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வருகிறார் புதின்
“மின்சார வாரியம் கடனில் இருக்கிறது”
“மின்சார வாரியத்தில் சுமார் ரூ.2.5 லட்சம் கோடி கடன் உள்ளது. மின்சார வாரியத்தில் ஊழியர் பற்றாக்குறையும் உள்ளது. 200 யூனிட் இலவச மின்சாரம் வரும் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும். ஊழியர்களை அதிகப்படுத்திவிட்டு மாதம் ஒருமுறை மின்சாரம் கணக்கெடுக்கும் பணி தொடங்கும்” -சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பேட்டி
“மது விற்பனை – கடும் நடவடிக்கை”
“மதுபோதையில் காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது வழங்கக்கூடாது. மது விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளோம்”
- பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து நெல்லை எஸ்.பி பிரசன்ன குமார்
தடம்புரண்ட பயணிகள் ரயில்
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் தடம்புரண்ட பயணிகள் ரயில் – பரபரப்பு. ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
கருப்பு' படக்குழு வருத்தம் -
கருப்பு’ திரைப்படத்தில் இளையராஜா தொடர்பான காட்சிகள் நீக்கம்
“50-வருடங்களுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை, காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ படக்குழுவிற்கு சிறிதளவும் இல்லை வருத்தம் தெரிவித்துது திரைப்படக்குழு”
