Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தி.மு.க-வின் எதிர்காலக் கூட்டணி வியூகங்கள், பா.ஜ.க எதிர்ப்பு நிலைப்பாடு குறித்தும், அப்படி தவறும்பட்சத்தில் தி.மு.க சந்திக்க நேரிடும் அரசியல் வீழ்ச்சி குறித்து பத்திரிகையாளரும் அரசியல் விமர்ஸ்கருமான தராசு ஷியாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர், ”234 நாள் தொகுதிகளிலும் போட்டியிட்டு விஜய் கட்சி வாங்கிய ஓட்டு கிட்டத்தட்ட 170 தொகுதிகளில் நின்று திமுக மட்டும் வாங்கிய ஓட்டு என்று ஒப்பிட்டு பார்த்தால் இரண்டும் ஒன்றாகத்தான் வருகிறது. 234 தொகுதிகளிலும் ஒப்பிட்டு வகுத்து பார்த்தால் திமுக 24 சதவீதம் வாக்கு வங்கி பெற்றுள்ளது. அதாவது எந்த கூட்டணியிலும் இல்லாமல் 234 தொகுதிகளிலும் திமுக நின்று இருந்தால் தவெக ஓட்டை விட அதிகமாக கூட வந்திருக்கலாம். நமக்கு தெரியாது.

கூட்டணி கட்சிகளுக்கு பெரிய அளவில் இடங்கள் விட்டுக் கொடுக்கப்பட்டன. தேமுதிகவுக்கு 10 இடம் கொடுத்ததனால் தான் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு வருத்தம் வந்தது என்றால் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடம் கொடுத்ததில் மற்றவர்களுக்கு எவ்வளவு வருத்தம் வந்திருக்கும்? ஆனால் இது சட்டச பேரவை தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியை பற்றி இவ்வளவும் தெரிகிறது. பிரவீன் சக்கரவர்த்தி போட்ட ட்வீட்டும் எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் திமுக அதையெல்லாம் பொறுத்துக் கொண்டுதான் இந்த தேர்தலில் எப்படியாவது நமது கூட்டணியில் கொண்டு வந்து ஜெயித்து விட வேண்டும் என்ற முடிவில் இருந்தது.

இதையும் படியுங்க  "கடைசி பெஞ்ச் மாணவர்கள் என்ன ஆவாங்க?" - பள்ளி ஆய்வில் கீர்த்தனா விட்ட வார்த்தை.. எகிறிய உதயநிதி..!

காங்கிரஸ் உடைய வாக்கு வங்கி இதுதான் என்பது தெரியும். அதன் கூட்டணியும் இப்போது புரிந்து விட்டது. இருந்த போதும் பாஜக எதிர்ப்பில் இன்னும் வலுவாக திமுக இருக்கிறதா? பாஜகவுடன் கூட்டணி அமைக்குமா? அல்லது தனித்து விடப்பட்டுள்ளதா? இந்தியா கூட்டணியை விட்டு என்.டி.ஏ கூட்டணியை நோக்கி நகருமா? என்றால் ஒரு தடவை பட்டால் சூடு. தொடர்ந்து பட்டுக்கொண்டே இருப்பார்கள் என்றால் அது சுடுகாடு தான். இனிமேலும் இப்படித்தான் என்றால் இனி திமுக எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது என்கிற நிலைமை உருவாகும்” என எச்சரித்துள்ளார் பத்திரிகையாளர் தராசு ஷியாம்.

சுவாரஸ்யமான செய்திகளை உடனுக்குடன் வாசிக்க, எங்களுடன் வாட்ஸ் அப் சேனலில் தொடர இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் https://www.whatsapp.com/channel/0029VbCLl4wAzNbnK5JVXq3s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago