Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழக அரசியல் களத்தில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் கட்சிகளில் இணைவதும், அவர்களுக்குப் பதவிகள் வழங்கப்படுவதும் தொடர் விவாதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ‘ஏ’ பிளஸ் (A+) பிரிவு ரவுடியான தினேஷ் என்பவருக்குக் காங்கிரஸ் கட்சியில் மாநில அளவிலான முக்கியப் பதவி வழங்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தின் மறைந்த பிரபல ரவுடி ஸ்ரீதரின் ஓட்டுநராக இருந்தவர் இந்த தினேஷ். கடந்த 2016-ல் ஸ்ரீதரின் மறைவுக்குப் பிறகு, காஞ்சிபுரத்தில் தாதா ராஜ்ஜியத்தைக் கைப்பற்ற ஸ்ரீதரின் மைத்துனர் தணிகா ஒரு குழுவாகவும், தினேஷ் ஒரு குழுவாகவும் பிரிந்து மோதிக்கொண்டனர். இந்த கோஷ்டி மோதல்களால் காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து பல்வேறு கொலைச் சம்பவங்கள் அரங்கேறின. ரவுடி தினேஷ் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து மற்றும் பணம் பறித்தல் என 40-க்கும் மேற்பட்ட மிகத் தீவிரமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாவட்டத்தின் ‘சரித்திரப் பதிவேடு குற்றவாளி’ -யான இவர், பலமுறை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை, சேலம் சிறைகளில் அடைக்கப்பட்டவர்.

இதையும் படியுங்க  இனி அதிமுக அவ்வளவுதான்..! எடப்பாடிக்கு புது சிக்கல்..! இது நடந்தால் விஜயும் மண்ணை கவ்வுவார்..! பீதியில் ஸ்டாலின்..!

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவின் மாநிலத் துணைத் தலைவராக ரவுடி தினேஷ் அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார். தனக்குப் பதவி வழங்கிய ஆர்.டி.ஐ பிரிவின் மாநிலத் தலைவர் கனகராஜுக்கு நன்றி தெரிவித்து தினேஷ் காஞ்சிபுரம் முழுவதும் ஒட்டியுள்ள போஸ்டர்கள், தற்போது பொதுமக்கள், அரசியல் விமர்சகர்களிடையே கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

‘ஏ’ பிளஸ் ரவுடி என்றால் என்ன?
காவல் துறை நிலை ஆணைகளின்படி, ரவுடிகள் அவர்களின் குற்றத் தன்மையைப் பொறுத்து ஏ-பிளஸ், ஏ, பி, சி என வகைப்படுத்தப்படுகின்றனர். இதில் ‘ஏ’ பிளஸ் என்பது மிகவும் அபாயகரமான, கொடூரமான குற்றவாளிகளைக் குறிப்பதாகும். சொந்தமாக ஒரு கூட்டமைப்பை உருவாக்கி, குற்றங்களை மிகத் துல்லியமாகத் திட்டம் தீட்டி நடத்தும் தலைவர்களே இப்பட்டியலில் சேர்க்கப்படுவர். இவர்களைக் காவல் துறை எப்போதும் 24 மணி நேரமும் பிரத்யேகமாகக் கண்காணிக்க வேண்டும் என்பது விதியாகும்.

அரசுத் துறைகளின் ஊழல்களை வெளிக்கொண்டு வரப் பயன்படும் பிரிவின் மாநிலத் துணைத் தலைவராகவே, 40 வழக்குகளைக் கொண்ட ஒரு ‘ஏ பிளஸ்’ ரவுடி நியமிக்கப்பட்டிருப்பது அக்கட்சியின் நேர்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது என சமூக ஆர்வலர்கள் குமுறுகின்றனர்.

இதையும் படியுங்க  "அங்க தேடாதே தம்பி..!" - விஜய்யின் பன்ச் டயலாக்கிற்கு ஸ்டாலின் கொடுத்த மரண மாஸ் பதிலடி!

சுவாரஸ்யமான செய்திகளை உடனுக்குடன் வாசிக்க, எங்களுடன் வாட்ஸ் அப் சேனலில் தொடர இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் https://www.whatsapp.com/channel/0029VbCLl4wAzNbnK5JVXq3s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago