Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Thiruvannamalai

நவம்பர் 15-ல் கொடியேற்றம்.. நவம்பர் 22 -ல் மாகா தேரோட்டம்.. நவம்பர் 24-ல் மகா தீபம் ..

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை. அந்த மலையே சிவன்… அந்த ஜோதியே சிவன்! ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாதம் வந்தால் போதும், லட்சக்கணக்கான பக்தர்களின் கண்களும், மனங்களும் அந்த 2,668 அடி உயர மலை உச்சியை நோக்கியே தவமிருக்கும். 2026-ம் ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருவிழா, பிரம்மோற்சவமாக பத்து நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது.

மலை உச்சியில் மகா தீபம் தெரிந்த பிறகுதான் தமிழகமெங்கும் வீடுகளில் தீபம் ஏற்றுவார்கள் என்பது ஐதீகம். அப்படிப்பட்ட புண்ணிய திருவிழாவின் முழு ட்ரெண்ட் அட்டவணை இதோ…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2026 – முழு அட்டவணை

கொடியேற்றம்:-  நவம்பர் 15, ஞாயிறு – நாள் 1 – கொடியேற்றம் , பத்து நாள் திருவிழாவின் தொடக்கம். அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதி முன் உள்ள தங்கக் கொடி மரத்தில் புனிதக் கொடி ஏற்றப்படும். அன்று இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் திருவீதி உலா.

இதையும் படியுங்க  There have been a few small studies on CBD

நவம்பர் 16, திங்கள் – நாள் 2: இந்திர விமானம் காலை, மாலை இருவேளையும் சிறப்பு அபிஷேக ஆராதனை. இரவு: இந்திர விமானத்தில் பஞ்சமூர்த்திகள் உலா. தேவேந்திரனே வந்து வணங்கிய திருக்கோலம்!

நவம்பர் 17, செவ்வாய் – நாள் 3: அன்ன வாகனம் மாலையில் சிம்ம வாகனத்தில் அம்மன் தனிக் காட்சி. இரவு: அன்ன வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா. அன்னை உண்ணாமுலையாள் அன்னத்தில் மிதந்து வரும் அழகை காண கண் கோடி வேண்டும்.

நவம்பர் 18, புதன் – நாள் 4: மயில் வாகனம் இரவு: மயில் வாகனத்தில் முருகப்பெருமான் முன்செல்ல, பஞ்சமூர்த்திகள் உலா. மலை சுற்றும் வீதிகளில் பக்தி வெள்ளம் கரைபுரளும்.

நவம்பர் 19, வியாழன் – நாள் 5: காமதேனு – கற்பக விருட்சம் காலையில் காமதேனு வாகனம், இரவில் கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி உலா. வேண்டிய வரம் தரும் கோலம்!

நவம்பர் 20, வெள்ளி – நாள் 6: வெள்ளி ரிஷப வாகனம் அதிகாலை முதலே கோவிலில் கூட்டம் அலைமோதும். இரவு: பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் திருவீதி உலா. நந்தி மீது ஈசன் வரும் காட்சி… சொர்க்கமே!

இதையும் படியுங்க  சித்தர்கள் வாழும் திருவண்ணாமலை..! ஒருமுறை கிரிவலம் வந்தால் ஓடிப் போகும் கர்ம வினைகள்..!

நவம்பர் 21, சனி – நாள் 7: யானை வாகனம் இரவு: யானை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் உலா. மேளதாளம் முழங்க, மாட வீதிகள் அதிரும்.

மகா தேரோட்டம்: –  “நவம்பர் 22, ஞாயிறு – நாள் 8: பெரிய தேர் காலை: மகா தேரோட்டம்”  அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் தனித்தனி பெரிய தேர்களில் வலம் வருவர். லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிப்பர்.

நவம்பர் 23, திங்கள் – நாள் 9: குதிரை வாகனம் இரவு: தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி உலா. நாளை மகா தீபம் என்பதால் திருவண்ணாமலையே விழாக்கோலம் பூணும்.

மகா தீபம் :-  “நவம்பர் 24, செவ்வாய் – நாள் 10: மகா தீபம்” – திருக்கார்த்திகை இதற்காகத்தான் கோடிக் கண்கள் காத்திருக்கின்றனர்  அன்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை சுமார் 6 மணிக்கு, அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் தீபம் காட்டியதும், 2,668 அடி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். அந்த ஜோதியைக் கண்டதும் `அண்ணாமலையாருக்கு அரோகரா!’ என்ற கோஷம் விண்ணைப் பிளக்கும். அதன்பிறகுதான் பக்தர்கள் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றுவர்.

இதையும் படியுங்க   ”6 வயதில் அப்பா போட்ட மேக்கப் முதல் இளையராஜா ரகசியம் வரை ஓப்பனாக பேசிய அதிதி ஷங்கர்!

நிறைவு –  மறுநாள் தெப்பத் திருவிழாவுடன் விழா நிறைவு பெறும். மலையைச் சுற்றி கிரிவலம் வரும் பக்தர்களே… இந்த கார்த்திகையில் அண்ணாமலையான் அருள் உங்கள் இல்லமெங்கும் ஜோதியாய் பரவட்டும்!

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago