Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

பண்ணையாரும் பத்மினியும் போல நாம் தமிழர் கட்சி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும், அவர் வாங்கும் ஆடம்பர கார்கள் குறித்த சர்ச்சைகளும் அவ்வளவு சீக்கிரம் பிரித்து விட முடியாது.

தனது கார் வாங்கிய பின்னணிகள் குறித்தெல்லாம் விமர்சனங்கள் பரவி வருவதால் திறள் நிதி மூலம் பெறப்பட்ட பணத்தில் கார் வாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை சீமான் ஆவேசமாக பொதுவெளியில் மறுத்துள்ளார். ”கட்சி காசுல ஒரு தேனீர்கூட அருந்த மாட்டோம்டா. நாங்க திறல்நிதி காசுல என்ன கார் வாங்கிட்டார்.. கார் வாங்கிட்டார்னு சொல்றீங்க. உங்க ஆத்தா, அப்பன் தாலையை அறுத்து வித்தாடா வாங்கிணோம். என்னடா சீமான் பென்ஸ் கார் வாங்கிட்டாருனு சொல்றீங்க.. சீமான் பென்ஸ் கார் இல்லடா பிளைட் வாங்கிட்ட பிளைட்கூட வாங்குவான்..” என பதிலடி கொடுத்துள்ளார்.

அதாவது ஆகஸ்ட் இரண்டாம் தேதி சென்னை பல்லாவரத்தில் நாம் தமிழர் கட்சியின் புதிய உறவுகள் இணையும் விழாவில் பேசிய சீமான் கார் வாங்கியது குறித்து ஆவேச கருத்துக்களை அள்ளி வீச, மீண்டும் அவரது கார் வாங்கல் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் விவாதமாகி வருகிறது.

இதையும் படியுங்க  "கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுடன் இணையும் சீமான்..! திரையரங்குகளை அதிரவைக்க வரும் 'சேயோன்'..!
Republic Tamil

அதாவது சீமான் பேசும்போது நடிகனுக்கும் தலைவனுக்கும் வித்தியாசம் தெரியாத கூட்டம். பிளாக்கில் டிக்கெட் விற்பவன் எங்களை திறள்நிதி கூட்டம் எனக் கூறலாமா? நான் என்ன கோவணம் கட்டிக் கொண்டிருக்க வேண்டுமா? கார் வாங்கக்கூடாதா? நாங்கள் இன்னும் களத்திற்கே வரவில்லை. வந்தால் நீங்கள் என்ன ஆவீர்கள்?” என்று ஆவேசமாகவும், ஆக்ரோஷமாகவும் கேட்டதோடு கார் வாங்கியது குறித்தும் கொந்தளித்தார்.

கட்சி நிதியில் ஒரு தேநீர் கூட அருந்த மாட்டோம் என கூறியவர் தனது மருமகனே பணம் கட்டி இந்த காரை வாங்கி கொடுத்ததாக கூறினார். நடிகனுக்கும் தலைவனுக்கும் வித்தியாசம் கொடுக்காத தருதல கூட்டமே கள்ளசந்தையில திரைப்படம் பார்க்கிற அனுமதித்து விற்ற அயோக்கிய பய எங்களை திறள்நிதி என்கிறார்கள். திருடங்க. அயோக்கிய பயல்க. நான்சென்ஸ். நாங்க வேணாம்னு வச்சிருக்கோம். அதெல்லாம் வேணாங்க எனக்கு இது போதும் அப்படின்னு அது என் மறுமைய ஒரு நாள் காரில் வந்து பெரிய வண்டியில வந்தா வந்துட்ட, திடீர்னு மாமா இவ்வளவு தூரம் பயணத்துல இது எப்படி எனக் கூறி, மாமாவுக்காக அவராகவே காச கட்டி வாங்கி நிறுத்திட்டு போனார்.

இதையும் படியுங்க  இனி திமுக, அதிமுக போல பாஜகவும் எதிரிதான்..! ரஜினி கொடுத்த சீக்ரெட் ஆஃபர் ஓபன்..! அண்ணாமலையின் அதிரடி யுத்தம்..!

70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த பென்ஸ் காரை வாங்கி வாங்கி கொடுத்த மருமகன் மந்திர புன்னகை பட தயாரிப்பாளரும், கல்லூரிகள் நடத்துபவருமான கார்த்திகேயன் என்று தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் சீமான் கார் வாங்கியது எப்படி என்பது குறித்தும் இன்னொரு பின்னணி தகவலும் வெளியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சியில்
இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் பயணிக்கும் ஜெகதீச பாண்டியன் YouTube-beல் பேசும்போது அம்பா சமுத்திரத்தில் சீமான் ஜெயிக்க மாட்டார். அங்கு தோற்று அரசியலில் இருந்து இன்னும் அவமானப்பட்டு போகப் போகிறார் என்று கூறியுள்ளார்.

”நாதக-வில் இருந்து பிரிந்து வந்தவர்கள் அத்தனை பேர் இருக்கிறோம். அவரை தோர்க்கடிப்போம். இவர் ஒருபோதும் வெல்ல முடியாது ஏனென்றால் அவருக்கு வெல்ல வேண்டும் என்கிற நோக்கமே கிடையாது. இதன் மூலமாக பணம் பார்க்க வேண்டும் என்கிற நோக்கம் தான் உள்ளது. அந்த கார் நான் வாங்கவில்லை. மருமகன் வாங்கி கொடுத்தார்” என கூறுகிறார் ஜெகதீச பாண்டியன்.

இதையும் படியுங்க  அ.தி.மு.க-வை உடைக்கும் த.வெ.க..? இபிஎஸ்-க்கு அடுத்த செக்..! சி.வி.சண்முகத்திற்கு டில்லி பதவி..!

கார்த்திக் என்பவர் 15 வருடங்களாக சீமானுடன் தொடர்பிலேயே இல்லை. எப்படி வாங்கி தர முடியும்? ஏனென்றால் அவருக்கு வருமானம் உள்ளது. கல்லூரி உள்ளது. அதனால் அவர் பெயரில் எடுத்துள்ளார்கள். மேலும் சீமான் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் இடத்தை வாங்கி இருக்கிறார்கள். யார் யார் கையெழுத்து போட்டது என்கிற பத்திரம்
முதற்கொண்டு ஆவணங்களை வைத்துள்ளோம் என ஆவேசமாக கூறியுள்ளார் ஜெகதீச பாண்டியன்.

இதேபோல மற்றொரு நெட்டிசனும் ”பின்ன எப்படி கார் வாங்குனீங்க? ஏன் இப்படி ஆணவத்துல ஆடுறீங்க” என கேள்வி எழுப்பி இருக்கிறார். ”இல்ல கார் வாங்கிட்டார்… கார் வாங்கிட்டார் என்கிறீர்கள். இன்னும் உங்க ஆத்தா அப்பன் தாலியை எடுத்து வித்தாடா வாங்கினோம்” எனக் கேட்கிறார் சீமான். அப்படியானால் வேர்வை சிந்தியா வாங்கினார்? இல்ல கட்டடம் கட்டுற பில்டிங்ல போய் வேர்வு சிந்தி வாங்குனியா? ஏற்கனவே இருந்த காரை விற்றிவிட்டு புதிய கார் வாங்கினோம் என்றார்கள். பிறகு மருமகன் வாங்கி கொடுத்ததாக கூறுகிறார்கள். இதில் எது உண்மை எனவும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago