Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழ்நாட்டில் 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றாக, “புனிதமான அரசியல்” மற்றும் “ஊழலற்ற நிர்வாகம்” என கத்தி கத்தி 2026-ல் ஆட்சியைப் பிடித்துள்ளார் தவெக தலைவர் சி. ஜோசப் விஜய். ஆனாலும், புதிய அரசு பொறுப்பேற்று சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், அதன் நம்பகத்தன்மை, ஊழல் எதிர்ப்பு நிலைப்பாடு குறித்து பல்வேறு விவாதங்களும் விமர்சனங்களும் எழத் தொடங்கியுள்ளன.

தமிழ்நாட்டிலுள்ள 12 சாராய ஆலைகளில் 11 ஆலைகள் திமுக அல்லது அவர்களின் ஆதரவாளர்களுக்குச் சொந்தமானவை என்ற சூழலில், தவெக தலைவருக்கு நெருக்கமான ‘ரூட்’ ஜெகதீஷ், திமுக தரப்பைச் சேர்ந்த ரதீஷ் ஆகியோர் பிரான்சில் ரகசியமாகச் சந்தித்ததாகக் கூறப்படும் தகவல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. SNJ, KSL போன்ற ஆலைகளிடம் இருந்து தொடர்ந்து மது பாட்டில்களை கொள்முதல் செய்ய அங்கு பேரம் பேசப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, தவெக-வின் ஊழல் எதிர்ப்பு முழக்கத்தின் மீதான நம்பகத்தன்மையை உலுக்குகிறது.

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தூய்மையான ஆட்சி தருவதாகக் கூறிவிட்டு, தவெக அமைச்சரவையில் உள்ள நிதி அமைச்சர் மாரிய வில்சன், சமூக நீதி அமைச்சர் வன்னியரசு, தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரகுமார் ஆகியோர் மீது பழைய ஊழல், நில மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க  இலை உதிர் காலம்.. கதறும் அதிமுக! திமுகவில் இணைந்த பெஞ்சமின்; அடுத்த விக்கெட் யார்?

தேர்தல் பிரச்சாரங்களின் போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘போதை தடுப்புப் பிரிவு’ போன்ற அதிரடித் திட்டங்கள், தற்போதைக்கு வெறும் அரசாங்க அறிவிப்புகளாகவும் விளம்பரங்களாகவும் மட்டுமே இருக்கின்றன என்ற விமர்சனம் பரவலாக வைக்கப்படுகிறது.

வெறும் பிரச்சார பாணி பேச்சுகளோடு நின்றுவிடாமல், தங்களுக்குக் கிடைத்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பைப் பயன்படுத்தி, தவெக அரசு எப்போது தனது உண்மையான நிர்வாகத் திறனையும் ஊழலற்ற வெளிப்படைத்தன்மையையும் களத்தில் நிரூபிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் கேள்வியும் தமிழக மக்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago