Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்று நாள் அரசுமுறைப் பயணத்தின் இறுதி நாளான ஜூன் 29, 2026 அன்று செஷல்ஸ் நாட்டின் விக்டோரியா நகரில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார்.

அங்கு திரண்டிருந்த தமிழ் மக்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரின் தவில், நாதஸ்வர இசை ஒலிக்கையில், பிரதமர் மனமுருகி வழிபாடு நடத்தினார்.

செஷல்ஸ் நாட்டின் மாஹே தீவில் அமைந்துள்ள இந்த நவசக்தி விநாயகர் ஆலயம், அந்நாட்டில் உள்ள ஒரே தமிழ் இந்து கோயிலாகும். 1992 ஆம் ஆண்டு அங்கு வாழும் தமிழ் மக்களால் கட்டப்பட்ட இந்த கோயில், இந்தியா–செஷல்ஸ் கலாச்சார உறவின் அடையாளமாகத் திகழ்கிறது.

சுமார் 100 அடி உயரமுள்ள வண்ணமயமான ராஜகோபுரத்துடன், தென்னிந்திய திராவிடக் கட்டடக்கலை பாணியில் இந்த ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆலயத்திற்கு வருகை தந்த பிரதமருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையும் படியுங்க  "இஸ்ரோ vs பிரைவேட் கம்பனி: கோடிகளுக்கு ஆசைப்பட்டு ஓடிய விஞ்ஞானிகள்? கதவை பூட்டிய மோடி அரசு!"

வழிபாட்டிற்குப் பிறகு பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், “கணேசர் அனைவருக்கும் ஞானம், வலிமை, வளத்தை அருளட்டும்” என்று தமிழில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

தரிசனத்தை முடித்துப் புறப்பட்ட பிறகு, அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினரை நேரில் சந்தித்து அவர் கலந்துரையாடினார்.

செஷல்ஸ் நாட்டின் 50-ஆவது சுதந்திர தினப் பொன்விழா கொண்டாட்டத்தில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருதான “கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹோரிசோன்” வழங்கப்பட்டது.

மேலும், விக்டோரியாவில் உள்ள அமைதிப் பூங்காவில் மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி அவர் மரியாதை செலுத்தினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி பின்னர் டெல்லி திரும்பினார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago